1ஜிபிபிஎஸ் வேகத்தில் ஆக்ட் பைபர்நெட் பிராட்பேண்ட் சேவை.!

இந்த சேவையின் விலை என்ன.?? நன்மைகள் என்ன.?

|

ஒரு புதிய வளர்ச்சி திட்டத்தின் கீழ் பைபர்நெட் (Fibernet) இந்தியாவில் அதன் 1 ஜிபிபிஎஸ் (Gbps) வேகத்திலான கம்பி வழியிலான பிராட்பேண்ட் இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் 10 நகரங்களில் அறிமுகம் செய்யப்படும் நோக்கத்தில் முதலில் ஹைதராபாத் நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த உயர் வேக இணையம் ஆனது ஒரு 1டிபி (டெராபைட்) என்ற தரவு எல்லை கொண்டுள்ளது. இந்த சேவையின் விலை என்ன.?? நன்மைகள் என்ன.

1ஜிபிபிஎஸ் வேகத்தில் ஆக்ட் பைபர்நெட் பிராட்பேண்ட் சேவை.!

மிக விரைவில் மேலும் 10 இந்திய நகரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த 1 ஜிபிபிஎஸ் கம்பி இணைய சேவையானது மாதத்திற்கு ரூ.5,999/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் படி இது தொடக்கங்களுக்கான முன்னோட்டமாகும், சில்லறை மையங்கள், மற்றும் இணைய நிறுவனங்களை இலக்காக கொண்டு களமிறங்கும் இந்த் புதிய சேவை மூலம் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

"இந்த சேவையின் கிடைக்கும் வேகத்தில் பயனர்கள் விநாடிகளில் ஒரு முழு திரைப்படத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்கிறது நிறுவனம்.தென்னிந்தியாவை முதன்மையாக கொண்ட இந்நிறுவனம் 1.2 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவின் மூன்றாவது பெரிய நான்-டெல்கோ ஐஎஸ்பி தொலைதொடர்பு நிறுவனமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
கூகுள் ப்ளே ஸ்டோரில் வாரம் ஒரு இலவச ஆப் : புதிய அம்சம் இணைப்பு.!
ப்ரைம் மெம்பருக்கு சக்கரை பொங்கல், மற்றவர்களுக்கு வெறும் பொங்கல்.!

Best Mobiles in India

Read more about:
English summary
ACT Fibernet Launches 1Gbps Wired Broadband Service in Hyderabad, 10 More Cities to Get It Soon. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X