இனி முடிஞ்சது.. ரயில்வேயில் அதானி குழுமம்.. அடுத்த டார்கெட் IRCTC.. நாசுக்காக நடந்த வியாபாரம்!
இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ரயில்வே துறையில், அதானி குழுமம் (Adani Enterprises) நாசுக்காக காலடி எடுத்து வைத்துள்ளது. அடுத்த சில மாதங்களில் ரயில்வே டிக்கெட் புக்கிங்கில் என்ன நடக்கும்? ஐஆர்சிடிசி (IRCTC) என்னவாகும்? என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்.
நாட்டில் எந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டுமென்றாலும், கோடிக்கணக்கான மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது ரயில் பயணம் மட்டுமே. ஏனென்றால், ரயில் டிக்கெட்டின் விலை மிகவும் மலிவாக இருக்கும். இதனால், "ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தோமா, போக வேண்டிய இடத்துக்கு போய்ட்டு வந்தோமா" என்று மக்கள் இருப்பார்கள்.

ஆனால், நாட்டின் மொத்த உள்நாட்டு வருமானத்தில் மிகப்பெரும் பங்கினை ரயில்வே துறை கொண்டிருக்கிறது என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்திய ரயில்வேயின் ஆண்டு வருமானம் என்பது கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் கோடியை எட்டும். அப்படியென்றால், ஒருநாளுக்கு எவ்வளவு இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
இந்த வருமானத்தில் சரக்கு, டிரான்ஸ்போர்ட் போன்ற வருமானங்களை கழித்தாலும், பயணிகள் டிக்கெட் விற்பனையில் மட்டும் ரூ. 40 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு கிடைக்கும். இதில் 50 சதவீதத்துக்கும் மேல் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் கிடைக்கிறது. இந்த ஆன்லைன் டிக்கெட் புக்கிங் அனைத்தும் ஐஆர்சிடிசியின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ட்ரெயின்மேன் (Trainman), இக்சிகோ (ixigo) மேக்மைட்ரிப் (MakeMyTrip), ரெட்ரயில் (redRail) உள்ளிட்ட ஆப்கள் மூலம் நடக்கின்றன.
சொல்லப்போனால், ஐஆர்சிடிசி மூலமே அரசு டிக்கெட் விற்பனையை செய்தால் மிகப்பெரும் லாபத்தை பார்க்கலாம். ஆனால், ஐஆர்சிடிசியின் சேவை அவ்வளவு சிறப்பாக இல்லையென்பதாலேயே மற்ற ஆப்களுக்கு மக்கள் செல்கின்றனர் என்ற பேச்சும் உள்ளது. இதன்படி, ட்ரெயின்மேன் ரயில் டிக்கெட் புக்கிங் தளம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்த தளத்தில் ரயில் டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர். இந்த ட்ரெயின்மேன் தளத்தை ஸ்டார்க் என்டர்பிரைசஸ் (Stark Enterprises) எனும் நிறுவனம் நிர்வகிக்கிறது. இப்போது, ஸ்டார்க் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும், அதானி குழுமம் வாங்கிவிட்டது. ஆனால், எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்ற விவரங்கள் கிடைக்கவில்லை.
இதன் மூலம் அடுத்த சில மாதங்களில் அதானி குழுமம் ரயில் டிக்கெட் விற்பனையில் களமிறங்குவது உறுதியாகிவிட்டது. இந்த ட்ரெயின்மேன் தளத்தை மேம்படுத்தி பல்வேறு தள்ளுபடிகளையும், சலுகைகளையும் அதானி குழுமம் வழங்கினால், மிகப்பெரும் லாபத்தை பார்க்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. இதனால், ஐஆர்சிடிசிக்கு அவ்வளவாக ஆபத்து கிடையாது என்பதே உண்மை.
ஏனென்றால், ஐஆர்சிடிசியின் கீழ் டிக்கெட் புக்கிங்கில் அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னர்களாக இருக்கும் தளங்களில் ட்ரெயின்மேன் தளமும் ஒன்று மட்டுமே. இருப்பினும், அனைத்து புக்கிங்கும் அதானி குழுமத்துக்கு சென்றால், மற்ற தனியார் புக்கிங் தளங்களின் நிலை சற்று கேள்விக்குறிதான். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications