Home
News

இஸ்ரோவின் அடுத்த சாதனை.. ஆதித்யா எல்1 நிலை என்ன? சூரிய ஆராய்ச்சி என்ன ஆனது?

நடக்கும் வானிலை நிகழ்வுகளின் ஆரம்பம் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றி விஞ்ஞானிகளால் ஆராய்ச்சி செய்து கண்டறிய முடியும் என்றும் இஸ்ரோ மற்றும் பெங்களூரை சேர்ந்த தேசிய விண்வெளி நிறுவனம் (National Space Agency) தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நாசா (NASA), ஐரோப்பாவின் சோகோ (SOHO) மற்றும் சீனாவைத் தொடர்ந்து எல்1-ஐ அடையும் நான்காவது நாடாக இந்தியாவின் இஸ்ரோ சரித்திரம் படைத்துள்ளது. இந்த எல்1 விண்கலத்தின் முதன்மையான நோக்கமே சூரியனை ஒரு பெரிய வாயு பந்தாகக் கருதிக்கொண்டு அதனைச் சுற்றி இருக்கும் வளிமண்டலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதே ஆகும்.

இஸ்ரோவின் அடுத்த சாதனை.. ஆதித்யா எல்1 நிலை என்ன? சூரிய ஆராய்ச்சி என்ன?

பொதுவாகவே சூரிய வளிமண்டலத்தின் வெளிப்பகுதியை ஆராய்ச்சி செய்வதற்கு மிகவும் கடினமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா ஆதித்யா எல்1-ஐ சூரியனை நோக்கி விண்ணில் செலுத்தியதற்கான நோக்கம் நிறைவேறுமாயின் சந்திரயான்-3ல் சரித்திரம் படைத்தது போல ஆதித்யா எல்1-ம் விண்வெளி ஆராய்ச்சி சரித்திரத்தில் இடம் பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

நிலவை ஆராய்ச்சி செய்ய இந்திய ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ (ISRO) சந்திரயான்-3யை (Chandrayaan 3) வெற்றிகரமாகத் தரை இறக்கியதை தொடர்ந்து உலக நாடுகள் பார்வை அனைத்தும் இந்தியாவின் பக்கம் திரும்பியது. சந்திரயான் 3ன் அலை ஓய்வதற்கு முன்னரே சூரியனை பற்றி ஆராய்ச்சி செய்ய ஆதித்யா எல்1 (Aditya L1) விண்கலத்தை செப்டெம்பர் 2ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

சூரியனை ஆராய்ச்சி செய்ய இந்தியா அனுப்பிய முதல் செயற்கை கோளான இந்த ஆதித்யா எல்1 சுமார் 4 மாத பயணத்திற்குப் பின்னர்த் திட்டமிட்ட இடத்தை அடையும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக இப்போது ஆதித்யா விண்கலம் பூமியின் கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி லெக்ரான்ஞ் புள்ளி எல்1-ஐ (Lagrange point L1) நோக்கி தனது பயணத்தை இப்போது தொடங்கியுள்ளது.

ஆதித்யா எல்1 விண்கலம் சுமார் 9.2 லட்சம் கிலோமீட்டர் தொலைவை கடந்து தற்போது பூமி மற்றும் சூரியனுக்கு மத்தியில் இருக்கும் லெக்ரான்ஞ் எல்1 புள்ளியை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளதாகவும், செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியதற்கு அடுத்தபடியாக பூமியின் கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி விண்கலம் அனுப்பியது இது இரண்டாவது முறை என்றும் இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் செப்டெம்பர் 30ஆம் தேதி மாலை பகிர்ந்துள்ளது.

இஸ்ரோவின் அடுத்த சாதனை.. ஆதித்யா எல்1 நிலை என்ன? சூரிய ஆராய்ச்சி என்ன?

இன்னும் 110 நாட்கள் பயணத்திற்குப் பிறகு ஆதித்யா எல்1 விண்கலம் லெக்ரான்ஞ் புள்ளி எல் 1ஐ அடையும். ஆதித்யா எல்1 விண்கலமானது ஏழு பேலோடுகளை (Payload) சுமந்து கொண்டு சூரியனை நோக்கி பயணம் செய்கிறது. இவற்றில் நான்கு பேலோடுகள் சூரியனிலிருந்து வெளிவரும் ஒளியை ஆராய்ச்சி செய்யவும், மீதம் இருக்கும் மூன்றும் சூரியனில் இருக்கும் பிளாஸ்மா (Plasma) மற்றும் காந்த புலன்களை (Magnetic field) பற்றி ஆராய்ச்சி செய்யவும் பயன்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

110 நாட்கள் பயணத்திற்குப் பிறகு ஆதித்யா எல்1 லெக்ரான்ஜியன் புள்ளி எல்1-ஐ சுற்றி இருக்கும் ஹாலோ ஆர்பிட் (Halo orbit) என்னும் சுற்றுவட்ட பாதையில் சேர்க்கப்படும். பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஹாலோ சுற்றுவட்ட பாதையில் இருந்து சூரியனை பார்த்தபடியே ஆதித்யா எல்1 அதனைச் சுற்றி வட்டமிட்டு வரும்.

ஆதித்யா எல்1 சேகரித்து வரும் டேட்டாக்களின் (data) மூலம் பூமியை சுற்றி நிறைந்து இருக்கும் துகள்களின் செயல்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முடியும் என்றும், சூரிய புயல் (Solar wind) மற்றும் விண்வெளியில் நடக்கும் வானிலை நிகழ்வுகளின் ஆரம்பம் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றி விஞ்ஞானிகளால் ஆராய்ச்சி செய்து கண்டறிய முடியும் என்றும் இஸ்ரோ மற்றும் பெங்களூரை சேர்ந்த தேசிய விண்வெளி நிறுவனம் (National Space Agency) தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நாசா (NASA), ஐரோப்பாவின் சோகோ (SOHO) மற்றும் சீனாவைத் தொடர்ந்து எல்1-ஐ அடையும் நான்காவது நாடாக இந்தியாவின் இஸ்ரோ சரித்திரம் படைத்துள்ளது. இந்த எல்1 விண்கலத்தின் முதன்மையான நோக்கமே சூரியனை ஒரு பெரிய வாயு பந்தாகக் கருதிக்கொண்டு அதனைச் சுற்றி இருக்கும் வளிமண்டலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதே ஆகும்.

பொதுவாகவே சூரிய வளிமண்டலத்தின் வெளிப்பகுதியை ஆராய்ச்சி செய்வதற்கு மிகவும் கடினமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா ஆதித்யா எல்1-ஐ சூரியனை நோக்கி விண்ணில் செலுத்தியதற்கான நோக்கம் நிறைவேறுமாயின் சந்திரயான்-3ல் சரித்திரம் படைத்தது போல ஆதித்யா எல்1-ம் விண்வெளி ஆராய்ச்சி சரித்திரத்தில் இடம் பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
aditya l1 status update 2023 october
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X