கேபிள் டிவிக்கு கும்பிடு.. ரூ.649-க்கு கதை முடிந்தது.. 300 டிவி சேனல்கள்.. 4 ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் டேட்டா!
டிவி சேனல்கள், ஓடிடி மற்றும் பிராட்பேண்ட் டேட்டா சேவைகளை ஒரே திட்டத்தில் வழங்குவது மட்டுமல்லாமல் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு நிகராக கம்மியான விலைக்கு ஏசிடி பிராட்பேண்ட் திட்டங்கள் (ACT Broadband Plan) கிடைக்கின்றன. வெறும் ரூ.649 முதல் திட்டங்கள் கொடுப்பது மிரளவைக்கிறது.
ஏசிடி ரூ 649 திட்ட விவரங்கள் (ACT Rs 649 Plan Details): இந்த திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ப்ரீ ரூட்டர் (Free Router) பெற்று கொள்ளலாம். இந்த ரூட்டர் மூலம் மல்டி-டிவைஸ் கனெக்டிவிட்டி (Multi-Device Connectivity) சப்போர்ட் கிடைக்கிறது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (SunNXT) மற்றும் யூப்டிவி (YuppTV) ஆகிய ஓடிடி தளங்களின் சந்தா கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், 300+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இதற்காக ப்ரீ ரூட்டர் போலவே ஏசிடி ஸ்ட்ரீம் டிவி 4கே (ACT Stream TV 4K) பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஏசிடி ரூ 699 திட்ட விவரங்கள் (ACT Rs 699 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் லைவ் டிவி சேனல்கள் சலுகைகள் கிடையாது. ஓடிடி மற்றும் டேட்டா சலுகை மட்டும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 40 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை வழங்கப்படுகிறது. நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி ஆப்களி சந்தா கிடைக்கிறது.
ஏசிடி ரூ 849 திட்ட விவரங்கள் (ACT Rs 849 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் கூடுதல் டேட்டா வேகம் மற்றும் கூடுதல் ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, 80 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சன்நெக்ஸ்ட் மற்றும் யூப்டிவி ஆகிய ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 300+ டிவிகளை பார்த்து கொள்ளலாம். ஆகவே, இந்த திட்டத்தில் செட்-டாப் பாக்ஸ்-க்கு நிகரான டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் பெறலாம்.
ஏசிடி ரூ 899 திட்ட விவரங்கள் (ACT Rs 899 Plan Details): இந்த திட்டத்தில் நெட்பிளிக்ஸ் சந்தா கிடையாது. இருப்பினும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, சன்நெக்ஸ்ட் மற்றும் யூப்டிவி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல 300+ டிவி சேனல் சலுகை கிடைக்கிறது. முந்தைய திட்டத்தைவிட கூடுதல் டேட்டா வேகம் கிடைக்கிறது. ஆகவே, 100எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகையை பெறலாம்.
ஏசிடி ரூ 1049 திட்ட விவரங்கள் (ACT Rs 1049 Plan Details): ஏசிடி திட்டங்களில் ஓடிடி மற்றும் டேட்டா சலுகையில் இந்த திட்டத்தில் மட்டுமே அதிகப்படியான நன்மைகளை கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 150 எம்பிபிஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
ஆகவே, மொபைல், லேப்டாப், டிவி ஆகிய மல்டி டிவைஸ் கனெக்டிவிட்டியிலும் டேட்டா வேகம் பட்டையை கிளப்பும். அதேபோல நெட்பிளிக்ஸ், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, சன்நெக்ஸ்ட், யூப்டிவி ஆகிய ஆப்களின் சந்தா மற்றும் 300+ லைவ் டிவி சேனல்கள் சந்தா கிடைக்கிறது.
மேற்கூறிய திட்டங்கள் கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு வழங்கப்படுகின்றன. இதேபோல சென்னைக்கு கூடுதல் விலை மற்றும் டேட்டா வேகத்தின் அடிப்படையில் பிரத்யேக திட்டங்கள் இருக்கின்றன. ஏசிடி பிராட்பேண்ட் சேவைகள் இப்போதைக்கு தமிழ்நாட்டின் இந்த 2 மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கின்றன.
இந்த அனைத்து திட்டங்களுக்கும் ஒரு மாதம் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், திட்டங்களை பெற வேண்டுமானால், குறைந்தது 3 மாத வேலிடிட்டிக்கான பணத்தை முழுவதும் செலுத்த வேண்டும். ஜிஎஸ்டி தொகையும் வசூலிக்கப்படலாம். மேலும், அனைத்து திட்டங்களிலும் 2 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபேர் யூசேஜ் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications