Home
News

Aditya L1 LIVE: 30 நிமிடங்களுக்கு முன்பாகவே.. மீண்டும் அதே திக் திக் நிமிடங்கள்.. ISRO மீண்டும் சாதிக்குமா?

சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கிய பிறகு, இந்தியா இப்போது சூரியனை ஆய்வு செய்வதற்கான தனது முதல் பயணத்தை தொடங்க தயாராக உள்ளது. ஆதித்யா எல்1 (Aditya L1) என அழைக்கப்படும் இந்த விண்வெளி பணியானது, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

சந்திரயான்-3 லான்ச்சை போலவே ஆதித்யா எல்1 ராக்கெட் லான்ச்சும் (Rocket Launch) கூட ஆன்லைன் வழியாக நேரடியாக ஒளிபரப்படவுள்ளது. சந்திரயான் 3 ராக்கெட் லான்ச் மற்றும் மூன் லேண்டிங்கின் போது நம்மில் பலரும் அனுபவித்த "திக் திக் நிமிடங்களை" மீண்டும் அனுபவிக்க விரும்பினால்.. ஆதித்யா எல்1 லான்ச்சை லைவ் (LIVE) ஆக பார்ப்பது எப்படி என்கிற விவரங்கள் இதோ:

Aditya L1 LIVE: மீண்டும் அதே திக் திக் நிமிடங்கள்!

30 நிமிடங்களுக்கு முன்பாகவே! ஆதித்யா எல்1 ராக்கெட் லான்ச்சின் லைவ் ஸ்ட்ரீமிங் ஆனது 30 நிமிடங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிடும். அதாவது காலை 11.20 மணிக்கே தொடங்கிவிடும். இது இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் (ISRO Website), பேஸ்ஃபுக் பக்கம் (Facebook Page), யூட்யூப் பக்கம் (YouTube Page) வழியாக நேரடியாக ஒளிபரப்பாகும்.

ஆதித்யா எல்1 மிஷனின் ஆயுட்காலம் (Lifetime) எவ்வளவு? அந்த காலகட்டத்தில் இது என்னென்ன ஆய்வுகளை (Mission objectives) மேற்கொள்ளும்? இஸ்ரோவிற்கும் இந்தியாவிற்கும் இது ஏன் மிகவும் முக்கியமான ஒரு ஸ்பேஸ் மிஷனாகும்? இது எந்த ராக்கெட்டின் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ..

ஆதித்யா எல்1 மிஷனின் ஆயுட்காலம் எவ்வளவு? ஆதித்யா எல்1 மிஷன் ஆனது 5 ஆண்டுகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பூமியையும் சூரியனையும் இணைக்கும் ஒரு கோட்டில், ஒழுங்கற்ற வடிவ சுற்றுப்பாதையில் (Irregularly shaped orbit) ஆதித்யா எல்1விண்கலமானது தனது முழு வாழ்நாளையும் சூரியனை ஆய்வு செய்வதற்காக செலவிடும்.

இது ஏன் மிகவும் முக்கியமான ஒரு ஸ்பேஸ் மிஷன்? ஆதித்யா எல்1 செயற்கைகோள் ஆனது சூரியனை எதிர்கொள்ளும் இடத்தில் வைக்கப்படுவதால், அதனால் எந்த மறைவு அல்லது கிரகணத்தையும் (Occultation / Eclipses) சந்திக்காமல் தொடர்ந்து சூரியனை பார்க்க முடியும். இது சூரிய செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலையில் அதன் தாக்கத்தை நிகழ்நேரத்தில் (Real time) கவனிக்க உதவும்.

ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் ஆனது பிஎஸ்எல்வி சி-57 (PSLV-C57) ராக்கெட் வழியாக விண்ணில் ஏவப்படும். இது பிஎஸ்எல்வி-யின் 59வது ஃபிளைட் ஆகும் மற்றும் பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் கட்டமைப்பை (PSLV-XL configuration) பயன்படுத்தும் 25வது ஃபிளைட் ஆகும். ஆதித்யா எல்1 ஆனது அதன் இலக்கை அடைய 100 முதல் 120 நாட்கள் ஆகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா எல்1 மிஷனின் முக்கிய அறிவியல் நோக்கங்கள் என்னென்ன? சூரிய மேல் வளிமண்டல (குரோமோஸ்பியர் மற்றும் கரோனா) இயக்கவியல் பற்றி ஆய்வு செய்யும். குரோமோஸ்பெரிக் மற்றும் கரோனல் வெப்பமாக்கல், பகுதியளவு அயனியாக்கம் செய்யப்பட்ட பிளாஸ்மாவின் இயற்பியல், கரோனல் மாஸ் எஜெக்ஷன்களின் துவக்கம் மற்றும் எரிப்பு பற்றி ஆய்வு செய்யும்.

சூரிய கரோனாவின் இயற்பியல் மற்றும் அதன் வெப்பமூட்டும் வழிமுறையை ஆய்வு செய்யும். கரோனல் மற்றும் கரோனல் லூப்ஸ் பிளாஸ்மாவின் கண்டறிதல்: வெப்பநிலை, வேகம் மற்றும் அடர்த்தி ஆகியவற்றை ஆய்வு செய்யும். கரோனல் மாஸ் எஜெக்ஷன்களின் வளர்ச்சி, இயக்கவியல் மற்றும் தோற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.

பல அடுக்குகளில் நிகழும் செயல்முறைகளின் வரிசையை அடையாளம் காணவும், இது எப்படி இறுதியில் சூரிய வெடிப்பு நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை ஆய்வு செய்யும். சூரிய கரோனாவில் காந்தப்புல இடவியல் மற்றும் காந்தப்புல அளவீடுகளை ஆய்வு செய்யும். விண்வெளி வானிலைக்கான இயக்கிகளை அதாவது சூரியக் காற்றின் தோற்றம், கலவை மற்றும் இயக்கவியலை ஆய்வு செய்யும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aditya L1 Mission PSLV C57 Rocket Launch Watch Live Streaming on ISRO Website Facebook YouTube
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X