Home
News

அடிச்சு தூக்கும் ACT Fibernet.. இலவச ரூட்டர், 450 சேனல், 750GB டேட்டா, OTT.. இனி Jio, Airtel எதுக்கு?

ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக வேகமாக வளர்ந்து வரும் இணைய சேவை வழங்குநரான ஆக்ட் பைபர்நெட் (ACT Fibernet) நிறுவனமானது, தனது பயனர்களுக்கு இலவச ரூட்டர், ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar), ஜீ5 (ZEE5) மற்றும் பலவற்றை வழங்கும் ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை கொண்டுள்ளது.

ஆக்ட் பைபர்நெட் அந்த இந்தியா முழுவதும் ஓடிடி சலுகைகளுடன் கூடிய பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. ஆனால் நாம் இங்கே விரிவாக பார்க்கவுள்ளது - பெங்களூருவில் கிடைக்கும் ஆக்ட் பேசிக் போனான்சா திட்டத்தை (ACT Basic Bonanza Plan) பற்றித்தான். பெங்களூரு - ஆக்ட் பைபர்நெட் நிறுவனத்தின் முக்கிய சந்தைகளில் ஒன்றாகும். எனவே தான் இந்நிறுவனம் இங்கு ஸ்பெஷல் சலுகைகளை வழங்குகிறது.

ACT Fibernet: இலவச ரூட்டர், 450 சேனல், 750GB டேட்டா.. எந்த திட்டம்?

ஆக்ட் பேசிக் போனான்சா திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: ஆக்ட் பேசிக் போனான்சா திட்டமானது 50எம்பிபிஎஸ் (50Mbps) என்கிற இணைய வேகத்துடன் வருகிறது. இந்த திட்டம் 750ஜிபி மொத்த எப்யுபி (FUP) டேட்டாவை வழங்குகிறது. இதனுடன் ஆக்ட் நிறுவனம் ஆனது இலவச ரூட்டரையும் வழங்குகிறது.

கூடுதலாக ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் (SunNXT), யப்டிவி (YuppTV) போன்ற ஓடிடி தளங்களுக்கான அணுகலைகளையும் மற்றும் 450 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் வழங்குகிறது. இந்த திட்டம் மாதத்திற்கு ரூ.675 க்கு என்கிற செலவில் அணுக கிடைக்கிறது. இந்த திட்டத்தின் பைனல் பில்லிங்கில், கூடுதல் வரிகள் மற்றும் கட்டணங்கள் சேர்க்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

ஒருவேளை நீங்கள் ஓடிடி சலுகைகளுடன் இன்னும் அதிகமான இண்டர்நெட் ஸ்பீடை விரும்பினால், ஆக்ட் பிராட்பேண்ட் சேவையின் கீழ் கிடைக்கும் 100எம்பிபிஎஸ் (100Mbps) பிளானை தேர்வு செய்யலாம். இது வரம்பற்ற டேட்டாவுடன் வரும் ஆக்ட் ப்ரீமியம் போனான்சா ஆல் இன் _ வைஃபை பிளான் (ACT Premium Bonanza_All In + WiFi Plan) ஆகும்

முன்னரே குறிபிட்டபடி இது 100எம்பிபிஸ் ஸ்பீட் உடன் வரும் திட்டமாகும். இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்ட ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை - இது நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் (Amazon Prime), ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, யப்டிவி, சன் நெக்ஸ்ட் உடன் வரும். மேலும் 450 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் வழங்கும். இந்தத் திட்டம் மாதத்திற்கு ரூ.1,049 க்கு கிடைக்கிறது. இது நிறுவனத்திடமிருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும்

முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டங்கள் பெங்களூரில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இந்த திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்பற்ற டேட்டா என்பது உண்மையிலேயே வரம்பற்றது என்று அர்த்தமல்ல என்பதையும் நினைவில் கொள்ளவும். வரம்பற்ற டேட்டா கூட அதிவேக டேட்டா பயன்பாட்டு வரம்பை கொண்டுள்ளது. ஆக்ட் ஃபைபர்நெட் இணைப்புகளை பெற விரும்புபவர்கள் ஆக்ட் நிறுவனத்தின் வலைத்தளம் மூலம் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யலாம்.

விரைவில் ஜியோ, ஏர்டெல் போஸ்ட்பெயிட் விலை உயர்வு? ரூ.249 மதிப்புள்ள பேசிக் ப்ரீபெய்ட் திட்டங்கள் நீக்கப்பட்டதை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களின் போஸ்ட்பெயிட் திட்டங்களின் விலைகள் நேரடியாக (Postpaid Plans Tariff Hike) உயரத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆனது வழக்கமாக சுமார் 2 ஆண்டுகளில் கட்டணங்களை முழுமையாக உயர்த்தியுள்ளன; இங்கும் அங்கும் சிறிய மாற்றங்களையாவது செய்து கொண்டே இருக்கின்றன. இதன் பொருள், அடுத்த விலை உயர்வு 2026 ஆம் ஆண்டில் ஏதாவது ஒரு மாதத்தில் அல்லது காலாண்டில் நடக்கலாம். நினைவூட்டும் வண்ணம் கடைசி விலை உயர்வு ஜூலை 2024 இல் அமலுக்கு வந்தது. அது மிகவும் மோசமான (அதிகப்படியான) விலை உயர்வாக இருந்தது. ஜியோ, ஏர்டெல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
ACT Basic Bonanza Rs 675 Plan With Free Router OTT 450 TV Channels 750GB Data Explained
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X