2023 ஆரம்பமே ஆப்பு தான்! Netflix பயனர்களுக்கு இடி மாதிரி வந்த செய்தி.. ரெடியா இருங்க.!

|

Netflix நிறுவனம் அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய வழிகளை முயற்சி செய்து வருகிறது. அதில் ஒன்று தான் பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை ஆகும். நெட்ஃபிளிக்ஸ் தங்கள் பயனர்கள் கடவுச்சொல்லை பகிர்வதை தடுப்பதற்கு நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. தற்போது நிறுவனம் விரைவில் இதை செயல்படுத்த இருக்கிறது. அதாவது நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் பாஸ்வேர்ட் பகிர அனுமதிக்காது.

2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடவடிக்கை

2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடவடிக்கை

தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியான அறிக்கைப்படி, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நெட்ஃபிளிக்ஸ் பயனர்கள் தங்கள் கணக்கின் பாஸ்வேர்ட்டை நண்பர்களுடனோ அல்லது தங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள எவரிடமோ பகிர்ந்து கொள்ள முடியாது. பாஸ்வேர்ட் பகிர்வு வணிகத்தை முடிவுக்கு கொண்டு வர பல வழிகளை நெட்ஃபிளிக்ஸ் ஆராய்ந்து வந்தது.

10 சதவீதம் வீழ்ச்சி அடைந்த நெட்ஃபிளிக்ஸ்

10 சதவீதம் வீழ்ச்சி அடைந்த நெட்ஃபிளிக்ஸ்

தொடர்ந்து சந்தாதாரர்களை இழந்து வரும் நெட்ஃபிளிக்ஸ் இதை முடிவுக்கு கொண்டு வர இந்த நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நெட்ஃபிளிக்ஸ் தனது வருவாயில் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. 10 ஆண்டுகளில் முதன்முறையாக நிறுவனம் சந்தாதாரர்களை இழந்தது. இதை சரி செய்யவே நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. சரி, இனி பாஸ்வேர்ட் பகிர்ந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

கூடுதல் கட்டணம் உறுதி

கூடுதல் கட்டணம் உறுதி

பயனர்கள் இனி உங்கள் பாஸ்வேர்ட்டை பகிர்ந்தால் நிறுவனம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. நீங்கள் இனி உங்கள் பாஸ்வேர்ட்டை நண்பர்களுடனோ அல்லது வேறு ஒருவரிடமோ பகிர்ந்தால் அந்த நபர் உங்கள் சுயவிவரத்தை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பாஸ்வேர்ட் பகிர்வுக்கு கட்டணம் எவ்வளவு?

பாஸ்வேர்ட் பகிர்வுக்கு கட்டணம் எவ்வளவு?

பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு குறித்து நிறுவனம் கோஸ்டாரிகா, சிலி, பெரு மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் சோதனை செய்தது. அங்கு பாஸ்வேர்ட் பகிரும் நபர்களிடம் $3 (தோராயமாக ரூ.250) வசூலிக்கிறது. இந்தியாவில் ஒரு பகிர்வுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. IP முகவரிகள், சாதன ஐடிகள் மற்றும் கணக்கு செயல்பாடு மூலம் இந்த பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட இருக்கிறது.

புதிய அம்சம் அறிமுகம் செய்த நெட்ஃபிளிக்ஸ்

புதிய அம்சம் அறிமுகம் செய்த நெட்ஃபிளிக்ஸ்

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் புதிய நிர்வாக அணுகல் விருப்பத்தை நிறுவனம் இணைத்திருக்கிறது. நீங்கள் என்றோ ஒரு நாள் எதார்த்தமாக பிறரின் சாதனங்களின் லாக் இன் செய்து நெட்ஃபிளிக்ஸ் பயன்பாட்டை பயன்படுத்தி தவறுதலாக லாக் அவுட் செய்யவும் மறந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இன்றுவரை அதே லாக் இன் மூலம் பயன்பாட்டை அணுகிக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற செயல்களை சரிசெய்வதற்கு நிறுவனம் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.

உள்நுழைவு நிலையை சரிபார்க்க உதவும்

உள்நுழைவு நிலையை சரிபார்க்க உதவும்

பயனர்கள் தங்கள் கணக்கின் உள்நுழைவு நிலையை சரிபார்க்கலாம். மேலும் தேவையற்ற விருந்தினர்களின் நீங்களே வெளியேற்றவும் செய்யலாம். ஹோட்டல் போன்ற இடங்களில் உள்ள டிவிகளில் Netflix ஐப் பயன்படுத்திய பயனர்களுக்கு இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும்.

லாக் அவுட் செய்ய உதவும்

லாக் அவுட் செய்ய உதவும்

லாக் இன் செய்து பயன்படுத்திவிட்டு தவறுதலாக லாக் அவுட் செய்யாமலயே ஹோட்டலில் இருந்து செக் அவுட் செய்திருக்கலாம். திரும்பவும் அந்த ஹோட்டலுக்கு சென்று லாக் அவுட் செய்வது என்பது சிரமமான செயல். எனவே இந்த அம்சத்தின் மூலம் இருந்த இடத்தில் இருந்தே லாக் அவுட் செய்து கொள்ளலாம்.

பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கலாம்

பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கலாம்

இந்த அம்சம் தற்போது இந்தியாவில் கிடைக்கிறது. இதை செக் செய்வதற்கு சுயவிவர ஐகானை கிளிக் செய்யவும் > அதில் கணக்குகளுக்கு சென்று அணுகல் மற்றும் சாதனங்கள் நிர்வகித்தல் என்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளவும். அனுமதி இல்லாமல் உங்கள் கணக்குகளை பயன்படுத்தும் அனைவரையும் நீங்கள் உங்கள் சாதனங்களில் இருந்தே நீக்கலாம். நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் என எந்தவித பாகுபாடும் இல்லாமல் உங்கள் கணக்கை பயன்படுத்தும் நபர்களை நீங்களே அகற்றலாம்.

Best Mobiles in India

English summary
Action Starts From 2023: Important News For Netflix Users., Get Ready Pay Extra!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X