Home
News

இனி 5 மடங்கு.. ACT Fiber கஸ்டமர்களுக்கு குட் நியூஸ்.. எக்ஸ்ட்ரா பணம் செலுத்தாமல் கிடைக்கும் நன்மை!

இந்தியாவின் முன்னணி இண்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர்களில் (Internet service provider - ISP) ஒன்றான ஆக்ட் ஃபைபர்நெட் (ACT Fibernet) நிறுவனம் ஆனது, அதன் பிராட்பேண்ட் கஸ்டமர்களிடம் இருந்து எந்த விதமான எக்ஸ்ரா கட்டணமும் வாங்காமல் ஒரு நன்மையை வழங்க உள்ளது.

ஆக்ட் ஃபைபர்நெட் நிறுவனம் அதன் ஸ்மார்ட் வைஃபை தொழில்நுட்பம் (Smart Wi-Fi technology) மூலம், தனது கஸ்டமர்களுக்கான பிராட்பேண்ட் அனுபவத்தை மேம்படுத்த உள்ளதாக கூறி உள்ளது. இந்த பிராண்டின் ஸ்மார்ட் வைஃபை தொழில்நுட்பம் ஆனது ஜிப்பியால் (Zippy) இயக்கப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இனி 5 மடங்கு.. ACT Fiber கஸ்டமர்களுக்கு குட் நியூஸ்!

முன்னரே குறிப்பிட்டபடி இந்த தொழில்நுட்பத்திற்காக வாடிக்கையாளர்கள் கூடுதலாக எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியது இல்லை. இது ஆக்ட் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கான பின்தளத்தில் (backend) தடையின்றி செயல்படும் மற்றும் ஆக்ட் கஸ்டமர்களின் பிராட்பேண்ட் அனுபவம் ஆனது முடிந்தவரை சிறப்பாக இருப்பதை உறுதி செய்யும்.

அதாவது ஸ்மார்ட் வைஃபை தொழில்நுட்பம் ஆனது டிவைஸ் செயல்திறனை புத்திசாலித்தனமாக நிர்வகிக்க உதவும் என்றும், மேலும் இது டிவைஸ்களில் 5 மடங்கு வேகத்தை வழங்கும் என்றும், கூடவே க்யூஓஇ (QoE) என்கிற குவாலிட்டி ஆப் எக்ஸ்பீரியன்ஸில் (Quality of experience) 17% முன்னேற்றத்தையும் வழங்குமென்று கூறப்படுகிறது.

இன்னும் டெக்னீக்கல் ஆக சொல்ல வேண்டுமென்றால் - மிகவும் உகந்த அனுபவத்தை வழங்க ஆக்ட் ஸ்மார்ட் வைஃபை ஆனது புத்திசாலித்தனமாக 2.4 ஜிஹாஹெர்ட்ஸ் மற்றும் 5 ஜிஹாஹெர்ட்ஸ் பேண்டுகளுக்கு இடையில் டிவைஸ்களை மாற்றுகிறது. இதன் விளைவாக ஆக்ட் பிராட்பேண்டின் வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட மொபைல்கள் மற்றும் லேப்டாப்கள் ஆனது 5 மடங்கு சிறந்த செயல்திறனை வழங்கும்.

ஆக்ட் நிறுவனத்தின் ஸ்மார்ட் வைஃபை பயன்படுத்தப்பட்ட பிறகு, மரபு சார்ந்த ஸ்மார்ட் டிவிகள் (Legacy Smart TV ) போன்ற பழைய டிவைஸ்களுடன் கூட, இணைப்பு நிலைத்தன்மை (Connection stability) மற்றும் பதிலளிக்கும் தன்மையில் (Responsiveness) 3 மடங்கு சிறந்த முன்னேற்றம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி ஆக்ட் ஃபைபர்நெட்டின் துணைத்தலைவர் ஆன நவீன் நஹர் கூறுகையில், வீடுகளும் அலுவலகங்களும் பெருகிய முறையில் டிஜிட்டல் ஆகி வருவதால், வாடிக்கையாளர்கள் அதிவேக இணையத்தை விட அதிகமாக எதிர்பார்க்கிறார்கள், டிவைஸ்கள் முழுவதும் நிலைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் தடையற்ற செயல்திறனை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறினார்

மேலும் இந்த அறிவிப்பு (ஸ்மார்ட் வைஃபை தொழில்நுட்பம்) எங்கள் பயனர்கள் ஏற்கனவே அனுபவித்து வருவதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது: ஜிப்பியால் இயக்கப்படும் ஸ்மார்ட் வைஃபை, ஒரு பிரீமியம் மேம்படுத்தல் அல்ல, ஆனால் ஏற்கனவே உள்ள பிராட்பேண்ட் திட்டங்களின் திறனை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும் என்றும் கூறினார்

கூடவே டிவைஸ் கனெக்ட்விட்டி மற்றும் சிக்னல் ஒதுக்கீட்டை தானாக நிர்வகிப்பதன் மூலம், இது தடையற்ற ஸ்ட்ரீமிங், தாமதமில்லாத கேமிங் மற்றும் மென்மையான வீடியோ கால்களை உறுதி செய்கிறது - மிகவும் பரபரப்பான வீடுகளில் கூட. இது மக்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் ஹோம் கனெக்ட்விட்டி தொழில்நுட்பத்தின் எதிர்காலம் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் கூறினார்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது மொபைல் நெட்வொர்க்குகள் கவரேஜ் இடைவெளிகளை கையாளும் முறையை மாற்றக்கூடிய, கவரேஜ் பலவீனமாக உள்ள பகுதிகளுக்கு, குறிப்பாக உட்புறங்களுக்கு 5ஜி சிக்னல்களை திருப்பி அனுப்ப வடிவமைக்கப்பட்ட பேனல்களான இன்டெலிஜென்ட் ரிஃப்ளெக்டிங் சர்ஃபேஸ்களை (Intelligent Reflecting Surfaces - IRS) நிறுவனம் சோதித்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ஐஆர்எஸ் ஆனது ஒரு ஜியோ பயனருக்கு எளிமையான மாற்றமாக, அதே சமயம் கவனிக்கத்தக்க மேம்பாடாக இருக்கும். உங்கள் வீட்டின் மூலைகளில் சரியாக கிடைக்காத வீடியோ கால் திடீரென்று சரியாக இயங்கக்கூடும். கால் ட்ராப் குறையக்கூடும். கிட்டத்தட்ட வீடுகளுக்குள் பயனற்றதாக இருக்கும் எம்எம்வேவ் வேகம் ஆன்ட்டி ஒருவழியாக நடைமுறைக்கு வரக்கூடும். ஆக்ட் பிராட்பேண்டின் ஸ்மார்ட் வைஃபை தொழில்நுட்பத்தை போலவே, இதற்காகவும் ஜியோ வாடிக்கையாளர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை!

More from GizBot

Best Mobiles in India

English summary
ACT Fibernet Smart Wi Fi technology delivering up to 5x Broadband network speed to mobiles laptops
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X