Home
News

அள்ளி கொடுக்கும் ACT.. ரூ.1000 பிளானுக்கு குட்பை.. கம்மி விலையில் இலவச ரூட்டர், 750GB, 4 ஓடிடி, 450 TV சேனல்!

மாதந்தோறும் ரூ.1000 க்கு மேலான பிராட்பேண்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்து கட்டுப்படி ஆகவில்லையா? வேகமாக வளர்ந்து வரும் இணைய சேவை வழங்குநரான ஆக்ட் ஃபைபர்நெட் (ACT Fibernet) ஆனது இப்போது ரூ.700 க்கும் குறைவான விலையில் ஓடிடி (OTT) சலுகைகளுடன் 50எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் ஸ்பீடையும் வழங்குகிறது.

நாம் இங்கு பேசும் திட்டம் - ரூ.675 மதிப்புள்ள ஆக்ட் பேஸிக் போனான்ஸா 50 எம்பிபிஎஸ் திட்டமாகும். இது பெங்களூருவில் மட்டுமே கிடைக்கிறது. அதாவது மற்ற வட்டங்களில் உள்ள திட்டங்கள் சற்று மாறுபட்ட விலை நிர்ணயம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கலாம். வீட்டிலிருந்து வேலை செய்யவும், பொழுதுபோக்கு அணுகலை பெற விரும்பும் பலருக்கும் இந்த திட்டம் மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.

அள்ளி கொடுக்கும் ACT.. ரூ.1000 பிளானுக்கு குட்பை!

நன்மைகளை பொறுத்தவரை ஆக்ட் பேஸிக் போனான்ஸா 50 எம்பிபிஎஸ் திட்டமானது இலவச ரூட்டருடன் வருகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே இந்த திட்டம் பயனர்களுக்கு 50 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் 750ஜிபி அளவிலான எப்யுபி (FUP) டேட்டா கிடைக்கும்

இந்த திட்டம் பயனர்களுக்கு ஓடிடி (ஓவர்-தி-டாப்) நன்மைகளையும் வழங்குகிறது. இதன்கீழ் - ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar), ஜீ5 (ZEE5), சன் நெக்ஸ்ட் (SunNXT), யப்டிவி (YuppTV) ஆகியவைகளுக்கான இலவச சந்தாக்கள் கிடைக்கும். மேலும் 450 க்கும் மேலான லைவ் டிவி சேனல்களும் கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ. 675 ஆகும். இறுதி பில்லிங்கிலும் வரி சேர்க்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆக்ட் பைபர்நெட்டின் கீழ் பயனர்கள் தேர்வு செய்யக்கூடிய மற்ற சில நல்ல திட்டங்களும் உள்ளன. பேஸிக் 50 எம்பிபிஎஸ் திட்டம் மட்டுமின்றி 200 எம்பிபிஸ் ஸ்பீட் உடன் கூடிய ஒரு திட்டமும் உள்ளது. இது பயனர்களுக்கு நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தாவும் கிடைக்கிறது. இதர திட்டங்களை பற்றிய விவரங்களுக்கு ஆக்ட் நிறுவனத்தின் வலைத்தளத்தை பார்வையிடவும்.

ரீசார்ஜ் விலை உயர்வின் விளிம்பில் டெலிகாம் நிறுவனங்கள்: விரைவில் மொபைல் ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு அமலுக்கு வரலாம் என்று வல்லுநர்கள் கணித்த சில நாட்களிலேயே, ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.189 திட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ரூ.10 விலை அதிகமுள்ள ரூ.199-ஐ அறிமுகம் செய்துள்ளது. வோடபோன் ஐடியாவானது அதன் 1 ஆண்டு திட்டத்தில் ரூ.250 விலை உயர்வை அறிவித்து ஷாக் கொடுத்துள்ளது

வோடாபோன் ஐடியா நிறுவனமானது வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்சலுகைகளை வழங்கும் அதன் வருடாந்திர திட்டங்களில் ஒன்றின் விலையை அதிகரித்துள்ளது. அது ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs.1999) ஆகும். தற்போது இது கூடுதல் சலுகைகளுடன் ரூ.2,249 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது (அல்லது) திருத்தப்பட்டு உள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.2,249 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புதிய ரூ.2,249 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் (நீங்கள் இருக்கும் வட்டத்தை பொறுத்து) 30 ஜிபி அல்லது 40 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.

இப்போதைக்கு முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே எந்த திட்டங்களின் மீதும் விலை உயர்வை அறிவிக்காமல் உள்ளது. ஆனால் எப்போது வேண்டுமானாலும் என்ன மாதிரியான வேண்டுமானாலும் வரலாம்.

ஏனென்றால் டிஜிட்.இன் தளத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, புரோக்கரேஜ் நிறுவனமான ஆக்சிஸ் கேபிடல் (Axis Capital) மற்றும் ஆய்வாளர் கௌரவ் மல்ஹோத்ரா (Gaurav Malhotra) ஆகியோர்கள் - டிசம்பர் 2025 முதல் ஜூன் 2026 க்குள் ரீசார்ஜ் கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என்று கணித்துள்ளனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ACT Basic Bonanza 50 Mbps Plan With 750GB Data OTT 450 Live TV channels
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X