தடைகளை தாண்டி ஹெச்டி தரத்தில் வந்துள்ள ஆபாச வலைதளங்கள்.!
இதன் பிறகு இந்தியாவில் 827 ஆபாச வலைதளங்கள் இணைய சேவை வழங்கும் நிறுவனம் தடை செய்துள்ள நிலையில், தற்போது ஹெச்டி தரத்தில் துள்ளியமான காட்சிகளோடும் ஆபாச வலைதளங்கள் அனைத்து இணைய சேவை நிறுவனங்களிலும் உலா வ
உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் 827 ஆபாச வலைதளங்களை தடை செய்யுமாறு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசும் இதை அமல்படுத்துமாறு உத்தரவிட்டது.
பிறகு இந்தியாவில் 827 ஆபாசதளங்கள் தடை செய்ய மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது.
இதன் பிறகு இந்தியாவில் 827 ஆபாச வலைதளங்கள் இணைய சேவை வழங்கும் நிறுவனம் தடை செய்துள்ள நிலையில், தற்போது ஹெச்டி தரத்தில் துல்லியமான காட்சிகளோடும் ஆபாச வலைதளங்கள் அனைத்து இணைய சேவை நிறுவனங்களிலும் உலா வருகின்றன.
இந்ததடை உத்தரவு தரம் குறைந்த வலைதளங்களுக்குத்தான் என்று பொது மக்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கிண்டல் அடிக்கின்றனர்.

ஆய்வில் அதிர்ச்சி:
உலகளவில் இந்தியாவில் மட்டும் தான் ஆபாச வலைதளங்கள் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கின்றது என்று தெரியவந்தது. ஆபாச வலைதளங்களை 18 வயதுக்கு கீழ் உள்ள ஆண், பெண் என இரு பாலரும் அதிகமாக பார்த்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அவர்களுக்கு இது குறித்து போதிய விழிப்புணர்வும் இல்லை. வீடுகளில் குழந்தைகளை தனியாக விட்டு விட்டு செல்லும் பெற்றோர்கள் இதுகுறித்து புகார்கள் தெரிவித்து வந்தனர்.

ஜியோ வருகை:
இந்தியாவில் ஜியோ வருகைக்கு பிறகும் ஏராளமான சலுகையும் அறிவித்தது. இதில் ஓரு நாளைக்கு 2 ஜிபி என்றும் அறிவித்தது. ஜியோவுக்கு போட்டியாக மற்ற வோடபோன், ஐடியா, ஏர்டெல், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் தற்போது இந்த டேட்டா சேவையை வழங்கி வருகின்றனர்.
இதனால் ஏராளமானோர்களும் இந்தியாவில் ஆபாச வலைதளங்களை தடை இல்லாமல், அதையே எந்நேரமும் பார்த்ததால், இந்தியாவின் ஆபாச வலைதளங்கள் பார்ப்போரின் நிலைமை அதிகரித்ததாக புள்ளி விரங்கள் தெரிவித்தன.

உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு:
கடந்த செப்டம்பர் 27ம் தேதி உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற்ம் 850 ஆபாச வலைதளங்களை தடை செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்றுக் கொண்ட மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
இதில் 30 இணைதயத்தில் ஆபாச தகவல்கள் இல்லாததை தொடர்ந்து 827 ஆபாச இணைதளத்தை தடை செய்ய மத்திய தகவல் தொடர்பு துறைக்கு உத்தரவிட்டது.

Meity ன் வழிமுறைப்படி தடை:
தகவல் தொலைத் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது உத்தரகாண்ட் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றும் வகையில், Meityயின் வழிமுறைகளின்படி 827 ஆபாச வலைதளங்கள் நேற்று தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது, ஏராளமான ஆபாச வலைதளங்கள் ஹெச்டி தரத்துடன் அனைத்து நெட்வொர்க் இன்டர் நெட் வழங்குவோர்களின் இணையதளத்திலும் வருகின்றது.
இதனால் பெற்றோர்கள் பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இது தரம் குறைந்த இணையத்திற்கு தான் தடையா கிண்டல் அடிக்கும் விதமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த ஆபாச காட்சிகள் முன்பை விட ஹெச்டி தரத்தில் வருவதால் அதன் மீது ஆர்வலம் உள்ள பிரியர்கள் ஒரு புறமும் குஷியாகியுள்ளனர்.

