Home
News

இதைவிட கம்மி விலைக்கு 200Mbps ஸ்பீட், OTT, 450 டிவி சேனல் கொடுக்குறவனுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் டா!

என்னப்பா சொல்றீங்க.. இவ்ளோ கம்மி விலைக்கு 200எம்பிபிஎஸ் ஸ்பீட் கொடுக்குறதே சூப்பர் மேட்டரு.. இதுல நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி, கூடவே 450 க்கும் மேற்பட்ட டிவி சேனலும் கிடைக்குமா.. என்று பல பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை வாய்பிளக்க வைக்கும் ஒரு பிளானை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்கவுள்ளோம்.

அது ஆக்ட் பிராட்பேண்ட்டின் பிளான் ஆகும். இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு, இலவச நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி சந்தாக்களுடன் இணைக்கப்பட்ட ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை வழங்குகிறது. கூடவே இந்த திட்டத்துடன் மெஷ் ரூட்டரையும் வழங்குகிறது.

இவ்ளோ கம்மி விலைக்கு 200Mbps ஸ்பீட், OTT, 450 டிவி சேனல்-ஆ!

ஆக்ட் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் ஸ்மார்ட் வைஃபையை (Smart WiFi) வழங்குவதாக கூறுகிறது. இது பவர் பேக் (Power Pack) என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மற்ற நகரங்களுடன் பெங்களூருவிலும் கிடைக்கிறது. மற்ற நகரங்களில் விலை மற்றும் பெயர் வேறுபட்டிருக்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் கிடைக்கும் ஆக்ட் பிராட்பேண்ட் 200 எம்பிபிஎஸ் பிளான்: இந்த திட்டத்தின் விலை ரூ.1,249 ஆகும். இந்த திட்டம் பயனர்களுக்கு நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவை வழங்குகிறது. கூடவே ஜியோ ஹாட்ஸ்டார் (JioHostar), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (SunNXT), யப்டிவி (YuppTV) மற்றும் 450 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் வழங்குகிறது

ஆக்ட் ஃபைபர்நெட் அதன் சேவைகளை முழுவதுமாக ஃபைபர் நெட்வொர்க்கில் வழங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்புவோருக்கும், 4கே தரத்தில் பொழுதுபோக்கு அல்லது ஓடிடி கன்டென்ட்களை ஆன்லைனில் பார்க்க விரும்புவோருக்கும் இந்த 200 எம்பிபிஎஸ் திட்டம் போதுமானதாக இருக்கும்

ரூ.1,249 திட்டம் 200 எம்பிபிஎஸ் (200Mbps) வேகத்துடன் வருகிறது. பின்னர் ரூ.949 மற்றும் ரூ.1,049க்கு 50 எம்பிபிஎஸ் மற்றும் 100 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்கும் பிற திட்டங்களும் உள்ளன. பயனர்கள் ரூ.1,549, ரூ.1,799, ரூ.2,299 மற்றும் ரூ.3,199 க்கு 400 எம்பிபிஎஸ், 500 எம்பிபிஎஸ், 600 எம்பிபிஎஸ் மற்றும் 1 ஜிபிபிஎஸ் திட்டங்களையும் பெறலாம். ஆக்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹை-எண்ட் ரூட்டரையும் வழங்குகிறது

நாட்டின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் ஆக்ட் நிறுவனம் தனது சேவைகளை வழங்குகிறது. மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து திட்டங்களுடனும் நெட்பிளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது. ஆக்ட் பிராட்பேண்ட் சற்று குறைவான ஓடிடி நன்மைகளுடன் இன்னும் பல திட்டங்களையும் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்குஓடிடி நன்மைகளை வழங்காத திட்டங்கள் கூட உள்ளன, அவைகள் டேட்டா நன்மையை மட்டுமே வழங்குகின்றன.

ஒருவேளை நீங்கள் ரூ.1000 க்கு மேல் அல்லது ரூ.1200 சே ; செலவு செய்ய விரும்பவில்லை என்றால். ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) ஆரம்ப நிலை ஃபேமிலி போஸ்ட்பெய்டு திட்டத்தை (Entry-Level Family Postpaid Plan) கருத்தில் கொள்ளலாம். இது வெறும் ரூ.449 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. 2 சிம் கார்டுகளுடன், அதாவது ஆளுக்கு ரூ.225 என்கிற மாதாந்திர செலவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

சுவாரசியமாக ஜியோவின் ரூ.449 திட்டம் - இந்தியா முழுவதும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது ஒரு ஃபேமிலி பிளானாகும்; அதாவது இது பல சிம் கார்டுகளுடன் வரும். ஆனால் அது எல்லாமே ஒரே பில்லின் கீழ் வரும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ரீசார்ஜ் செய்ய விரும்பாத்தவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.

ஜியோவின் ரூ.449 போஸ்ட்பெயிட் திட்டத்தின் நன்மைகள்: இதுஅன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 75 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இரண்டாம் நிலை சிம்மிற்கு - மாதத்திற்கு 5ஜிபி டேட்டா கிடைக்கும். கூடவே இரண்டாம் நிலை சிம் ஆனது வாய்ஸ் காலிங் சலுகைகளையும் பெறும்.. அதாவது கால்களுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படாது. ஒருவேளை உங்களுக்கு கூடுதல் சிம் தேவைப்பட்டால் - மாதத்திற்கு ரூ.150 வசூலிக்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஜியோ அன்லிமிடெட் 2025 சலுகையின் கீழ் அறிவிக்கப்பட்ட எல்லா நன்மைகளுமே கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ACT 200Mbps Broadband Plan With Free Netflix Prime Video 450 TV Channels For Rs 1249
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X