நகுலிடம் போலி ஐபோனை அனுப்பிய பிளிப்கார்ட்: உஷார் மக்களே.!

கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாயஸ் படத்தில் நடிகர் நகுல் அறிமுகமானார், பின்பு காதலில் விழுந்தேன், மாசிலாமணிபோன்ற பல்வேறு படங்களில் நகுல் கதாநாயகனாக நடித்தார்.

|

இப்போது ஸ்மார்ட்போன் வாங்கும் மக்கள் ஆன்லைன் தளங்களில் தேடி தான் வாங்குகின்றனர், அதில் ஸ்மார்ட்போனின் அனைத்து குறிப்புகளும் இருக்கும், ஆனால் அந்த ஸ்மார்ட்போன் போலியா என்பதை கண்டறிவது கொஞ்சம் கடினம் தான்.

நகுலிடம் போலி ஐபோனை அனுப்பிய பிளிப்கார்ட்: உஷார் மக்களே.!

லாஜிக்கல் சர்வே' என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில், 38 சதவீதம் பேர் தாங்கள் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் போலியான பொருட்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ரிவியூ

ரிவியூ

பொருட்களை வாங்கும்போது அனைவரும் செய்யும் பொதுவான விஷயம், அந்தப் பொருட்களுக்கான மதிப்பீடுகளை (ரிவியூ) பார்ப்பது. ஆனால் அதனுடன் விற்பனையாளர் மீதான மதிப்பீடுகளையும் பார்க்கவேண்டும். இன்று இணைய வர்த்தக நிறுவனங்கள், பொருட்களை வாங்குபவர்களிடம் தங்கள் அனுபவத்தை மதிப்பிட ரிவியூ செய்யுமாறு கூறுவதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளன.

பொருட்கள்

பொருட்கள்

இந்த ரிவியூக்கள் மூலம் அந்தப் பொருட்கள் மற்றும் அதன் விற்பனையாளர்களை மதிப்பிட முடியும். மேலும் இவ்வாறு உங்கள் அனுபவத்தை மதிப்பிடுவதன் மூலம் குறைகளை அந்த இணைய நிறுவனத்துக்குத் தெரியப்படுத்த முடியும். ஒரு குறிப்பிட்ட விற்பனையாளர் மீது அதிக எதிர்மறையான விமர்சனங்கள் எழும்போது, அதன் அடிப்படையில் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

நடிகர் நகுல்

நடிகர் நகுல்

கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாயஸ் படத்தில் நடிகர் நகுல் அறிமுகமானார், பின்பு காதலில் விழுந்தேன், மாசிலாமணி
போன்ற பல்வேறு படங்களில் நகுல் கதாநாயகனாக நடித்தார். மேலும் இவர் 2016-ல் ஸ்ருதி என்பவரை நகுல் திருமணம் செய்தார்.

ஆண்டு விழா

ஆண்டு விழா

தற்சமயம் இவர் எரியும் கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்நிலையில் திருமணமாகி 3-வது ஆண்டு
விழா நெருங்குவதையொட்டு நகுல், தனது மனைவிக்கு பரிசளிக்க விரும்பி பிளிப்கார்ட் வலைதளத்தில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்தார். ஆர்டர் வந்த போது போது வெளியூர் சென்றிருந்த நகுல் திரும்பி வந்து பார்சலை பிரித்துப் பார்த்த போது போலி ஐபோன் வந்திருந்ததைத் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

புகார்

தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார், ஆனால் பிரச்சனையைத்
தீர்க்காமல் பிளிப்கார்ட் நிறுவனத்தினர் அலைக்கழித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக நகுல் கடந்த சில தினங்களுக்கு
முன்பு தனது மூகவலைதள பக்கத்தில் ஃபிளிப் கார்ட் நிறுவனத்தை டேக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வீடியோ

அந்த வீடியோவில் தன்னை போல் பலரும் ஏமாந்ததாக கூறும்போது மனதிற்கு வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ள அவர், இந்திய நிறுவனமான ஃபிளிப்கார்ட் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த
சேவையை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நன்றி

நன்றி

மேலும் பிளிப்கார்ட் நிறுவனத்தினர் பணத்தை திரும்ப கொடுத்துள்ளனர், இதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ள அவர் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Actor Nakkhul alleges he was duped by Flipkart after receiving fake iPhone XS Max: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X