கட்டணம்.. IPL 2023 போட்டிகளை பார்க்க உதவும் JioCinema ஆப்பிற்கு கட்டணம்.. வேலையை காட்டிய அம்பானி!
உலகிலேயே அதிக அளவில் பணம் புரளும் ஐபிஎல் (IPL) என்கிற ஒரு கிரிக்கெட் லீக்கை, ஜியோசினிமா (JioCinema) என்கிற இலவச ஆப் வழியாக முற்றிலும் இலவசமாக லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) செய்வது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்று.. எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா?
நீங்களே இதை யோசிக்கும் போது.. வியாபார தந்திரங்களிலேயே ஊறிப்போன முகேஷ் அம்பானி (Mukesh Ambani) இதை பற்றி யோசிக்காமல் இருப்பாரா? கண்டிப்பாக யோசித்து இருப்பார். முதலில் ஒரு குறிப்பிட்ட சேவையை (ஜியோ 4ஜி) இலவசமாக கொடுப்பதும் பின்னர் அதை நமக்கு பழக்கப்படுத்திவிட்டு.. அதன் பிறகு நம்மிடம் கட்டணம் வசூலிப்பதும் ரிலையன்ஸ் ஜியோவிற்கு என்ன புதிதா?

அதே தான் ஜியோசினிமா ஆப்பிலும் நடக்க போகிறது. ரிலையன்ஸ்க்கு சொந்தமான ஜியோசினிமா ஆப் ஆனது இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) முடிந்த பிறகு அதாவது ஐபிஎல் 2023 (IPL 2023) போட்டிகள் முடிந்த பிறகு அதிலுள்ள கன்டென்ட்டிற்கு கட்டணம் வசூலிக்க தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஜியோசினிமா தளமானது, நெட்பிளிக்ஸ் (Netflix) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) போன்ற உலகளாவிய பெருநிறுவனங்களுடன் போட்டிபோடும் முனைப்பின் கீழ், 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் டிவி சீரிஸ்களை தன் தளத்திற்கு கொண்டுவர உள்ளது. அந்த நேரத்தில் ஜியோசினிமா ஆப் ஒரு பெயிட் சர்வீஸ் (Paid Service) ஆக இருக்கும்.
ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டி ஒன்றில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீடியா அண்ட் கன்டென்ட் பிஸ்னஸ் ப்ரெஸிடெண்ட் ஆன ஜோதி தேஷ்பாண்டே, ஜியோசினிமாவின் விரிவாக்கமானது அதிலுள்ள கன்டென்ட்டிற்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து தொடங்கும். இருப்பினும் சரியான விலை நிர்ணயம் (JioCinema Subscription Price) இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றுகூறியுள்ளார்.
மேலும் அவர், வருகிற மே 28 ஆம் தேதி ஐபிஎல் முடிவதற்குள் ஜியோசினிமா ஆப்பில் புதிய கன்டென்ட்கள் சேர்க்கப்படும். மேலும் ஜியோசினிமா பயனர்கள் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதை உறுதி செய்யும் வண்ணம், ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் மொபைல் பயனர்கள் அனைவருக்கும் ஐபிஎல் தொடர்ந்து இலவசமாக அணுக கிடைக்குமென்று ஜியோசினிமா ட்வீட் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications