நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார் டா.. Apple iOS 26 அறிமுகமான வேகத்தில் Android 16 ரிலீஸ்.. Google அதிரடி!
ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது டபுள்யூ டபுள்யூடிசி 2025 (WWDC 2025) நிகழ்வில் அதன் ஐஓஎஸ் 16 (iOS 26) அப்டேட்டை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, கூகுள் (Google) நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு 16 பைனல் வெர்ஷன் (Android 16 final version) ஆனது இன்று (அதாவது ஜூன் 10 ஆம் தேதி) வெளியிடப்படும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது!
கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு டெவலப்பர் அக்கவுண்ட் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் அதன் ஐஓஎஸ் 26 வழியாக கொண்டுவந்துள்ள பெரிய மாற்றங்களுடன் ஒப்பிடும்போது கூகுளின் அடுத்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆனது சற்றே மிதமானதாக தோன்றினாலும்.. ஆண்ட்ராய்டு 16 ஆனது ஆண்ட்ராய்டு 16 க்யூபிஆர்1 (Android16 QPR1) உடன் வரும் ஒரு பெரிய அப்டேட் ஆக பார்க்கப்படுகிறது.

மேலும் இது மிகவும் எதிர்பார்க்கப்[படும் மெட்டீரியல் 3 எக்ஸ்பிரெஸிவ் (Material 3 Expressive) வடிவமைப்பை கொண்டுவரும். இருப்பினும் ஆண்ட்ராய்டு 16 வெளியீட்டின் முதல் பதிப்பில், மெட்டீரியல் 3 எக்ஸ்பிரெஸிவ் வடிவமைப்பு ஆனது முழுமையாக சேர்க்கப்படாது என்பதை கூகுள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த மறுவடிவமைப்பு சில மாதங்களில் எதிர்பார்க்கப்படும் வரவிருக்கும் க்யூபிஆர்1 (காலாண்டு இயங்குதள வெளியீடு 1) க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் இன்டர்பேஸ் முழுவதும் காட்சிகளை மேம்படுத்தும், இதில் குவிக் செட்டிங்ஸ், செட்டிங்ஸ் மெனுக்கள் மற்றும் நோட்டிபிகேஷன் ஷேட்ஸ் ஆகியவைகளும் அடங்கும்.
ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டில் வேறு என்னென்ன முக்கிய மேம்பாடுகளை, புதிய அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஆண்ட்ராய்டு 16 அப்பேட்டின் முக்கிய அம்சமாக பில்ட்-இன் பேட்டரி ஹெல்த் மெட்ரிக் (Built-in battery health metric) ஆக இருக்கும். இந்த டூல், பயனர்கள் தங்கள் டிவைஸின் பேட்டரியின் நிலை மற்றும் திறனை சரிபார்க்க உதவும். மேலும் இது சிதைவை முன்கூட்டியே கண்டறியும் திறனையும் கொண்டிருக்கும்.
மேலும் ஆண்ட்ராய்டு 16 ஆனது தனிப்பட்ட ஆப்களுக்கான லைவ் ஆக்டிவிட்டீஸ்களுடன் (Live Activities for individual apps) வரும். இது ஸ்மார்ட்போனின் இன்டர்பேஸில் நேரடியாக நிலையான, நிகழ்நேர அப்டேட்களை வழங்கும். டெலிவரிகளை கண்காணித்தல், ரைட்-ஷேரிங் அல்லது ம்யூசிக் பேக்கிரவுண்ட் போன்ற ஆன்கோயிங் செயல்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
ஆண்ட்ராய்டு 16 இல் உள்ள மற்றொரு புதிய அம்சம் - கூகுள் வாலட்டிற்கான குவிக் அக்சஸ் கண்ட்ரோல் (Quick-access control feature for Google Wallet) அம்சமாகும். குவிக் செட்டிங்ஸ்-ல் புதுப்பிக்கப்பட்ட வாலட் டைல் மூலம், பயனர்கள் விரைவில் கட்டண அட்டைகள், போர்டிங் பாஸ்கள், போக்குவரத்து டிக்கெட்டுகள் போன்றவற்றை எளிதாக அணுக முடியும்; மேலும் இவை அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கும்.
இதோடு சேர்த்து ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டில் சிறிய அளவிலான சில மேம்பாடுகள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இன்டர்பேஸ் சிஸ்டம்-ஐ நெறிப்படுத்துதல், நோட்டிபிகேஷன் ஹேண்டிலிங்-ஐ மேம்படுத்துதல், தெளிவான பதிலளிக்கும் தன்மையை மேம்படுத்த நுட்பமான விஷூவல் சரிபார்ப்புகள் ஆகியவைகள் அடங்கும்.
ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டிற்க்காக கூகுள் நிறுவனம் இரண்டு-நிலை உத்தியைப் பின்பற்றுவதாக நம்பப்படுகிறது. இது டெவலப்பர்கள் மற்றும் பயனர்கள் (மெட்டீரியல் 3 எக்ஸ்பிரசிவ் அம்சங்களில் மூழ்குவதற்கு முன்பு) ஆண்ட்ராய்டு 16 இல் ஆரம்ப மாற்றங்களுக்கு பழக அனுமதிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
அதாவது கூகுள் நிறுவனம் முக்கிய செயல்பாட்டு அப்டேட்களை வடிவமைப்பு மேம்படுத்தல்களிலிருந்து பிரிக்க விரும்புவது போல் தெரிகிறது. பப்ளிக் பீட்டா புரோகிராம் மற்றும் டெவலப்பர் ப்ரீவியூக்களுக்கு இந்த இடத்தில் நன்றி கூறியே ஆக வேண்டும் - ஆண்ட்ராய்டு 16 ஆனது ஏற்கனவே ஆர்வமுள்ள பயனர்கள் மற்றும் டெவலப்பர்களிடையே நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இது வெளியிடப்பட்டதும், அது முதலில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களை வந்து அடையும், அதை தொடர்ந்து மற்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடமிருந்து தகுதியான ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் அனுப்பி வைக்கப்படும். இந்த ரிலீஸ் - நமக்கெல்லாம் மிகவும் பழக்கமான ரோல்அவுட் முறைகளை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஓடிஏ (OTA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒவர்-தி-ஏர் அப்டேட் ஆக வரும்; ஒரே நேரத்தில் இல்லாமல் படிப்படியாக வெளியிடப்படும்!


Click it and Unblock the Notifications








