Home
News

2 பேரும் ஃப்ரேம் குள்ள வந்தாச்சா.. விண்வெளியில் மிதந்தபடியே ஆதித்யா எல்1 எடுத்த சூப்பர் செல்பீ!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா-எல்1 (Aditya L1 ) எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்துக் கடந்த 2-ம் தேதி விண்ணில் செலுத்தியது. தற்போது புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இந்த விண்கலம் பயணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆதித்யா-எல்1 விண்கலம் தன்னைத் தானே செல்பீ எடுத்துக் கொண்டதோடு தனது வட்டப்பாதையில் இருந்து பூமி மற்றும் நிலவைப் படம் பிடித்துள்ளது. தற்போது இந்த படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் இதுகுறித்து விரிவான தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விண்வெளியில் மிதந்தபடியே ஆதித்யா எல்1 எடுத்த சூப்பர் செல்பீ!

தற்போது இந்த விண்கலம் புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் பயணித்து வருகிறது. இதன் சுற்றுப்பாதையை படிப்படியாகப் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஆதித்யா-எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமரா மூலம் எடுக்கப்பட்ட படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.

குறிப்பாக ஆதித்யா எல்1 விண்கலம் தன்னைத் தானே செல்பீ எடுத்துக் கொண்டதோடு தனது வட்டப்பாதையில் இருந்து பூமி மற்றும் நிலவையும் படம் பிடித்துள்ளது. மேலும் இதை இஸ்ரோ தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. சுமார் 41 நொடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள படங்கள் கடந்த 4-ம் தேதி எடுக்கப்பட்ட படம் என இஸ்ரோ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 4 மாத கால பயணத்திற்குப் பிறகு 2024 ஜனவரி தொடக்கத்தில் பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள எல்-1 பகுதி அருகே விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்து சூரியனின் வெளிப்புற பகுதியை ஆதித்யா எல்1 ஆராய உள்ளது. அதேபோல் ஆதித்யா- எல்1 விண்கலம் சுமார் 1,475 கிலோ எடை கொண்டது. இதில் சோலார் அல்ட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசர், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் உள்ளிட்ட 7 வகையான ஆய்வு கருவிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அமெரிக்காவின் நாசா அமைப்பு சார்பில் அனுப்பப்பட்ட பார்க்கர் விண்கலம் சூரியனில் இருந்து 7.8 மில்லியன் கிலோ மீட்டர் அருகில் சென்றது. இதைத்தொடர்ந்து ஐரோப்பாவும் எல்1 பாயிண்டிற்கு இதேபோல் ஒரு விண்கலத்தை அனுப்பி உள்ளது. அதன்பின்பு தற்போது இஸ்ரோ சார்பாக ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. குறிப்பாக இந்த பணிக்கான மொத்த செலவு சுமார் 400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆதித்யா எல்1 விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருக்கும் வான் இயற்பியல் மையம், புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை, இந்த விண்கல வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் மிதந்தபடியே ஆதித்யா எல்1 எடுத்த சூப்பர் செல்பீ!

மேலும் சந்திரயான் 1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரையும், சந்திரயான் 2 திட்ட இயக்குநராக முத்தைய வனிதாவும், சந்திரயான் 3 திட்ட இயக்குநராக வீரமுத்துவேலும் செயல்பட்டனர். அதேபோல் சூரியனை ஆய்வு செய்ய போகும் ஆதித்யா எல்1 (Aditya-L1) திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த நிகர் ஷாஜி (Nigar Shaji) பணியாற்றி உள்ளார்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நிகர் ஷாஜி என்ற பெண் விஞ்ஞானிதான் இந்த ஆதித்யா எல்1 இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நிகர் ஷாஜி. அதேபோல் சேக் மீரான் - சைத்தூன் பீவி தம்பதியினரின் இரண்டாவது மகள் தான் நிகர் ஷாஜி. குறிப்பாக இஸ்ரோவின் சூரிய ஆராய்ச்சி செய்யும் மிக முக்கிய திட்டமான ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநராக உயர்ந்து தமிழ்நாட்டுக்கும், தென்காசி மண்ணுக்கும் பெருமை சேர்த்து உள்ளார் நிகர் ஷாஜி.

Best Mobiles in India

English summary
Aditya L1 captures stunning image of Earth and Moon, shares selfie in space: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X