அதானியின் மாஸ்டர் பிளான்.. சைக்கிள் கேப்ல மிஸ் ஆனார் முகேஷ் அம்பானி?

|

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் உள்ள இந்தியர்களின் ஒருவரான அதானியின் (Adani) சமீபத்திய மாஸ்டர் பிளான் ஒன்றில்.. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டுமின்றி பார்தி ஏர்டெல் நிறுவனமும் கூட சைக்கிள் கேப்பில் தப்பித்துள்ளது!

அதென்ன மாஸ்டர் பிளான்? ஜியோவும், ஏர்டெல்லும் தப்பித்தது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

சிலருக்கு சர்ப்ரைஸ்.. பலருக்கு ஷாக்!

சிலருக்கு சர்ப்ரைஸ்.. பலருக்கு ஷாக்!

யாருமே எதிர்பாராத வண்ணம், 2022 ஆம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதானி குழுமம் பங்கேற்றதை உங்களில் சிலர் ஏற்கனவே அறிந்து இருக்கலாம்!

அது சிலருக்கு (இந்திய மக்களுக்கு) மிகவும் சர்ப்ரைஸ் ஆக இருந்தது; சிலருக்கு (ஜியோ, ஏர்டெல், வோடபோன்) மிகவும் ஷாக்கிங் ஆக இருந்தது என்றே கூறலாம்!

2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!

ஏனென்றால்?

ஏனென்றால்?

டெலிகாம் துறை தொடர்பான ஒரு ஏலத்தில் திடீரென்று அதானி குழுமம் பங்கேற்கவும், இந்நிறுவனம் டெலிகாம் நிறுவனம் ஒன்றை தொடங்கலாம் என்கிற சலசலப்பு ஏற்ப்பட்டது!

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்.. அம்பானி எப்படி திடீரென்று ரிலையன்ஸ் ஜியோவை அறிமுகம் செய்து, இந்திய டெலிகாம் துறைக்குள் நுழைந்தாரோ.. அதே போல அதானியும் நுழைகிறார் என்று பேச்சுகள் அடிபட்டன!

அம்பானி vs அதானி!

அம்பானி vs அதானி!

அதானி மட்டும் டெலிகாம் நிறுவனம் ஒன்றை அறிமுகம் செய்தால்.. அதுவும் 5ஜி சேவைகள் அறிமுகமாகி உள்ள இந்த நேரத்தில்.. அது நிச்சயம் வேற லெவல் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது; குறிப்பாக அம்பானிக்கும் அதானிக்கும்!

ஆனால் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் வெளியிட்டுள்ள ஒரு சமீபத்திய தகவலை வைத்து பார்க்கும் போது.. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டுமின்றி பார்தி ஏர்டெல் நிறுவனமும் கூட சைக்கிள் கேப்பில் தப்பித்துள்ளது போல் தெரிகிறது!

அதிர்ச்சி ரிப்போர்ட்! 2022 முடிவில் அதிர்ச்சி ரிப்போர்ட்! 2022 முடிவில் "இந்த போன்கள்" எல்லாமே குப்பைக்கு போகும்!

அதென்ன தகவல்?

அதென்ன தகவல்?

அது என்னவென்றால், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆனது நுகர்வோர் வணிகத்தில் (Consumer business) குதிக்க விரும்பவில்லையாம். மாறாக அது B2B (Business-to-Business) பக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாம்.

இதை ஒரு தகவல் என்று கூறுவதை விட, ஒரு வகையான விளக்கம் என்றே கூறலாம். அதாவது இப்போதைக்கு, அதானி குழுமமானது இந்தியாவில் நடக்கும் டெலிகாம் துறை யுத்தங்களுக்கு தயாராக இல்லை என்பதை மறைமுகமாக கூறி உள்ளது!

அதானி விலகி இருப்பது நல்லது!

அதானி விலகி இருப்பது நல்லது!

இப்போதைக்கு ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களிடம் இருந்து சற்றே விலகி இருப்பது தான் அதானிக்கும் நல்லது.

ஏன் என்பதற்கு 2 முக்கியமான காரணங்களை முன்வைக்கலாம். ஒன்று- ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே, ஏற்கனவே நன்கு அறியப்பட்ட, நிறுவப்பட்ட பிராண்டுகள் ஆகும்!

10 பைசா செலவு இல்லாமல் 'ஸ்லோ லேப்டாப்' பிரச்சனையை நீங்களே சரி செய்வது எப்படி?10 பைசா செலவு இல்லாமல் 'ஸ்லோ லேப்டாப்' பிரச்சனையை நீங்களே சரி செய்வது எப்படி?

இரண்டாவது - தாக்கு பிடிக்க முடியாது!

இரண்டாவது - தாக்கு பிடிக்க முடியாது!

ஆம்! 5G சேவைகள் ஆனது உடனடியாக மிகப்பெரிய வளர்ச்சியைக் காணப் போவதில்லை. எனவே இதில் அதிக பணத்தை முதலீடு செய்யும் எவருமே வருமானத்திற்காக நீண்ட காலத்திற்கு காத்திருக்க வேண்டும்.

அதுவரையிலாக முகேஷ் அம்பானி மற்றும் பார்தி மிட்டலின் "வியாபார தந்திரங்களுக்கு" மத்தியில் அதானி குழுமம் தாக்குப்பிடிக்கவும் வேண்டும்!

விமான நிலையங்களோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்!

விமான நிலையங்களோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்!

அதானி குழுமம் ஏற்கனவே பல விமான நிலையங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் பலவற்றை அதன் போர்ட்ஃபோலியோவின் கீழ் கொண்டுள்ளது.

அந்த வரிசையில் சேர்ந்துள்ள 5G அலைக்கற்றைகள் ஆனது, அதன் சொந்த நிறுவனங்களின் கனெக்டிவிட்டி சர்வீஸ்களை மேம்படுத்துவதிலும், பிற நிறுவனங்களுக்கும் அதே சேவைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தலாம்!

Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!

ரெடியாக உள்ள ஒருங்கிணைந்த உரிமம்!

ரெடியாக உள்ள ஒருங்கிணைந்த உரிமம்!

தொலைத்தொடர்பு வணிகத்தில் ஈடுபடும் அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆனது சில நாட்களுக்கு முன்பு தான் முழு அளவிலான தொலைத்தொடர்பு உரிமத்தைப் பெற்றது.

அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் இப்போது தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான ஒருங்கிணைந்த உரிமத்தையும் (UL) தன்வசம் கொண்டுள்ளது!

Best Mobiles in India

English summary
Adani Group Get Telecom License But it is not going to work against Jio Airtel and Vodafone Idea

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X