ராகிங் செய்யப்பட்ட சுந்தர் பிச்சை - வெளிப்படுத்திய ஹாஸ்டல் நண்பர்.!

"இரயில் நிலையத்தில் இருந்து நேராக விடுதி அறைக்கு வந்து பெட்டிகளை இறக்கிய வேகத்தில் அறை நிரம்பும் அளவிலான ரேகிங் செய்யும் சீனியர்களை எதிர்கொள்ள நேரிடும்"

By Staff
|

ராகிங் - கல்லூரிக்கு புதிதாக வரும் ஜூனியர்களை "தண்ணீ பிடிச்சு கொண்டு வா.. சிகரெட் வாங்கிட்டு வா" என்று சின்ன சின்ன வேலைகள் வாங்குவதில் தொடங்கி "சட்டை பேண்டை கழட்டு.. நான் சொல்ற மாதிரி செய்" என்று தற்கொலைக்கு வழிவகுக்கும் வரை என பலவகைப்படும்.

<strong>இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.!</strong>இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.!

ஒரு நட்பு முறையிலான கல்லூரிப் பாரம்பரியம் என்ற மறைமுக பெயரில் நிர்வாகம் மற்றும் பேராசிரியர்களின் கண்காணிப்பில் "அத்துமீறி விடாமல்" இன்றும் அரங்கேறி கொண்டிருக்கும் "எனக்கு நடந்தது உனக்கும் நடக்கணும்" என்ற சீனியர்களின் ஒரு வகையான பழிவாங்கும் உணர்வே - ராகிங்.!

விடுதி அறை நண்பர்

விடுதி அறை நண்பர்

பெரும்பாலும் கல்லூரிகளில் பயின்ற யாரையும் விட்டுவைக்காத இந்த ராகிங் - உலகின் மாபெரும் தேடல் பொறியான கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் "நம்ம ஊரு" சுந்தர் பிச்சையையும் விட்டுவைக்கவில்லை. சுந்தர் பிச்சை படித்த ஐஐடி-காரக்பூர் விடுதியில் ராகிங் செய்யப்பட்ட சம்பவங்களை சுந்தர் பிச்சையின் விடுதி அறை நண்பர் ஒருவர் நம்மோடு பகிர்ந்துள்ளார்.

பழக்கமான பல்லவி

பழக்கமான பல்லவி

குறிப்பாக 1985 முதல் 1993 வரையிலான காலகட்டத்தில் காரக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் நேரு ஹாலில் ஒதுக்கப்படும் எங்களின் நாட்களில் ஒரு மிகவும் பழக்கமான பல்லவி ஒன்று இருந்தது அது - "இந்த தண்ணீரில் எதோ ஒன்று கலந்திருக்க வேண்டும்".

அர்விந்த் கேஜ்ரிவால்

அர்விந்த் கேஜ்ரிவால்

குறிப்பிட்ட அதே ஆண்டுகளில் தான் மூன்று வருங்கால பிரபலங்ககள் - டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் இந்திய சமூக பொருளாதார-அரசியல் வட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய எச் ஹரீஷ் ஹண்டே ஆகியவர்களும் - எங்கள் விடுதியில் தங்கி இருந்தனர்.

கூடியிருந்த சீனியர்களின்

கூடியிருந்த சீனியர்களின்

மூன்றாவது பிரபலம் வேறுயாருமில்லை "சுண்டி" தான் (ஐஐடியில் மிகவும் பிரபலமான சுந்தர் பிச்சையின் செல்லப்பெயர்). அது 1989-ஆம் ஆண்டு, இளம் சுந்தர் பிச்சை ஐஐடி காரக்பூரின் நேரு ஹாலில் ராகிங் செய்யப்போகும் உச்சகட்ட உற்சாகத்தில் கூடியிருந்த சீனியர்களின் வரவேற்பு நிகழ்ந்தது.

அறை நிரம்பும் சீனியர்கள்

அறை நிரம்பும் சீனியர்கள்

ஆம், ராகிங் என்பது நிச்சயமாக நடைமுறையில் இருந்த காலம். இரயில் நிலையத்தில் இருந்து நேராக விடுதி அறைக்கு வந்து பெட்டிகளை இறக்கிய வேகத்தில் அறை நிரம்பும் அளவிலான ரேகிங் செய்யும் சீனியர்களை எதிர்கொள்ள நேரிடும். ஒருவர் அவர்களின் பெட்டி படுக்கைகளை அதே நாளில் மீண்டும் பெறுவது என்பது அதிசயமாக நடக்கும் ஒரு நிகழ்வாகும்.

மேசை மேல் ஏறச்சொல்லி

மேசை மேல் ஏறச்சொல்லி

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது சீனியர்கள் செய்ய சொல்லும் - அது மேசை மேல் ஏறச்சொல்லி அபத்தமான விடயங்களை செய்யச்சொன்னாலும் சரி, பால்கனி வழியாக எதேச்சையாக செல்லும் எவரையும் சீனியர்கள் தூண்டுதலில் கீழ் ஏதாவது அடைமொழி கூறுவதாக இருந்தாலும் சரி - எதையும் சற்றும் தயங்காமல் தருணத்திற்கு ஏற்றபடி "சுண்டி" நிகழ்த்துவான்.

இரு தரப்பினருக்கும்

இரு தரப்பினருக்கும்

இதன் விளைவாகவே "சுண்டி"யை ராகிங் செய்யும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் மற்றும் "சுண்டி"யின் வழியாகவே ராகிங் செய்வோர் மற்றும் ரேகிங் செய்யப்படுவோர் ஆகிய இரு தரப்பினருக்கும் ஒரு நல்ல உறவு உண்டாகியது.

வசீகரமான ஒரு உணர்வு

வசீகரமான ஒரு உணர்வு

அவ்வப்போது நிகழும் ஒரு வழக்கமான விடுதி நண்பர்களுக்கான உரையாடல்களை தவிர்த்து சுந்தர் பிச்சையின் கல்வி ஆண்டுகள் பற்றி எனக்கு அதிக அளவில் விவரங்கள் எதுவும் தெரியாது. இப்பொது நம்ம கூட இருந்த பையன் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி என்று நினைக்கும் போது விசித்திரமாக அதே சமயம் வசீகரமான ஒரு உணர்வு ஏற்படுகிறது.

அதுவொரு மழை நாள்

அதுவொரு மழை நாள்

சுண்டி பற்றிய கடைசி நினைவாக எண்களின் ஐஐடி விடுதியின் கடைசி நாள் உள்ளது. அதுவொரு மழை நாள், நான் எனது வீட்டில் இருந்து கேமராவொன்று கொண்டு வந்திருந்தேன் அதன் மூலம் வளாகத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று "சுண்டி" உட்பட பலரின் புகைப்படங்களை எடுத்தேன்.

அப்படியேதான் இருக்கிறார்

அப்படியேதான் இருக்கிறார்

அந்த புகைப்படங்களை இப்போது எடுத்து பார்த்தால் கூட இன்று நான் இணையத்தில் பார்க்கும் பார்க்கும் அதே சுந்தர் பிச்சை படங்கள் ஓரளவு ஒற்றுப்போகும், அவர் . சுந்தர் பிச்சை இந்த அளவிலான உயரத்தை ஈட்டுவார் என்று எங்களால் அன்று கொஞ்சம் கூட கணிக்க முடியவில்லை இதுவொரு அறிவியல் புனைக்கதை போல உள்ளது என்று தனது நினைவுகளை கூறி முடித்தார் "சுண்டி"யின் ஹாஸ்டல் நண்பர்.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

சுந்தர் பிச்சையின் 'மறைக்கப்படும்' முகங்கள்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Actually we need to learn lot from young Sundar Pichai too. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X