நடிகையின் செல்போனை ஹேக் செய்து அந்தரங்க புகைப்படங்கள் திருட்டு?

|

நடிகை ஒருவரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் எடுத்து வைத்திருந்த அந்தரங்க புகைப்படங்களும் திருடியதாக தற்போது சென்னையில் காவல் ஆணையைர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகையின் செல்போனை ஹேக் செய்து அந்தரங்க புகைப்படங்கள் திருட்டு?

மேலும், இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Story Source- Samayam

மிஸ் அழகி பட்டம் வென்றவர்:

மிஸ் அழகி பட்டம் வென்றவர்:

சென்னையில் நடைபெறவுள்ள தமிழக அழகி போட்டியை நடத்தவிடாமல் கொலை மிரட்டல் விடுப்பதாக மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்ற அழகியும், நடிகையுமான மீரா மிதுன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பெண்களைக் குறி வைக்கும் ஸ்பை கேமரா.! கண்டறிவது எப்படி?

நடிகை மீரா மிதுன்:

நடிகை மீரா மிதுன்:

தானாசேர்ந்த கூட்டம், 8 தோட்டங்கள் ஆகிய படங்களில் நடித்து இருப்பவர் தமிழ் செல்வி என்ற மீரா மிதுன். சென்னையை சேர்ந்த இவர் மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சென்னை உள்ளிட்ட அழகி பட்டங்களையும் பெற்றுள்ளார்.

மிஸ் தமிழ்நாடு டிவா 2019 என்ற அழகிப் போட்டியை வடபழனியில் வரும் ஜூன் 3ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்.

கொலை மிரட்டல் புகார்:

கொலை மிரட்டல் புகார்:

மாடலிங் துறையில் திறமையும், தகுதியும் உள்ள தமிழகத்தை சேர்ந்த அழகிகளுக்காக மட்டும் நடத்தப்படவுள்ள இந்த போட்டியை மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் நடத்த விடாமல் கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

7பெண்களை கிளுகிளுப்பா வீடியோ எடுக்க வை-பை கேமரா வாங்கிய சஞ்சீவி.!

மேலும், இது தொடர்பாக சென்னை காவல்துறை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்த அவர் செல்போன் மூலம் தொடர் மிரட்டல்கள் வருதாகவும் கூறினார்.

கேரள மாநிலத்தவர் மிரட்டல்:

கேரள மாநிலத்தவர் மிரட்டல்:

அழகிப் போட்டியை தாம் நடத்தக் கூடாது என்று கேரளாவைச் சேர்ந்த அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கேல் பிரவீன் ஆகிய இருவர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். மிஸ் தமிழ்நாடு போட்டியை நடத்தும் அஜித் ரவியுடன் முன்பு தாம் பணிபுரிந்ததாகவும் தற்போது அதில் இருந்து விலகி தமிழக அழகிகளுக்காக தனியாக போட்டி நடத்துவதை தாங்கிக் கொள்ள முடியாமல் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார்.

செல்போன் ஹேக்:

செல்போன் ஹேக்:

மாடலிங் துறையில் தமிழக அழகிகள் இனம், நிறம் இவற்றின் அடிப்படையில் திட்டமிட்டு புறக்கணிக்கபடுவதாகவும், அதற்காக தான் தமிழக அழகிகளுக்காக இந்த போட்டியை தான் நடத்துவதாகவும், இதனால் அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கேல் பிரவீன் இவர்களின் தூண்டுதலால்

பெண்களின் ரகசிய தகவல்கள் (அ) புகைப்படங்கள் வெளியாக இதுவும் ஒரு காரணம்.!

தனது செல்போனை ஹேக் செய்து அந்தரங்க புகைப்படங்களைத் திருடியுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் பரப்பி விடப் போவதாக மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுகிறது என்பதற்கான தெளிவான அறிகுறிகள்

உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுகிறது என்பதற்கான தெளிவான அறிகுறிகள்

ஹேக் செய்வது என்பது உங்களின் அனைத்து முக்கியமான தகவல்களும் திருடப்பட்டு விடும். மேலும் இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பல தொழில்நுட்பங்கள் இடம்பெறுகின்றன. மேலும் ஸ்மார்ட்போன்களில் எவ்வித பாதுகாப்பு வழங்கப்பட்டாலும் வாடிக்கையாளர்கள் சரிவரபாதுகாக்கவில்லை எனில் அதனை எளிதாக ஹேக் செய்வதற்க்கு வாய்ப்பு உள்ளது.

