Home
News

அள்ளி கொடுக்கும் BSNL.. கம்மி பட்ஜெட்ல 84 நாள் வேலிடிட்டி.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்..

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அள்ளி கொடுக்கும் BSNL.. கம்மி பட்ஜெட்ல 84 நாள் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 299 Prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்கும். 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில்அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

மேலும் சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவன கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் (Union Minister Pemmasani Chandra Sekhar) அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பல முக்கிய கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்குப் பதில் அளித்த அவர், பிஎஸ்என்எல் தற்போதைக்கு 4ஜி சேவை விரிவாக்கம் செய்து வருகிறது, கட்டணங்களை உயர்த்தும் திட்டத்தை தற்போது இல்லை என கூறியுள்ளார்.

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை (BSNL 4G) விரிவாக்கம் செய்து வருகிறது. அதேசமயம் சில முக்கிய நகரங்களில் 5ஜி சோதனை செய்து வருகிறது. எனவே இந்த ஆண்டு இறுதியில் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையையும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அள்ளி கொடுக்கும் BSNL.. கம்மி பட்ஜெட்ல 84 நாள் வேலிடிட்டி..

அதேபோல் அமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் அவர்களிடம் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் வருகை பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்குப் போட்டியாக அமையுமா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதில் பதில் அளித்த அவர் இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் 20 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இணைப்புகளை வழங்க முடியும் எனக் கூறினார். அதுவும் ஸ்டார்லிங்க் நிறுவனம் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் (200 Mbps speed) மட்டுமே இணையச் சேவை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.

எனவே இதனால் அரசு நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Affordable BSNL prepaid plans offer 3GB data per day and unlimited benefits: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X