ஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்! ஏன் தெரியுமா?

|

மைக்ரோ கிராவிட்டி தயாரிப்புகளைச் சோதனை செய்ய அடிடாஸ் நிறுவனம் ஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்துள்ளது. உலகின் முன்னணி பேஷன் நிறுவனங்களின் முக்கிய நிறுவனமான அடிடாஸ் நிறுவனம் தற்பொழுது சர்வதேச விண்வெளி நிலையமுடன் கூட்டணி சேர்ந்துள்ளது என்று ஐ.எஸ்.எஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 ஐ.எஸ்.எஸ். இணையும் அடிடாஸ்

ஐ.எஸ்.எஸ். இணையும் அடிடாஸ்

சர்வதேச விண்வெளி நிலையம் என்றும் அழைக்கப்படும் ஐ.எஸ்.எஸ். விண்வெளி மற்றும் விஞ்ஞானத்தின் பல்வேறு துறைகளில் சோதனைகள் மற்றும் பல விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஐஎஸ்எஸ் என்பது நாசா, ரோஸ்கோஸ்மோஸ், சிஎஸ்ஏ, ஈஎஸ்ஏ மற்றும் ஜாக்ஸா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்பு பணியாகும்.

சர்வதேச விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையம் முக்கிய விண்வெளி ஆய்வகமாகச் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பல புதிய வகை கூறுகளை ஆராய, வெவ்வேறு விண்வெளி ஏஜென்சிகள் ஒன்றிணைந்து ஒரே கட்டமைப்பின் கீழ் செயல்பட ஐ.எஸ்.எஸ் வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 1 முதல் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் எடுக்காது: திடீரென அறிவிப்பு.!டிசம்பர் 1 முதல் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் எடுக்காது: திடீரென அறிவிப்பு.!

மைக்ரோ கிராவிட்டி சோதனையில் அடிடாஸ்

மைக்ரோ கிராவிட்டி சோதனையில் அடிடாஸ்

இருப்பினும், விண்வெளி நிலையத்தின் சமீபத்திய சோதனை உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும். அடிடாஸ் ஆடை தயாரிக்கும் நிறுவனம் இப்போது விண்வெளி நிலையத்துடன் கைகோர்த்து தங்கள் தயாரிப்புகளை மைக்ரோ கிராவிட்டி மூலம் சோதிக்கிறது என்ற அறிவிப்பை ஐ.எஸ்.எஸ் வெளியிட்டுள்ளது.

 பூஸ்ட் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்ய போகிறது

பூஸ்ட் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்ய போகிறது

முன்பு அடிடாஸ் ஐ.எஸ்.எஸ் உடன் கால்பந்துகளைச் சோதனை செய்தது, இதன் மூலம் விஞ்ஞானிகள் காற்றின் வெவ்வேறு அம்சங்களைச் சோதிப்பதில் கவனம் செலுத்த புதிய வழியை அனுமதித்தது. தற்பொழுது பூஸ்ட் தொழில்நுட்பத்தையும் ஐ.எஸ்.எஸ் உடன் சோதித்து வருகிறது. பூஸ்ட் என்பது ஒரு வகையான ஃபோம் (Foam), இது காலணிகளை வசதியா உருவாக்கப் பயன்படுகிறது.

425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.!425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.!

டிவிட்டர் பதிவு

தற்போதுள்ள காலணிகளின் செயல்திறன் மற்றும் வசதியை மேம்படுத்த இந்த சோதனை நிறுவனத்திற்கு உதவும், அதேபோல் மேலும் இது ஒரு புதுமையை முழுவதுமாக பெற்றெடுக்கக்கூடும். எனவே எதிர்காலத்தில், அடிடாஸ் ஐ.எஸ்.எஸ் மற்றும் விண்வெளி சோதனை குறிச்சொற்களைக் கொண்டு தயாரிப்புகள் மற்றும் ஆடைகளை விற்பனை செய்வதை எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Adidas Joins Hands With ISS To Test Products In Microgravity Do You Know Why : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X