அதிநவீன வசதியுடன் இயங்கும் அரசு பள்ளி: வியப்பில் தனியார் பள்ளிகள்.!

தமிழகத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

|

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையான் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் செய்தியாளர்களிடம் அவர்
கூறியது என்னவென்றால் தற்சமயம் நடுநிலைப் பள்ளிகளில் தொடங்களப்பட்டுள்ள எல்கேஜி யுகேஜி வகுப்புகளை, தொடக்கப் பள்ளியிலும் தொடங்க வேண்டும் என்றகோரிக்கை வந்துள்ளது.

பயோ மெட்ரிக் முறை

பயோ மெட்ரிக் முறை

மேலும் இதுகுறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 6 முதல் 8 வரை உள்ள பள்ளிகளுக்கும் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படும் என்று அவர் கே.ஏ செங்கோட்டையான் தெரிவித்தார்.

ஒரு அரசு பள்ளி

ஒரு அரசு பள்ளி

இந்நிலையில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் தனியார் பள்ளிகளைளே மிஞ்சும் அளிவிற்கு ஒரு அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது, அந்த பள்ளியின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம் வாங்க...

சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு தொடக்கப்பள்ளி

சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு தொடக்கப்பள்ளி

நாகர்கோவிலை அடுத்துள்ள இடலாக்குடியில் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது, இங்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 2வகுப்பறைகளில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

 ப்ரோஜக்டர், சிசிடிவி, கேமராக்கள்,

ப்ரோஜக்டர், சிசிடிவி, கேமராக்கள்,

பின்பு இந்த அரசுப் பள்ளியில் ப்ரோஜக்டர், சிசிடிவி, கேமராக்கள், ஆர்.ஓ குடிநீர் என பல்வேறு வசதிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 16வது நாளாக சூரியனில் மாற்றம்! பூமிக்கு ஆபத்தா?தொடர்ந்து 16வது நாளாக சூரியனில் மாற்றம்! பூமிக்கு ஆபத்தா?

கிராம மக்கள்

கிராம மக்கள்

குறிப்பாக நவீன வசதிகள் மட்டுமின்றி, தரமான முறையில் பாடம் கற்பிக்கப்படுவதால், அந்த பள்ளியின் சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

25 விழுக்காடு மாணவர்கள்

25 விழுக்காடு மாணவர்கள்

தமிழகத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்காக அரசு வழங்கும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழுவினர் நிர்ணயம் செய்யும் கட்டணத்தின் அடிப்படையிலேயே கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்திற்கான நிதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி விண்கலம்!செவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி விண்கலம்!

Best Mobiles in India

English summary
advanced-facilities-at-edalakudi-government-elementary-school : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X