Home
News

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா.. குறைந்த விலையில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள்..

ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்த மூன்று டெலிகாம் நிறுவனங்களும் குறைந்த விலையில் தினமும் 2ஜிபி டேட்டா தரும் திட்டங்களை வைத்துள்ளன.

குறிப்பாக இதுபோன்ற குறைந்த விலையில் தினமும் 2ஜிபி டேட்டா தரும் திட்டங்களைத் தான் அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்றனர். அதேபோல் இந்த 2ஜிபி டேட்டா தரும் திட்டங்கள் தான் அன்லிமிடெட் 5ஜி-ஐ வழங்குகிறது. ஆனால் வோடபோன் ஐடியா நிறுவனம் மட்டும் இன்னும் 5ஜி-ஐ வழங்கவில்லை. சரி இப்போது தினமும் 2ஜிபி டேட்டா தரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவின் திட்டங்களைப் பார்க்கலாம்.

Jio, Airtel, VI..தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள்!

ஜியோவின் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 198 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா நன்மை உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வழங்குகிறது ஜியோவின் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோகிளவுட் (JioCloud), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோடிவி (JioTV) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 379 Prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா வழங்கப்படும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். இதுதவிர பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இதில் உள்ளன.

Jio, Airtel, VI..தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள்!

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.365 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 365 prepaid plan)ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கிறது. பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls)சலுகை இதில் உள்ளது.

அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), பின்ஞ் ஆல் நைட் (Binge All Night), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) உள்ளிட்ட சலுகைகளும் இந்த அட்டகாசமான வோடபோன் ஐடியா ரூ.365 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Affordable 2GB daily data plans from Airtel, Vi and Jio: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X