5G ஏலம்: மகாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா-டெலிகாம் துறையில் களமிறங்கும் அதானி குழுமம்?

|

இந்தியாவில் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த 5ஜி சேவை அனைத்து துறைகளிலும் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை கொண்டுவரும். அதேபோல் இதன் மூலம் வேலை வாய்புகளும் அதிகமாக உருவாகும் என்று கூறப்படுகிறது.

 5ஜி சேவை

5ஜி சேவை

குறிப்பாக 5ஜி சேவையை கைபற்றுவதற்கான ஏலம் வரும் ஜூலை 26-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெக்ட்ரம் எலத்தில் முகேஷ் அம்பானியின் ஜியோ, மிட்டலின் ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியிடும் நிலையில், புதிய திருப்பமாக அதானியும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தப்பு பண்ணிட்டீங்களே நத்திங்! Nothing Phone 1-ல் சார்ஜர் இல்லையா? லாஸ்ட்ல இப்படியா முடியனும்?தப்பு பண்ணிட்டீங்களே நத்திங்! Nothing Phone 1-ல் சார்ஜர் இல்லையா? லாஸ்ட்ல இப்படியா முடியனும்?

நான்கவது நிறுவனம்

நான்கவது நிறுவனம்

அதாவது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பிறகு விண்ணப்பிக்கும் நான்கவது நிறுவனம் அதானி குழுமம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360° டிகிரியும் பாதுகாப்பு! புது Xiaomi ஹோம் செக்யூரிட்டி கேமரா 2iதிருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360° டிகிரியும் பாதுகாப்பு! புது Xiaomi ஹோம் செக்யூரிட்டி கேமரா 2i

 அதிகாரப்பூர்வ தகவல்கள்?

அதிகாரப்பூர்வ தகவல்கள்?

இந்நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் என்எல்டி மற்றும் ஐஎல்டிக்கான உரிமத்தைப் பெற்றது என்று கூறப்படுகிறது. ஆனால் அதானி நிறுவனம் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Asus-ஆ இப்படி செஞ்சது! Asus ZenFone 9 போனின் 'அந்த' வீடியோ லீக் ஆகிடுச்சா? அச்சச்சோ அப்புறம் என்னாச்சு?Asus-ஆ இப்படி செஞ்சது! Asus ZenFone 9 போனின் 'அந்த' வீடியோ லீக் ஆகிடுச்சா? அச்சச்சோ அப்புறம் என்னாச்சு?

 மிகப் பெரிய பணக்காரர்

மிகப் பெரிய பணக்காரர்

ஆசிய கண்டத்தின் மிகப் பெரிய பணக்காரர் தான் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி. ஆனாலும் இப்போது முகேஷ் அம்பானி தான் ஆசிய அளவில் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பிடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த முதல் இடத்தை கவுதம் அதானி பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பதாரர்களின் உரிமை விவரங்கள்

விண்ணப்பதாரர்களின் உரிமை விவரங்கள்

குறிப்பாக வரும் 26-ம் தேதி ஏலம் நடைபெறுகிறது. இதில் 20 ஆண்டுகளுக்கு 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏல காலக்கெடுவின்படி, விண்ணப்பதாரர்களின் உரிமை விவரங்கள் ஜூலை 12 -ம் தேதி வெளியிடப்படும்.

200எம்பி மெயின் கேமரா: அதிகம் எதிர்பார்த்த Moto X30 Pro ஸ்மார்ட்போன்: எப்போது அறிமுகம் தெரியுமா?200எம்பி மெயின் கேமரா: அதிகம் எதிர்பார்த்த Moto X30 Pro ஸ்மார்ட்போன்: எப்போது அறிமுகம் தெரியுமா?

நேரடி போட்டியாக இருக்கும்

நேரடி போட்டியாக இருக்கும்

வரும் ஜூலை 26-ம் தேதி அன்று அதானி குழுமம 5ஜி ஏலத்தில் பங்கேற்றால், அது அம்பானியின் முதல் நேரடி போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Xiaomi 'இதை' செய்யுனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல! 1 இல்ல 4 வருது வரிசையா.. புது Xiaomi 12 Lite!Xiaomi 'இதை' செய்யுனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல! 1 இல்ல 4 வருது வரிசையா.. புது Xiaomi 12 Lite!

5ஜி தொழில்நுட்பம்

5ஜி தொழில்நுட்பம்

5ஜி தொழில்நுட்பத்தினால் என்னென்ன நன்மைகள் என்று பலருக்கும் தெரியும், உங்களின் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும்,வீடியோகளை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ள முடியும் என்பதே நாம் பார்க்கும் சில நல்ல விஷயங்கள்.

ஆனால் 5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்து துறைகளிலும் ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று
தகவல்களை பரிமாறிக்கொண்டு விபத்துகள் ஏற்படுத்துவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும்.

 விர்ச்சுவல் ரியாலிட்டி

விர்ச்சுவல் ரியாலிட்டி

விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும்

Best Mobiles in India

English summary
Adani Group Plans to Enter Telecom Spectrum Race: Full Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X