இந்த மேட்டர் தெரிஞ்சா.. இனி பார்ன் வெப்சைட்ஸ் பக்கமே போக மாட்டீங்க.!
ஒரு வரம்பு இல்லாத பட்சமான (வயது, நேரம்) மக்கள் ஆன்லைனில் ஆபாச படங்களை பார்க்கிறாரக்ள், ஆபாச வலைதள அணுகலை நிகழ்த்துகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
'கேஸூவல் வியூவர்ஸ்' எனப்படும் சாதாரண பார்வையாளர்கள் தொடங்கி மிக எளிதாக ஆபாசத்திற்கு அடிமையாகி விட்டோம் என்றும் கருதும் மக்கள் வரை ஒவ்வொரு ஆன்லைன் பார்ன் பார்வையாளர்களையும் நம்மால் வகைப்படுத்த முடியும். அப்படியாக வகைப்படுத்தப்பட, ஒரு பொதுவான மூன்று பிரிவுகளில் ஆன்லைன் பார்ன் பார்வையாளர்களை பிரிக்கலாம்.
அது என்னென்ன வகை.? குறிப்பாக மூன்றாவது வகையினருக்கு என்ன சிக்கல்கள் மற்றும் ஆபத்துகள் காத்திருக்ககின்றன என்பதை பற்றிய தொகுப்பே இது.!

ஆன்லைன் பார்ன்
குடிபோதைக்கு அடிமை என்பதை குறிப்பிட்ட நபர் ஒரு சோசியல் ட்ரின்க்கரா.? பின்ஞ் (அதிகப்படியான) ட்ரின்க்கரா.? அல்லது குடிக்கும் அளவை பொறுத்த ட்ரன்க்கரா.? என்பதை பொறுத்தே அவர் எந்த அளவிற்கு குடிபோதை மிக்கவர் என்பதை விவரிக்க முடியும் அதே போலத்தான் ஆன்லைன் பார்ன் என்பதும்..

முதல் வகை
ரிக்ரியேஷனல் வியூவர்ஸ் அதாவது பொழுதுபோக்கு பார்வையாளர்கள். இவ்வகையினர் எப்போதாவது ஆன்லைன் பார்ன் அணுகுவார்கள். அங்கு கொஞ்ச இங்கும் கொஞ்சம் என ஒரு வாரத்திற்கு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஆன்லைன் பாப்கார்ன் வலைத்தளங்களில் இவ்வகை பிரிவினர் நேரம் கழிப்பர்.

மென்காம ஆன்லைன் பார்ன்
பெரும்பாலும் இவ்வகை மக்கள் பாலியல் தூண்டுதல் மற்றும் பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் பார்ன் அணுகுவர், இதனால் இவர்கள் தங்களது சமூக காதல் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையும் சந்திக்க மாட்டார்கள். ஆராய்ச்சிகளானது, இவ்வகை மக்கள் மென்காம ஆன்லைன் பார்ன் அணுகலில் ஈடுபட - மனித உடலில் சார்ந்த அறிவு மற்றும் தங்களின் இணை உடலின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி தான் மிக முக்கியமான காரணம் என்கிறது.

பாலியல் பொருளாகவே பார்க்கும் மனநிலை
பொழுதுபோக்கு பார்வையாளர் என்றாலும் கூட இவர்களும் பிற மக்களை ஒரு பாலியல் பொருளாகவே பார்க்கும் மனநிலையை விரைவில் பெறலாம் மற்றும் மிக எளிதாக முழுமையான ஆன்லைன் பார்ன் அடிமையாகலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் வகை
செக்ஸ்யூவலி கம்பள்ஸிவ் வியூவர்ஸ் எனப்படும் கட்டாயமான பாலியல் பார்வையாளர்கள் என்ற வகையை சேர்ந்த ஆன்லைன் பார்ன் பார்வையாளர்கள் பொதுவாக பல ஆண்டுகளாக ஆபாச வலைதள அணுகலை கொண்டு இருப்பர் மற்றும் அவர்கள் ஆரம்பத்தில் பார்த்த ஆபாசப் படங்களும் இப்போது பார்க்கும் படங்களுக்கும் பெரிய அளவிலான வித்தியாசம் இருக்கும்.

