நல்ல நேரத்தில் நன்கு பயனளிக்கும் பேடிஎம்.!

Posted By: Staff

கையில் பணம் இல்லாதோருக்கு ஓரளவு ஆறுதலாக இருப்பது பேடிஎம் சேவை தான் எனலாம். இந்தியாவில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் பேடிஎம் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

மொபைல் ரீசார்ஜ் செய்யப் பெரும்பாலானோர் பயன்படுத்தும் சேவையாகப் பேடிஎம் இருக்கிறது. எனினும் ரீசார்ஜ் இல்லாமல் பல்வேறு இதர சேவைகளையும் பேடிஎம் வழங்குகிறது. சில கிளிக்'களைச் செய்து பல்வேறு பணிகளைச் செய்து கொள்ள முடியும்.

பிரீபெயிட் ரீசார்ஜ் தவிர பேடிஎம் வழங்கும் மற்ற சேவைகள் எவை என்பதை இங்குப் பார்ப்போமா.??

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிரத்தியேக வேலெட் சலுகைகள்

பிரத்தியேக வேலெட் சலுகைகள்

பேடிஎம் வேலெட் பல்வேறு கேஷ்பேக் சலுகைகள் மற்றும் இதர தள்ளுபடிகளையும் வழங்குகின்றது. இவை அதிகப்படியான பணத்தினைச் சேமிக்க வழி செய்கின்றன. பேடிஎம் பயன்படுத்தித் திரைப்படங்களுக்கு டிக்கெட் வாங்குவது, மற்ற டிக்கெட், உணவு அல்லது மற்ற பொருட்களைத் தள்ளுபடி விலையில் வாங்கிட முடியும்.

பேடிஎம் நியர்பை அம்சம்

பேடிஎம் நியர்பை அம்சம்

பேடிஎம் ஆப் இல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய நியர்பை அம்சம் மூலம் நீங்கள் இருக்கும் பகுதியில் உங்களுக்கு அருகில் இருக்கும் பேடிஎம் வர்த்தகர்கள் சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இதனால் அங்குச் சென்று உங்களுக்கு வேண்டிய பொருட்களைப் பேடிஎம் பயன்படுத்தி வாங்க முடியும்.

இந்த அம்சம் கையில் பணமில்லாத போது பயனுள்ளதாக இருக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஷாப்பிங்

ஷாப்பிங்

தள்ளுபடி கூப்பன்களை வழங்குவதோடு பயனர்களை ஸ்மார்ட் ஷாப்பர்களாகவும் பேடிஎம் மாற்றுகிறது. இதனால் பயனர்கள் ரீசார்ஜ் தவிர தங்களுக்கு வேண்டிய பொருட்களை எளிதாக ஷாப்பிங் செய்ய முடியும்.

30 விநாடிகள் போதும்

30 விநாடிகள் போதும்

மொபைல் ரீசார்ஜ் அல்லது ஷாப்பிங் பரிவர்த்தனையோ எல்லாவற்றையும் சுமார் 30 விநாடிகளில் பேடிஎம் செய்து முடிக்கும். மற்ற தளங்களில் சற்றே அதிக நேரம் காத்திருக்க வேண்டும்.

இலவச சேவை

இலவச சேவை

மற்ற ஆப்களைப் போல் இல்லாமல் பேடிஎம் சேவை முழுவதும் இலவசமாக வழங்கப்படுகின்றது. இதனால் எவ்வித சேவை கட்டணமோ அல்லது கூடுதல் கட்டணமோ செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Advantages of Using Paytm While Rs. 500, Rs. 1,000 Notes Aren't in Use
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot