Home
News

சூரியனின் 7 ரகசியங்களை கட்டவிழ்க்க போகும் ISRO.! சூரியனை தொட்டு ஆராய்ச்சியா? ஆதித்யா L1 மிஷன்!

மனிதன் நினைத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. கோடிக்கணக்கான மக்கள் பூமியில் கால்பதித்து நடந்துகொண்டிருந்த வேளையில், மனிதனின் முதல் காலடி நிலவில் பாதிக்கப்பட்டது. சாத்தியமற்ற தடைகளை தகர்த்தெறிவதே மனிதனின் உண்மையான சக்தியாகும். இப்போது மனிதனின் சக்தி சூரியனையும் (Sun) தொட்டுவிட்டது.

ஆம், சரியாக தான் படித்தீர்கள்.. மனிதனின் சக்தி சூரியனையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக, இந்தியர்களின் சக்தி சூரியனின் ரகசியங்களை (Secrets of sun) விரைவில் கட்டவிழ்க்க போகிறது. இந்தியர்களின் அசாத்தியமான முயற்சியினால், சூரியனின் பின்னணியில் உள்ள 7 ரகசியங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) ஆராய்ச்சியாளர்கள் கண்டறியப் போகிறார்கள்.

7 சூரிய ரகசியங்களை கட்டவிழ்க்க போகும் ISRO! சூரியனை தொட்டு ஆராய்ச்சி!

ISRO-வின் நீண்ட நாள் கனவு திட்டமான ஆதித்யா எல்1 (Aditya L1) பணியானது விரைவில் துவங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் அர்ப்பணிக்கப்பட்ட சூரிய ஆராய்ச்சி பயணம் இதுவாகும். இது சூரியனின் கொரோனா மற்றும் விண்வெளி வானிலையில் அதன் தாக்கத்தை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

'ஆதித்யா எல்1' என்பது 'சூரியன்' என்ற சமஸ்கிருத வார்த்தையின் பெயரால் அழைக்கப்படுகிறது. சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறப் பகுதியான சூரியனின் கரோனாவை கண்காணித்து, அதன் இயக்கவியல், கலவை மற்றும் காந்தப்புல மாறுபாடுகளைப் படிப்பதே இந்த மிஷனின் முக்கிய நோக்கமாகும். இத்துடன், கூடுதலாக சூரியன் பற்றிய மற்ற தகவல்களையும் கண்டறியும்.

ஆதித்யா எல்1 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (Satish Dhawan Space Centre in Sriharikota) இருந்து போலார் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள்-எக்ஸ்எல் (PSLV-XL) மூலம் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 800 கிமீ உயரத்தில் இருக்கும் லோ-எர்த் ஆர்பிட் என்ற குறைந்த புவி சுற்றுப்பாதையில் (LEO) இது ஏவப்படும்.

7 சூரிய ரகசியங்களை கட்டவிழ்க்க போகும் ISRO! சூரியனை தொட்டு ஆராய்ச்சி!

ஆதித்யா எல்1 மிஷனின் மொத்தமாக 7 பேலோடுகளை சூரியன் நோக்கி எடுத்து செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 1 பேலோட், விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC - Visible Emission Line Coronagraph) என்ற பேலோடை கொண்டிருக்கும். இந்த பேலோட் சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கான சூரியனின் கொரோனாவைப் படம்பிடிக்கும்.

2. சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT - Solar Ultraviolet Imaging Telescope) என்ற இந்த பேலோட், சூரியனின் குரோமோஸ்பியரை, சூரியனின் வளிமண்டலத்தின் அடுக்கை ஒளிக்கோளத்திற்கு சற்று மேலே படம் பிடிக்கும்.

3. ஆதித்யா சோலார் விண்ட் பார்டிக்கிள் எக்ஸ்பெரிமெண்ட் (ASPEX - Aditya Solar wind Particle Experiment) என்ற இந்த பேலோட், சூரியக் காற்றை அளவிடும், இது சூரியனிலிருந்து சார்ஜ் செய்யப்பட்ட துகள்களின் ஓட்டங்களை கண்காணிக்கும்.

7 சூரிய ரகசியங்களை கட்டவிழ்க்க போகும் ISRO! சூரியனை தொட்டு ஆராய்ச்சி!

4. பிளாஸ்மா அனலைசர் பேக்கேஜ் ஃபார் ஆதித்யா (PAPA - Plasma Analyser Package for Aditya) என்ற இந்த பேலோட் சூரியனைச் சுற்றியுள்ள இடத்தில் உள்ள பிளாஸ்மா அல்லது சார்ஜ் செய்யப்பட்ட வாயுவை அளவிடும்.

5. சோலார் லோ-எனர்ஜி எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (SoLEXS - Solar Low Energy X-ray Spectrometer) என்ற இந்த பேலோட் சூரியனில் இருந்து வெளிவரும் எக்ஸ்ரே உமிழ்வை அளவிடும்.

6. ஹை-எனர்ஜி L1 ஆர்பிட்டிங் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (HEL1OS - High-Energy L1 Orbiting X-ray Spectrometer) என்ற பேலோட் சூரியனில் இருந்து அதிக ஆற்றல் கொண்ட எக்ஸ்-கதிர் உமிழ்வை அளவிடும்.

7. மேக்னெட்டோமீட்டர் (Magnetometer) என்ற இந்த பேலோட், சூரியனின் காந்தப்புலத்தையும் அதைச் சுற்றியுள்ள இடத்தையும் அளவிடும்.

இந்த ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் 1,500 கிலோ (3,300 பவுண்டுகள்) எடை கொண்டது. இந்த பேலோடுகளின் தரவு சூரியனையும், பூமியில் அதன் விளைவுகளையும் நன்கு புரிந்துகொள்ள உதவும். இந்த அறிவு சூரிய புயல்கள் மற்றும் பிற விண்வெளி வானிலை நிகழ்வுகளை கணிக்க உதவும். இது நமது செயற்கைக்கோள்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aditya L1 Will Reveal Secrets Of Sun With 7 Payloads Says ISRO
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X