Home
News

10 பைசா செலவு இல்லாம 500Mbps ஸ்பீட்.. ஷாக் ஆன ஜியோ.. ஆஃப் ஆனது ஏர்டெல்.. ACT அறிவித்துள்ள 3 இலவசங்கள்!

பிரபல இண்டர்நெட் சேவை வழங்குநரான ஆக்ட் ஃபைபர்நெட் (ACT Fibernet) நிறுவனமானது, அதன் சந்தாதாரர்களுக்கு 3 சுவாரஸ்யமான இலவச சலுகைகளை (Free Offer) அறிவித்து உள்ளது. அதென்ன சலுகைகள்? அதை பெறுவது எப்படி? இந்த சலுகைகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு கிடைக்கும்? இதோ விவரங்கள்:

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை (Independence Day 2023) கொண்டாடும் வகையில் ஆக்ட் ஃபைபர்நெட் 3 இலவச சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் 2023 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி (August 15th - 31st 2023) வரை அணுக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 பைசா செலவு இல்லாம 500Mbps ஸ்பீட்.. ACT அறிவித்துள்ள 3 இலவசங்கள்!

ஆக்ட் ஃபைபர்நெட் அறிவித்துள்ள சலுகையின் கீழ் அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஸ்பீட் அப்கிரேட் (Free Speed Upgrade) கிடைக்கும். அதாவது 10 பைசா செலவு இல்லாமல் அவர்களால் தங்களுடைய பிராட்பேண்ட் (Boradband) திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீடை (Internet Speed) அதிகரிக்க முடியும்.

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் - ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 31 வரை - ஆக்ட் ஃபைபர்நெட் ஆப்பில் (ACT Fibernet App) உள்ள சுதந்திர தின சலுகை பேனரை (Banner) கிளிக் செய்ய வேண்டும். அவ்வளவு தான், உங்களுடைய இண்டர்நெட் ஸ்பீட் ஆனது ஆட்டோமேட்டிக் ஆக அப்கிரேட் செய்யப்படும்.

இந்த சலுகையை அணுகுவதற்கு முன் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆக்ட் ஃபைபர்நெட் ஆப் ஆனது லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு (Latest Version) அப்டேட் ஆகி இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். ஒருவேளை நீங்கள் அப்டேட் ஆகாத பழைய ஆப்பை பயன்படுத்தினால், அதில் சுதந்திர தின சலுகை பேனரை உங்களால் காண முடியாமல் போகலாம்.

யாருக்கு என்னென்ன அளவிலான ஸ்பீட் அப்கிரேட் கிடைக்கும் என்று கேட்டால்.. 100எம்பிபிஎஸ்-க்கும் குறைவான இண்டர்நெட் ஸ்பீட் கொண்ட வாடிக்கையாளர்கள் 100எம்பிபிஎஸ் வேகத்திற்கு மேம்படுத்தப்படுவார்கள். அதேபோல 100 முதல் 300எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீட்டை வழங்கும் திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 300எம்பிபிஎஸ்-க்கு மேம்படுத்தப்படுவார்கள்.

கடைசியாக 300எம்பிபிஎஸ் முதல் 500எம்பிபிஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீட்டை அனுபவிக்கும் வாடிக்கையாளர்கள் 500எம்பிபிஎஸ்-க்கு மேம்படுத்தப்படுவார்கள். கூடுதலாக ஒரு சில இலவச நன்மைகளை வழங்கும் மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஆக்ட் ஃபைபர்நெட்டின் இலவச ஸ்பீட் அப்கிரேட் ஆனது நிச்சயம் வித்தியாசமான ஒரு சலுகை என்பதில் சந்தேகமே வேண்டாம்.

தமிழ்நாட்டில் கிடைக்கும் ஆக்ட் ஃபைபர்நெட் திட்டங்களை (ACT Fibernet Plans Tamil Nadu) பொறுத்தவரை, இந்நிறுவனம் 2 பிரிவுகளின் கீழ் மொத்தம் 11 பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. எண்டர்டெயின்மெண்ட் பிளான்கள் (Entertainment Plans) பிரிவின் கீழ் ரூ.649, ரூ.699, ரூ.849, ரூ.999, ரூ.1049 மற்றும் ரூ.1325 என்கிற 6 திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

மேற்கண்ட 6 திட்டங்களும் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜீ5 (Zee5), சன் நெக்ஸ்ட் (Sun Nxt), ஜியோ சினிமா (Jio Cinema) உட்பட பல வகையான ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்களுடன் சேர்த்து (விலைக்கு ஏற்றபடி) 50எம்பிபிஎஸ் முதல் 300எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை வழங்குகின்றன.

மறுகையில் உள்ள ஆக்ட் ஃபைபர்நெட் ஸ்பீட் பிளான்ஸ் (Speed Plans) பிரிவின் கீழ் மொத்தம் 5 திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அவற்றின் விலைகள் ரூ.540, ரூ.820, ரூ.1020, ரூ.1999 மற்றும் ரூ.2999 ஆகும். இவைகள் அனைத்துமே இலவச ரூட்டர் (Free Router) மற்றும் இலவச ஓடிடி (Free OTT) நன்மைகள் உடன் (இதுவும் கூட விலைக்கு ஏற்றபடி) 50எம்பிபிஎஸ் முதல் 1000எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை வழங்குகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
ACT Fibernet Free Speed Upgrade Offer Customers Just Need to Click a Banner in ACT Fibernet App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X