இந்த செயலிகளை எல்லாம் தடை பண்ணுங்க- நடிகர் விஜய் ரசிகர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு: மாணவர்கள் நலன் முக்கியம்

|

ஸ்மார்ட்போனில் ஆபாச விளம்பரங்கள் வெளியிடும் செயலிகளை தடை செய்ய வேண்டும் என கோரி நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் ரசிகர்கள்

ரசிகர்களால் தளபதி என்பாக அழைக்கப்படும் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பல்வேறு உதவிகளை பொதுமக்கள் செய்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிப்போட்டுக் கொண்டு நலத்திட்ட உதவி செய்து வருகின்றனர்.

விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர்

இந்த மனுவானது விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் மற்றும் நிர்வாகிகளால் அளிக்கப்பட்டது. மேலும் இந்த மனுவில் இணைய வழி கல்வி முறையால் பள்ளி மற்றும் கல்லூரி மாண மாணவிகள் அதிகளவில் ஸ்மார்ட்போன்கள் செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். அதிகளவில் பல செயலிகளில் ஆபாச விளம்பரங்கள் வெளியிடப்படுகிறது. இதன்மூலம் மாணவ மாணவிகள் கல்வி மற்றும் மன நலன் பாதிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆபாச விளம்பரங்கள் வெளியிடும் செயலிகள்

இதையடுத்து ஆபாச விளம்பரங்கள் வெளியிடும் செயலிகளை தடை செய்ய மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பல்வேறு செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக ஸ்கேனர், டாக்குமெண்ட் கன்வர்டெர் உள்ளிட்ட பல செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலிகளில் விளம்பரம் காட்டுவது இயல்பு, இந்த விளம்பரங்களில் சிலவை ஆபாசமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது என கூறப்படுகிறது.

தளர்வுகளோடு ஊரடங்கு

தளர்வுகளோடு ஊரடங்கு

கொரோனாவைக் கட்டுப்படுத்த தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியானது.

ஆன்லைன் வகுப்பு

மாணவர்களுக்கு சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். அதேபோல் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வலியுறித்து வருகிறது. அதற்கேற்ப தொலைத் தொடர்பு நிறுவனங்களும் டேட்டா சலுகைகளை கூடுதலாக வழங்கி வருகிறது. வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப் பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கவனம் தேவை

தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து கொண்டே வரும் இந்த காலக்கட்டத்தில் நாமும் அதற்கு ஏற்றவாறு நம்மை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் இருந்தாலும் குழந்தைகளின் இணைய சமூகத்தில் பங்கேற்பது என்பதில் மிக கவனம் தேவை. படிப்புக்கு சாதனம் வழங்கினாலும் அதில் குழந்தைகள் எதற்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வகுப்பு என ஆன்லைன் விளையாட்டு விளையாடி ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களும் உண்டு. குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது அனைவரின் கடமையாகும்.

Best Mobiles in India

English summary
Actor Vijay fans petition to ban processors featuring pornographic advertisements

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X