மனக்குழப்பம் என்றால்
விருப்பப்படியான தேர்வுகளில் ஆபாச வலைத்தள அணுகலை நிகழ்த்தும் இவ்வகையினர் தங்களுடைய பிரச்சினைகளை சமாளிக்க ஆபாச படங்களை ஒரு வழியாக பயன்படுத்தும் மனநிலை கொண்டிருப்பர். எடுத்துக்காட்டுக்கு எதாவது சிக்கல், மனக்குழப்பம் என்றால் அதிலிருந்து தன்னைத்தானே விடுவிக்க பாப்கார்ன் அணுகலை நிகழ்த்துவர்.

சுய மருத்துவத்திற்கான ஒரு வழி
இவர்கள் சந்தோஷமாக அல்லது வருத்தமாக, கோபமாக அல்லது வெறுனே வெறுப்பாக இருந்தாலும் கூட அதிலிருந்து தப்பிக்கும் ஒரு முயற்சியாக ஒரு சுய மருத்துவத்திற்கான ஒரு வழியாக கட்டாய ஆன்லைன் ஆபாச அணுகலை நிகழ்த்துவர். இந்த இணைய ஆபாச அணுகல்கள் நிஜ வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை கையாள்வதற்கு பதிலாக தவிர்க்க ஒரு வசதியான மலிவான வழியை வழங்குவதால் இவர்களும் விரைவில் ஆன்லைன் பார்ன் அடிமையாகிட வாய்ப்பு அதிகம்.

மூன்றாம் வகை
அட் ரிஸ்க் பார்ன் வியூவர்ஸ் எனப்படும் ஆபத்தான நிலையில் இருக்கும் ஆபாச பார்வையாளர்கள் என்ற வகையினர் வாடிக்கையாக தொடர்ந்து ஆபாச பார்க்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர். செக்ஸ்யூவலி கம்பள்ஸிவ் வியூவர்ஸ் எனப்படும் கட்டாயமான பாலியல் பார்வையாளர்கள் போன்று இவர்கள் அலைக்கழிக்கும் போதெல்லாம் ஆன்லைன் பார்ன் அணுகல் நிகழ்த்தாவிட்டாலும் கூட ஒரு வலுவானஆன்லைன் பார்ன் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர்.

தனிமையான அல்லது மன அழுத்தத்துடனே
இவ்வகை பிரிவினர் பெரும்பாலும் பல முறை இதை நிறுத்த முயற்சித்து தோற்றுபோனவராய் இருப்பர். முன்பை விட அதிக அளவிலான ஆன்லைன் பார்ன் உள்ளடக்கம் கிடைக்கும் இந்த காலக்கட்டத்தில் ஐந்து போதையை நிறுத்திக் கொள்வது என்பது பெரிய போராட்டமாக உணரும் இந்த வகையினர் தனிமையான அல்லது மன அழுத்தத்துடனே இருப்பர்.

பழக்கத்தை நிறுத்துகொள்ள முடியாமல்
ஆன்லைன் பார்ன் என்பது தங்களது வாழ்க்கை திறனில் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறதயே என்பதை இந்த வகையினர் நன்கு அறிந்திருப்பர், ஆனாலும் கூட இந்த பழக்கத்தை நிறுத்துகொள்ள முடியாமல் திணறுவர். இதற்கு காரணமாக அவர்களுடைய இணையுடன் மகிழ்ச்சியாக இல்லை அல்லது உண்மையான உடலுறவு மூலமாக திருப்தி அடைவில்லை என பல காரணங்களை தொகுக்கலாம். சரி இதிலுருந்து விடுபட மேலோட்டமான யோசனைகள் உண்டா என்று கேட்டால், ஆம் உண்டு.!


Click it and Unblock the Notifications