தானா சேர்க்கும் கூட்டம்: சிபிஐ வேலை என்று இணையத்தில் வெளியாகும் விளம்பரங்கள்- சிபிஐ எச்சரிக்கை

|

ஆன்லைன் மோசடி என்பது பணம் திருடுவதில் மட்டுமல்ல வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றுவதிலும் வளர்ந்து வருகிறது. வெளிநாட்டில் வேலை சம்பளம் ரூ.50,000-க்கும் மேல் என்று கூறி பல்வேறு விளம்பரங்களும் ஆன்லைனில் வளம் வருவதை நாம் பார்த்திருப்போம்.

கனடா போன்ற அயல்நாட்டில் வேலை

கனடா போன்ற அயல்நாட்டில் வேலை

கனடா போன்ற அயல்நாட்டில் வேலை என்று ஆசை காட்டும் விளம்பரங்கள் காட்டப்படும். அதில் அப்ளை செய்தவுடன் வழக்கம்போல் நம்ப வைக்கும் விதமாக தங்களின் பாஸ்போர்ட் காப்பி, படிப்பு உள்ளிட்ட விவரச் சான்றிதழ்கள் கேட்கப்படுவார்கள். அதேபோல் தங்களின் வேலை விவரங்கள், சம்பள விவரங்கள் உள்ளிட்டவற்றை கூறி ஆசை காட்டுவார்கள். இந்த வார்த்தைகளின் போது பணத்தை பற்றியே பேசமாட்டார்கள்.

12,500, 25,000 முதல் 50,000 வரை கேட்பார்கள்

12,500, 25,000 முதல் 50,000 வரை கேட்பார்கள்

தங்களை முழுமையாக நம்ப வைத்த பிறகு பெரிய தொகை எல்லாம் கேட்கமாட்டார்கள்.12,500, 25,000 முதல் 50,000 வரை கேட்பார்கள், மீத தொகையை தங்கள் வேலைக்கு சேர்ந்த பிறகு மாத சம்பளத்தில் இருந்து வழங்குமாறு தெரிவிப்பார்கள்.

45% முதல் பணத்தை பிடித்துக் கொள்வார்கள்

45% முதல் பணத்தை பிடித்துக் கொள்வார்கள்

இந்த வேலையெல்லாம் முடிந்த பிறகு அவ்வப்போது தங்களை வெளிநாட்டின் பயணத்தை உறுதி செய்யும் விதமான படிவத்தை தங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பாவர்கள். பின் மாதக்கணக்கு ஆனவுடன் தாமதப்படுத்துவார்கள் நாமும் மனவிரக்தியில் தனக்கு வேலை வேண்டாம் பணத்தை கொடுங்கள் என்று தெரிவிப்போம். அதை சாதமாக பயன்படுத்தி அடுத்து போனை எடுக்காமல் தாமதித்து, தங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வது போல் குறிப்பிட்ட அதாவத 45% முதல் பணத்தை பிடித்துக் கொண்டு மீதத்தை கொடுப்பார்கள்.

சிபிஐ பணிக்கும் விளம்பரங்கள்

சிபிஐ பணிக்கும் விளம்பரங்கள்

இதுபோன்ற ஆன்லைன் அலுவலகங்கள் மும்பை, பஞ்சாப் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த செயல் வெளிநாட்டு வேலைக்கு மட்டுமின்றி அரசு வேலைக்கும் சிபிஐ பணிக்கும் விளம்பரங்கள் கொடுத்து ஏமாற்றப்படுகிறது.

ஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா?ஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா?

பயிற்சி திட்டம் நடத்தி வரும் சிபிஐ

பயிற்சி திட்டம் நடத்தி வரும் சிபிஐ

சட்டம், சைபர், தரவு பகுப்பாய்வு, குற்றவியல், மேலாண்மை, பொருளாதாரம், வணிகவியல், தடய அறிவியல் உள்ளிட்ட பாடங்களை புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் படித்த பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி திட்டம் ஒன்றை அறிவித்து சி.பி.ஐ. நடத்தி வருகிறது.

 உஷார்படுத்தி சி.பி.ஐ. சார்பில் ஒரு அறிக்கை

உஷார்படுத்தி சி.பி.ஐ. சார்பில் ஒரு அறிக்கை

இந்த நிலையில் சி.பி.ஐ. பயிற்சி அளித்து, வேலையும் தருவதாக இணையதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு மோசடி செய்து பணம் பெறப்படுவதாக சி.பி.ஐ.யின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மோசடியில் இருந்து, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உஷார்படுத்தி சி.பி.ஐ. சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Advertisements posted on the online that the CBI jobs: Be alert

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X