Home
News

அதிருது விலை.. கேமிங் பிரியர்கள் மிரளும் ஏசர் நைட்ரோ வி.. 16GB ரேம்.. NVIDIA கிராபிக்ஸ்.. என்ன பட்ஜெட்?

மிட்-ரேஞ்ச் விலையில் கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் என்விடியா ஜிபோர்ஸ் கிராபிக்ஸ், 16ஜிபி ரேம், ஃபுல்எச்டி டிஸ்பிளே, நைட்ரோ சென்ஸ் கீ மற்றும் விண்டோஸ் 11 போன்ற பக்காவான அம்சங்களுடன் ஏசர் நைட்ரோ வி (Acer Nitro V) கேமிங் லேப்டாப் விற்பனைக்கு வந்துள்ளது.

ஏசர் நைட்ரோ வி அம்சங்கள் (Acer Nitro V Specifications): இந்த கேமிங் லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல்எச்டி (FHD) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இதுவொரு ஏசர் கம்ஃபிவியூ எல்இடி பேக்லிட் டிஃஎப்டி எல்டிசி (Acer ComfyView LED-backlit TFT LCD) மாடல் டிஸ்பிளேவாகும்.

அதிருது விலை.. கேமிங் பிரியர்கள் மிரளும் ஏசர் நைட்ரோ வி லேப்டாப்!

இந்த லேப்டாப்பில் விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) ஓஎஸ் கொண்ட இன்டெல் கோர் ஐ5-13420எச் (Intel Core i5-13420H) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு 64 பிட் சிப்செட் மாடலாகும். அதோடு கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற வகையில், என்விடியா ஜிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 4050 (NVIDIA GeForce RTX 4050) கிராபிக்ஸ் ப்ராசஸர் வருகிறது.

இதில் 6 ஜிபி ஜிடிடிஆர்6 வீடியோ ரேம் (Video RAM) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏசர் கேமிங் லேப்டாப் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அதோடு எஸ்டி கார்டு சிலாட் கொண்டிருக்கிறது.

இன்பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் (Speaker And Microphone) கொடுக்கப்பட்டுள்ளது. 720p ரெசொலூஷன் கொண்ட டி-டைப் எச்டி கேமரா (T-Type HD) வருகிறது. அதோடு டெம்போரல் நாய்ஸ் ரெடக்சன் (Temporal Noise Reduction) சப்போர்ட் வருகிறது. இந்த லேப்டாப்பின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), இன்டெல் வயர்லெஸ் வை-பை 6 ஏஎக்ஸ்201 (Intel Wireless Wi-Fi 6 AX201) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB) போர்ட் வருகிறது. அதோடு ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஆர்ஜே45 கனெக்டர் (RJ45 Connector) கொண்டிருக்கிறது. மேலும் கே - லாக் (K - lock) போர்ட் உள்ளது. இந்த ஏசர் லேப்டாப்பில் பிரிஷியன் டச்பேட் (Precision Touchpad), நைட்ரோ சென்ஸ் கீ (Nitro Sense Key) கொடுக்கப்பட்டுள்ளது.

57 Wh சப்போர்ட் கொண்ட லித்தியம் பேட்டரி வருகிறது. இதற்காக 3 பின் 135W ஏசி அடாப்டர் (AC adapter) வருகிறது. இந்த லேப்டாப் பேட்டரியோடு சேர்ந்து 2.1 கிலோ எடை மட்டுமே கொண்டுள்ளது. ஷேல் பிளாக் (Shale Black) கலரில் விற்பனைக்கு வருகிறது.

இந்த ஏசர் நைட்ரோ வி கேமிங் லேப்டாப்பின் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.72,999 ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.79,990 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்களை ஏசர் இ-ஸ்டோர் (Acer E-Store) மற்றும் அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

இதற்கு ஒரு வருட இன்டர்நேஷனல் டிராவலர்ஸ் வாரண்டி (International Travelers Warranty) வழங்கப்படுகிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் நல்ல கிராபிக்ஸ் கார்டு, ரேம் மற்றும் டிஸ்பிளே கொண்ட கேமிங் லேப்டாப் வாங்க நினைப்பவர்களுக்கு, இந்த ஏசர் நைட்ரோ வி லேப்டாப் நல்ல தேர்வாக இருக்கும். இந்த லேப்டாப்கள் ஏசர் ஸ்டோர்களில் சற்று கம்மியான விலைக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Acer Nitro V Gaming Laptop With NVIDIA GeForce Graphics, 512GB Storage Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X