இப்போது ஸ்மார்ட்போன்களில் இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது, இதன் மூலம் ஸ்மார்ட்போன்களுக்குபல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எதிரொலி:

எதிரொலி:

ஸ்மார்டபோன்களில் கால்அழைப்புகள் போது தேவைஇல்லாத சத்தம் அல்லது எதிரொலி போன்றவற்றினால் ஹேக் பிரச்சனைகள் வரும், மேலும் நீங்கள் இருக்கும் இருப்பிடத்தை அடுத்தவர்கள் மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.

ஸ்விட்ச் ஆஃப்:

ஸ்விட்ச் ஆஃப்:

உங்கள் ஸ்மார்ட்போன் தானகவே ஸ்விட்ச் ஆஃப் மற்றும் டயல் செய்தால் ஹேங் செய்யப்படுகிறது என அர்த்தம். மேலும் தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதும் ஹேங்கிங் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

தெரியாத தொலைபேசி எண்:

தெரியாத தொலைபேசி எண்:

உங்கள் ஸ்மார்ட்போன்களில் சமீபத்திய அழைப்புகளில் தெரியாத தொலைபேசி எண்கள் வந்தால் ஹேக் செய்வதற்க்கு வாய்ப்பு உள்ளது.

சாப்ட்வேர்

சாப்ட்வேர்

சில சமயங்களில் ஸ்மார்ட்போனை ஆஃப் செய்ய முடியாது அது போன்ற நேரத்தில் தேவைஇல்லாத ஆப் இயங்கி கொண்டிருக்கும். உங்கள் ஸ்மார்ட்போனின் சாப்ட்வேரினை உரிய நேரத்தில் அப்டேட் செய்துகொள்வதன் மூலம் பல சிக்கல்களை தவிர்க்க முடியும்.

 கூகுள் பிளே ஸ்டோர்:

கூகுள் பிளே ஸ்டோர்:

கூகுள் பிளே ஸ்டோரில் பெரும்பாலான செயலிகள் இலவசமாக கிடைக்கும், அவற்றை பயன்படுத்தும் முன்பு நம்பத்தன்மையை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

கிரிப்டோகரன்சி  உற்பத்திக்காக ஹேக் செய்யப்படும் போன்கள்! போனை பாதுகாப்பு எப்படி?

கிரிப்டோகரன்சி உற்பத்திக்காக ஹேக் செய்யப்படும் போன்கள்! போனை பாதுகாப்பு எப்படி?

உங்கள் மொபைல் போன் (குறிப்பாக ஆண்ராய்டு ) மெதுவாக இயங்க தொடங்கியிருந்தால், அதிக வெப்பமடைந்தால் அல்லது அதன் பேட்டரி எந்தவொரு வெளிப்படையான காரணமும் இல்லாமல் விரைவாக குறைந்தால் நீங்கள் நிச்சயம் கவலைப்பட வேண்டும்.

ஏன் என கேட்கிறீர்களா? சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்த அறிகுறிகள் நீங்கள் துரதிருஷ்டவசமாக கிரிப்டோஜேக்கர்-ஆல்( cryptojacker ) பாதிக்கப்பட்டிருக்கலாம்.

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி உற்பத்தி என்பது டிஜிட்டல் பரிவர்த்தனை போலவே அடிப்படையான ஒன்று. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் மற்றும் பிற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இடையே வேறுபாடு என்பது, பொதுவாக இதில் வன்பொருள் பயன்படுத்தி பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. (உங்களுக்கு வழங்கப்பட்ட கிரிப்டோகரன்சிக்கு பிரதிபலனாக).

சைபர் கிரிமினல்கள்

சைபர் கிரிமினல்கள்

பொதுவாக கிரிப்டோ பரிவர்த்தனைகளை செய்ய மிகவும் சிக்கலான கணக்குகளுக்கு தீர்வுகாண வேண்டும். எனவே கணிசமான அளவிலான கணிப்பொறி ஆற்றலுக்கு தேவை இருக்கிறது. இதில இயற்கையாகவே வன்பொருளுக்காக நிறைய செலவழிக்கப்படுகிறது மற்றும் மிகப்பெரிய அளவில் ஆற்றலுக்கும் பணம் செலவளிக்க வழிவகுக்கிறது. ஆனால் இதற்கு மாற்றாக சைபர் கிரிமினல்கள் இன்னும் செலவு குறைந்த குறுக்குவழியை கண்டறிந்துள்ளனர்.

