Home
News

TRAI க்கு பயந்து Jio செய்த மாற்றங்கள்.. Jio-வின் 3 வேல்யூ பிளான்கள்.. ஆல்-செட் செய்த அம்பானி!

டிராய் (TRAI) உத்தரவின் கீழ், டேட்டா நன்மை எதுவும் இல்லாத, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை (Voice and SMS Only) மட்டுமே வழங்கும் திட்டங்களை முதலில் அறிமுகம் செய்திருந்தது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தான். அதேபோல இந்த திட்டங்களில் மற்றும் இந்த திட்டங்களால் அதிக மாற்றங்கள் செய்ததும் ஜியோ தான்!

2 புதிய வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை (ரூ.479 மற்றும் ரூ.1899) அறிமுகம் செய்த வேகத்தில் அதன் விலைகளை முறையே ரூ.448 ஆக மற்றும் ரூ.1748 ஆக திருத்தியது. பின்னர் திருத்தப்பட்ட ரூ.448-ன் விலையுடன் வெவொரு ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ஒற்றுப்போவதால், அந்த திட்டத்தின் விலையை ரூ.445 ஆக குறைத்து. இதற்கிடையில் நீக்கப்பட்ட ரூ.189 திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தது.

Jio-வின் 3 வேல்யூ பிளான்கள்.. ஆல்-செட் செய்த அம்பானி!

இப்படியான பல மாற்றங்களுக்கு பின்னர் ஒருவழியாக ஜியோ நிறுவனமானது அதன் வேல்யூ பிளான்கள் பிரிவை ஆல்-செட் செய்துள்ளது. அதாவது செய்ய வேண்டிய மாற்றங்களை எல்லாம் செய்துவிட்டது. ஆக இப்போது ஜியோவின் வேல்யூ பிளான்கள் பிரிவில் 3 திட்டங்கள் உள்ளன: ரூ.189, ரூ.448 மற்றும் ரூ.1748. இந்த திட்டங்களின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.189 ப்ரீபெய்ட் திட்டம்: ரூ.189 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதன் கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை இது மொத்தம் 2ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது ஜியோடிவி (JioTV), பிரீமியம் சந்தா இல்லாத ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud) ஆகியவற்றிற்கான இலவச அணுகலும் கிடைக்கும்.

ஜியோ ரூ.448 வாய்ஸ்-ஒன்லி பிளானின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ரூ.448-ன் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல்களை வழங்கும்

ஜியோ ரூ.1748 வாய்ஸ்-ஒன்லி பிளானின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ரூ.178-ன் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல்களை வழங்கும்

நினைவூட்டும் வண்ணம் இப்போது ஜியோசினிமா ஆப் ஆனது பிரீமியம் கன்டென்ட் சந்தாவிற்காக பயனர்களை ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்திற்கு திருப்பிவிடும். ஜியோசினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவை ஒன்றிணைந்து ஜியோஹாட்ஸ்டாராக மாறியுள்ளன. மேலும் இந்த இரண்டு தளங்களின் ஒருங்கிணைந்த கன்டென்ட்கள் உடன் ஜியோஹாட்ஸ்டார் இயங்குதளம் நேரலையில் உள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டார் சேவையின் கீழ் மொத்தம் 3 வகையான சந்தா திட்டங்கள் உள்ளன: மொபைல் பிளான், சூப்பர் பிளான் மற்றும் ப்ரீமியம் பிளான். மொபைல் பிளான் ஆனது 2 வகையான சந்தா விருப்பங்களுடன் வருகிறது. 3 மாதங்களுக்கு ரூ.149 மற்றும் 1 ஆண்டுக்கு ரூ.499.

ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: இதுவும் விளம்பர ஆதரவுடன் வரும் திட்டம் தான். ஆனால் இது ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுக்கான லாக்-இன்களை அனுமதிக்கும். மேலும் ஃபுல்எச்டி (1080பி) ரெசல்யூஷனில் கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கிறது மற்றும் இது டால்பி அட்மோஸ் ஆதரவுடன் வருகிறது. விலை மூன்று மாதங்களுக்கு - ரூ.299 மற்றும் 12 மாதங்களுக்கு - ரூ.899.

ஜியோஹாட்ஸ்டார் ப்ரீமியம் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: இது விளம்பரங்கள் இல்லாத திட்டமாகும். இது ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களுக்கான லாக்-இன்களை அனுமதிக்கும். மேலும் 4கே ரெசல்யூஷனில் கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். ஆனால் விளையாட்டு மற்றும் பிற லைவ் நிகழ்வுகலில் சில விளம்பரங்கள் இருக்கும் என்று ஜியோஸ்டார் நிறுவனம் கூறுகிறது. விலை 1 மாதத்திற்கு ரூ.299, 3 மாதங்களுக்கு - ரூ.499 மற்றும் 12 மாதங்களுக்கு - ரூ.1499.

Best Mobiles in India

English summary
After Changes Jio Set Its Value Plans Section Offer 3 Plans Rs 189 Rs 448 Rs 1748
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X