Home
News

மதுரையில் ஆக்ட் ஃபைபர்நெட் சேவை துவக்கம் - இரண்டு திட்டங்கள் அறிவிப்பு.!

ஆக்ட் சில்வர் திட்டத்தில் 150 ஜிபி டேட்டா 50 எம்.பி.பி.எஸ். வேகத்தில் வழங்கப்படுகிறது

By Meganathan S

ஆக்ட் ஃபைபர்நெட் சேவைகள் மதுரையில் துவங்கப்பட்டுள்ளது. ஆக்ட் ஃபைபர்நெட் ரீடெயில் மற்றும் எஸ்.ஓ.ஹெச்.ஓ. (அதாவது சிறிய அலுவலகம், வீட்டு அலுவலகம்) வாடிக்கையாளர்களுக்கான பிராட்பேன்ட் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரீடெயில் சலுகையின் படி இரண்டு பிராட்பேன்ட் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரையில் ஆக்ட் ஃபைபர்நெட் சேவை துவக்கம் - இரண்டு திட்டங்கள் அறிவிப்பு

ஆக்ட் சில்வர் திட்டத்தில் 150 ஜிபி டேட்டா 50 எம்.பி.பி.எஸ். வேகத்தில் வழங்கப்படுகிறது, இதற்கான கட்டணம் ரூ.599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக்ட் கோல்டு திட்டத்தில் 300 ஜிபி டேட்டா 100 எம்.பி.பி.எஸ். வேகத்தில் ரூ,799 விலையில் வழங்கப்படுகிறது.

எஸ்.ஓ.ஹெச்.ஓ. திட்டத்தில் 600 ஜிபி டேட்டா 100 எம்.பி.பி.எஸ். வேகத்தில் ரூ.1499 விலையில் வழங்கப்படுகிறது. ஆக்ட் எஸ்.ஓ.ஹெச்.ஓ. இன்கிரெடிபிள் 1000 ஜிபி டேட்டா 150 எம்.பி.பி.எஸ். வேகத்தில் ரூ.1,999 விலையில் வழங்கப்படுகிறது.

மதுரையில் ஆக்ட் ஃபைபர்நெட் சேவை துவக்கம் - இரண்டு திட்டங்கள் அறிவிப்பு

"தமிழ் நாட்டின் மிகமுக்கிய நகரங்களில் ஒன்றாக மதுரை இருக்கிறது. மேலும் குறுகிய காலக்கட்டத்தில் இந்த நகரம் கல்வி மற்றும் தொழிற்வளர்ச்சி போன்றவற்றில் மிகமுக்கிய மையமாக உருவெடுத்து இருக்கிறது. இதன் காரணமாக, மக்கள் டிஜிட்டல் தளத்தில் அதிக ஆர்வம் செலுத்தத் துவங்கியுள்ளனர். இதனாலேயே இங்கு சீரான பிராட்பேன்ட் திட்டத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. எங்கது நோக்கம், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அதிவேக பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்த வேண்டும் என்பது தான். அந்த வகையில் மதுரையில் சேவை துவங்கியிருப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்," என அடிரா கன்வெர்ஜன்ஸ் டெக்னாலஜிஸ் லிமிட்டெட் நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் சந்தீப் குப்தா தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஆக்ட் ஃபைபர்நெட் சேவை வாரங்கல் நகரில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆக்ட் ஸ்விஃப்ட் மற்றும் ஆக்ட் ரேப்பிட் என இரண்டு திட்டங்களை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இவற்றின் துவக்க விலை ரூ.549 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், பயனர்களுக்கு அதிகபட்சம் 400 ஜிபி டேட்டா சுமார் 50 எம்.பி.பி.எஸ். வேகத்தில் கிடைக்கும்.

மதுரையில் ஆக்ட் ஃபைபர்நெட் சேவை துவக்கம் - இரண்டு திட்டங்கள் அறிவிப்பு

நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும், இன்டர்நெட் வேகம் 512 கே.பி.பி.எஸ். ஆக குறைக்கப்படும். இதேபோன்று ரூ.999 விலையில் கிடைக்கும் மற்றொரு திட்டத்தில் 800 ஜிபி டேட்டா 100 எம்.பி.பி.எஸ். வேகத்தில் வழங்கப்படுகிறது. இதில் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 1 எம்.பி.பி.எஸ். ஆக குறைக்கப்படும்.
Best Mobiles in India

English summary
ACT Fibernet launches its services in Madurai introduces two plans: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X