Jio, Airtel, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?

|

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மலிவு விiலியில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் சமீபத்தில் தான் ஏர்டெல் நிறுவனம் ஒரு திட்டத்தின் விலையை உயர்த்தியது.

விரைவில் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைளை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வழங்கும் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் அவற்றின் நன்மைகளை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா வழங்கும் மலிவு விலை திட்டங்கள்.!

ஜியோ ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் 300 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளது. இதுதவிர ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான இலவச சந்தாவும் இந்த திட்டம் வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.155 திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 1ஜிபி டேட்டா நன்மையை மட்டுமே வழங்கும். பினபு இந்த திட்டத்தில் 300 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக ஏர்டெல் ரூ.155 திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். மேலும் ஹலோ ட்யூன்ஸ் மற்றும் Wynk-ற்கான இலவச சந்தா உள்ளிட்ட கூடுதல் நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.155 திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.129 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 129 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது.பின்பு இந்த திட்டம் மொத்தமாக 200எம்பி டேட்டா நன்மையை வழங்குகிறது.ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை. குறிப்பாக இந்த வோடபோன் ஐடியா ரூ.129 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும்.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா வழங்கும் மலிவு விலை திட்டங்கள்.!

எது அதிக நன்மைகளை வழங்குகிறது?

ஜியோ நிறுவனம் ரூ.119 திட்டத்தை 14 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.8.5 செலவாகும். அடுத்து
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.155 திட்டம் ஆனது 24 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த ஏர்டெல் திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.6.4 செலவாகிறது. வோடபோன் ஐடியாவின் ரூ.129 திட்டம் 18 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. வோடபோன் திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.7.1 செலவாகிறது.

செலவுகளை வைத்து பார்க்கும் போது ஏர்டெல் மலிவான ப்ரீபெய்ட் திட்டமாக இருக்கிறது. ஆனாலும் ஜியோ நிறுவனம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் சிறந்த டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இவற்றில் ஜியோ நிறுவனத்தின் ரூ.119 திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. மேலும் இப்போது ஜியோ நிறுவனத்தின் சில அசத்தலான திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜியோ டிவி, ஜியோசினிமா,ஜியோ செக்யுரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்டவைகளுக்கான அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா வழங்கும் மலிவு விலை திட்டங்கள்.!

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் உள்ளிட்டவைகளுக்கான அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்.

Best Mobiles in India

English summary
Affordable plans from Jio, Airtel, Vodafone Idea: Which company offers more benefits?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X