3ஜி சேவையின் கட்டணத்தை குறைக்கும் வோடாபோன்!

By Super
|
3ஜி சேவையின் கட்டணத்தை குறைக்கும் வோடாபோன்!

மும்பையில் 3ஜி சேவையின் கட்டணத்தை குறைத்துள்ளது வோடாபோன் நிறுவனம். வோடாபோன் நிறுவனம் தனது 3ஜி சேவையின் கட்டணத்தை குறைத்துள்ளது.

இந்த விலை குறைப்பு வசதியை ரூ.20-தில் இருந்து ஆரம்பிக்கின்றது. ப்ரீ-பெய்டு வாடிக்கையளர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வசதிகளை பயன்படுத்தலாம்.

ரூ.20 கட்டணத்தில் 25 எம்பி வரை 3ஜி சேவையை ஒரு நாள் முழுக்க பயன்படுத்த முடியும். 3ஜி சேவை ஒரு நாள் மட்டும் தேவை என்று நினைப்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வசதியை ரூ.44 கட்டணத்தில் 150 எம்பி வரை, 7 நாட்கள் உபயோகப்படுத்த முடியும்.

ரூ-102 செலுத்தினால் 300 எம்பி வரை கொண்ட 3ஜி சேவையை, 30 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். இதே 30 நாட்களுக்கு அதிகமான எம்பி தேவை என்று கருதுபவர்களுக்கும் ஓர் வசதி உள்ளது. 500 எம்பி வரை 3ஜி சேவையை ரூ.202 கட்டணத்திலும், 1 ஜிபி வரை 3ஜி சேவையை ரூ.251 கட்டணத்திலும் 30 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

இது மட்டும் அல்லாமல் ரூ-1501 பணம் செலுத்தினால் 10 ஜிபி வரையிலும், ரூ.451 கட்டணத்தில் 2 ஜிபி வரையிலும் கூட 30 நாட்களுக்கு பயண்படுத்தலாம்.

கட்டணம் குறைக்கப்பட்ட இந்த வோடாபோனின் 3ஜி சேவையை மும்பையில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் இந்த விலை குறைப்பு பற்றி வோடாபோன் நிறுவனம் இன்னும் அதிகார பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X