மனிதர்கள் ஆந்த்ரோபோசின் புதிய புவியியல் சகாப்தத்தில் நுழைந்தவர்கள்:இதோ ஆதாரம்.!

கிரிப்டோஜேக்கர்கள்

கிரிப்டோஜேக்கர்கள்

ஒரு ஸ்மார்ட்போன் மட்டும் கிரிப்டோகரன்சியை உற்பத்தி செய்ய தேவைப்படும் செயலாக்க சக்தியை வழங்கமுடியாது. ஆனால் பல ஸ்மார்ட்போன்களை ஒன்றாக பயன்படுத்தும் போது, சைபர் கிரிமினல்கள் எளிதாக கூட்டு செயலாக்க சக்தியை பயன்படுத்தி கொள்ள முடியும். மற்றும் பயனர்களுக்கு தெரியாமலேயே ஏராளமான கிரிப்டோஜேக்கர்கள் இதனை செய்து வருகின்றனர்.

மால்வேர்

மால்வேர்

கிரிப்டோஜேக்கர்கள் கிரிப்டோகரன்சியை உற்பத்தி செய்யும் வகையில், பயனர்களும் பாதிப்பில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்து தங்கள் சாதனத்தில் தீங்குவிளைவிக்கும் மால்வேர்கள் வர வழிவகுக்கின்றனர்.

 ஆப்பிள் ஐஓஎஸ் vs கூகுள் இயங்குதளம்

ஆப்பிள் ஐஓஎஸ் vs கூகுள் இயங்குதளம்

கூகுள் இயங்குதளத்தை பயன்படுத்தும் சாதனங்கள் பாதுகாப்பற்றவையாக இருக்க காரணம், ஆப்பிள் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரை போல செயலிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் இல்லாததே.எனினும் தற்போது கூகுளும் ஆப்பிள் போன்று தனது கூகுள் ப்ளே ஸ்டாரில் கட்டுபாடுகள் விதிக்க துவங்கியதுடன், இனி தங்களது சாதனங்களில் கிரிப்டோகரன்சி உற்பத்தியை அனுமதிக்காது என டெவலப்பர்களுக்கு அறிவித்துள்ளது.

உங்கள் போனை நீங்கள் எவ்வாறு பாதுகாக்க முடியும்!

உங்கள் போனை நீங்கள் எவ்வாறு பாதுகாக்க முடியும்!

வல்லுநர்கள் தீங்குவிளைக்கும் மால்வேர்கள் எந்த செயலியில் உள்ளது என கூறுவது மிகவும் கடினமாக இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு பயனராக நீங்கள் எடுக்கும் சில நடவடிக்கைகள் மூலம் போனை பாதுகாக்கலாம் என்கின்றனர்.

"கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு" உலக சாதனை படைத்த மாணவன்: என்ன செய்தார் தெரியுமா?

*உங்கள் போனின் இயங்குதளம் மற்றும் செயலிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தவும்.

*அதிகாரப்பூர்வ தளங்களில் (கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்) இருந்து மட்டுமே செயலிகளை இன்ஸ்டால் செய்யவும்.

*தெரியாத தளங்களில் இருந்து செயலிகளை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்கவும்.

பாதுகாப்பை உறுதிப்படுத்த

பாதுகாப்பை உறுதிப்படுத்த

*நீங்கள் பதிவிறக்கும் எந்தவொரு செயலியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அது எத்தனை முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது மற்றும் இதர பயனர்களின் மதிப்பீட்டையும் அறியவும்.

*உங்கள் போனில் உள்ள செயலிகளுக்கு தேவையற்ற அனுமதிகளை வழங்க வேண்டாம்.

கூடுதல் பாதுகாப்புக்காக உங்கள் இயங்குதளத்திற்கு பொருத்தமான வைரஸ் தடுப்பு மென்பொருளை(Anti virus) நீங்கள் பயன்படுத்தலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Actress Complained That She Hacked Her Cell Phone And Stolen Her Personal Photos : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more