கேபிள் டிவி முடிஞ்சது.. ரூ.665 போதும்.. 300+ சேனல்கள்.. 3 மாதம் வேலிடிட்டி.. 4 ஓடிடி சந்தா.. 750 ஜிபி டேட்டா!
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களால் மட்டுமே கொடுக்க முடியும் என்று நினைத்த சலுகைகளை, இப்போது மற்றொரு நிறுவனம் கொடுக்க தொடங்கிவிட்டது. வெறும் ரூ.665 திட்டத்தில் 300+ டிவி சேனல்கள், 4 ஓடிடி ஆப்கள் சந்தா, 50எம்எபிபிஎஸ் வேக டேட்டா போன்ற சலுகைகளை கொடுக்கிறது.
ஏசிடி (ACT) என்னும் நிறுவனம், ஓடிடி, டிவி மற்றும் பிராட்பேண்ட் டேட்டா ஆகிய 3 சலுகைகளையும் ஒரே திட்டத்தின் கீழ் வழங்கிவருகிறது. இப்படி ரூ.665 முதல் ரூ.1,350 வரையில் 4 திட்டங்களை கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சேவைகள் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது.

ஏசிடி ரூ 655 திட்ட விவரங்கள் (ACT Rs 665 Plan Details): இதுவொரு பேசிக் லெவல் பிராட்பேண்ட் திட்டமாகும். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 50 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை வழங்கப்படும். மாதத்துக்கு அதிகபட்சமாக 740 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அதன்பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவை கொடுக்கப்படுகிறது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (SunNXT) மற்றும் யூப்டிவி (YuppTV) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஏசிடி ஸ்ட்ரீம் டிவி 4கே (ACT Stream TV 4K) பாக்ஸ் மூலம் 300+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்.
ஏசிடி ரூ 950 திட்ட விவரங்கள் (ACT Rs 950 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்திலும் ஓடிடி (OTT), டேட்டா (Data) மற்றும் லைட் டிவி சேனல்கள் (Live TV Chennels) சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை வழங்கப்படும். அதிகபட்சமாக 1500 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்.

இந்த 1500 ஜிபிக்கு பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா வேகம் குறைக்கப்படும். இந்த திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சன்நெக்ஸ்ட் மற்றும் யூப்டிவி ஆகிய ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், சோனிலிவ் (SonyLiv) சந்தாவும் கொடுக்கப்படுகிறது. அதேபோல 300+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்.
ஏசிடி ரூ 1050 திட்ட விவரங்கள் (ACT Rs 1050 Plan Details): இந்த திட்டத்திலும் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். அதிகபட்சமாக 1500 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். முந்தைய திட்டத்தை போலவே 2 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டாவும் கொடுக்கப்படுகிறது.
300+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ள முடியும். இந்த திட்டத்தின் ஓடிடி சேவைகளை பார்க்கையில் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், முந்தைய திட்டத்தை போலவே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சன்நெக்ஸ்ட் மற்றும் யூப்டிவி ஆகிய ஆப்களையும் பயன்படுத்த கொள்ளலாம்.
ஏசிடி ரூ 1350 திட்ட விவரங்கள் (ACT Rs 1350 Plan Details): இந்த பிராட்போண்ட் திட்டத்தில் அதிகப்படியான சலுகைகள் வழங்கப்படுகின்றன. நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, சன்நெக்ஸ்ட் மற்றும் யூப்டிவி ஆகியவற்றின் சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல 300+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதிகபட்சமாக 3300 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். அதன்பிறகு 2எம்பிபிஎஸ்க்கு டேட்டா வேகம் குறைக்கப்படும். இந்த 4 திட்டங்களுக்கும் 3 மாத வேலிடிட்டி மட்டுமே கிடைக்கிறது. அதாவது, ஒரு மாத கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு சேர்த்து கட்டினால் சேவை வழங்கப்படும். ஜிஎஸ்டி, இன்ஸ்டாலேஷன் கட்டணம் இருக்கும்.


Click it and Unblock the Notifications








