9.7-இன்ச் டிஸ்பிளேவுடன் ஏசர் க்ரோம்புக் டேப் 10 அறிமுகம்.!
இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை 329 டாலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்திய விலை மதிப்பில் ரூ.21,500-ஆக உள்ளது.
ஏசர் நிறுவனம் இப்போது க்ரோம்புக் டேப் 10 மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த சாதனத்தில் க்ரோம் ஒஎஸ் இட்ம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஐபேட் அறிமுகப்படுத்த தயாராக இருந்த நிலையில் இப்போது வெளிவந்துள்ள ஏசர் க்ரோம்புக் டேப் 10 அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

ஏசர் க்ரோம்புக் டேப் 10 அம்சங்கள் பொறுத்தவரை 9.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2048×1536 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெக்சா கோர் ஒபி1 செயலியைக் கொண்டுள்ளது இந்த ஏசர் க்ரோம்புக் டேப் 10 சாதனம், மேலும் ஆண்ட்ராய்டு க்ரோம் ஒஎஸ் கொண்டிருப்பதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ஏசர் க்ரோம்புக் டேப் 10.

இந்த சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
ஏசர் க்ரோம்புக் டேப் 10 சாதனத்திர் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
வைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக ஏசர் க்ரோம்புக் டேப் 10 சாதனத்தில் ஆண்ட்ராய்டு சார்ந்த செயலிகளை இயக்க மிக அருமையா இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை 329 டாலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்திய விலை மதிப்பில் ரூ.21,500-ஆக உள்ளது.

ஏசர் க்ரோம்புக் டேப் 10 சாதனத்தின் விற்பனை ஏப்ரல் முதல் வாரம் துவங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications