Home
News

ரூ.14,000 விட கம்மி விலையில் Laptop.. அட்டகாசமான அம்சத்துடன் Acer Aspire 3.. இங்க மட்டும் விலை ரொம்ப கம்மி..

ஏஸர் (Acer) நிறுவனம் இந்திய லேப்டாப் சந்தையை பிரட்டிப்போடும் படியான புதிய லேப்டாப் சாதனத்தை வெறும் ரூ.14,000 விலை முதல் அறிமுகம் செய்து மக்களை ஈர்த்துள்ளது. ஏஸர் நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப் மாடல் ஏஸர் ஆஸ்பையர் 3 (Acer Aspire 3) என்ற பெயருடன் சந்தைக்குள் விற்பனைக்கு வந்துள்ளது. சலுகை எதுவும் இல்லாமலே இதன் விலை 14000 ரூபாய் முதல் துவங்குகிறது என்றால், சில சிறப்பு சலுகைகளுடன் இதன் விலை இன்னும் எவ்வளவு மலிவானதாக இருக்குமென்று நீங்களே யோசித்து பாருங்கள்.

ஏஸர் நிறுவனம் உங்களுடைய தினசரி டாஸ்கை சிறப்பாக செய்து முடிக்க உதவும் ஒரு பவர்ஃபுல் லேப்டாப் சாதனத்தை மலிவு விலையில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. இந்த புதிய ஏஸர் ஆஸ்பையர் 3 லேப்டாப் (Acer Aspire 3 Laptop) சாதனம் 11.6" இன்ச் அளவு கொண்ட எச்டி ஏஸர் கம்ஃபிவியூ LED பேக்லைட் டிஸ்பிளேவுடன் வருகிறது.

ரூ.14,000 விட கம்மி விலையில் Laptop.. அட்டகாசமான Acer Aspire 3..

ரூ.14,000 விட கம்மி விலையில் Laptop.. அட்டகாசமான அம்சத்துடன் Acer Aspire 3:

இந்த புதிய ஏஸர் ஆஸ்பையர் 3 லேப்டாப் (Acer Aspire 3 Laptop) சாதனத்தின் டிஸ்பிளே 1366 x 768 பிக்சல் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த புதிய லேப்டாப் சாதனம் இன்டெல் செலெரோன் N1500 (Intel Celeron N4500)பிராசஸர் உடன் வருகிறது. இந்த சாதனம் இன்டெல் UHD கிராபிக்ஸ் (Intel UHD Graphics) ஆதரவை பெறுகிறது.

ஏஸர் ஆஸ்பையர் 3 (Acer Aspire 3) லேப்டாப் டிவைஸ் 8GB DDR4 ரேம் உடன் 16GB வரையிலான எக்ஸ்பெண்டபிள் ரேம் ஆதரவையும் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இது 128GB முதல் 1TB வரையிலான PCIe NVMe SSD ஸ்டோரேஜ் ஆதரவை பெறுகிறது. பயனர்களின் விருப்பத்திற்கேற்ற ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களை வாங்கி பயன்பெறலாம்.

ஏஸர் ஆஸ்பையர் 3 லேப்டாப் (Acer Aspire 3 Laptop):

இந்த புதிய Acer Aspire 3 மாடல் 38Wh Li-ion பேட்டரி ஆதரவை கொண்டுள்ளது. இது 8 மணி நேரம் வரையிலான பயன்பாட்டு நேரத்தை வழங்குகிறது. இது 3 Pin 36W AC அடாப்ட்டர் உடன் வருகிறது. இந்த புதிய Acer Aspire 3 லேப்டாப் சாதனத்தில் நிறுவனம் 720P ஆதரவை வழங்கும் HD வெப்கேம் அம்சத்தை வழங்கியுள்ளது. இதில் கேமரா பிரைவசி ஷட்டர் கூட வழங்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

உங்கள் லேப்டாப் வெப்கேமராவை பயன்படுத்தாத போது, அதன் கேமரா துளையை மறைத்து வைக்க உதவும் ஒரு சிறிய வகை முடியை இந்த சாதனம் கொண்டுள்ளது. இது உங்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த லேப்டாப் சாதனம் மைக்ரோசாப்ட் ப்ரேஸிஸன் சான்றளிக்கப்பட்ட டச்பேட் உடன் மல்டி கெஸ்ட்சர் சப்போர்ட் ஆதரவுடன் வருகிறது. இதில் நிறுவனம் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கரையும் வழங்கியுள்ளது.

ஏஸர் ஆஸ்பையர் 3 லேப்டாப் விலை (Acer Aspire 3 Laptop Price):

இந்த புதிய Acer Aspire 3 லேப்டாப் சாதனம் பளுஇடூத (Bluetooth v5.4), டூயல் பேண்ட் வைஃபை (dual-band Wi-Fi), USB 3.2 Gen 1 போர்ட்கள், USB Type-C போர்ட், HDMI போர்ட், மற்றும் மைக்ரோSD கார்டு ரீடர் (Micro SD card reader) போன்ற அம்சங்களை வழங்குகிறது. இந்த சாதனம் ஏஸர் கேர் சென்டர் (Acer Care Center) மற்றும் குயிக் ஆக்ஸஸ் சாப்ட்வேர் ஆதரவை கொண்டுள்ளது.

Acer Aspire 3 லேப்டாப் விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வேலை செய்கிறது. இது 1 கிலோ எடை உடன் ஸ்டீல் கிரேய் (Steel Grey) நிறத்துடன் 1 வருட வாரன்டியை பெறுகிறது. இதன் விலை பற்றி பேசுகையில்,

- Acer Aspire 3 8GB + 128GB மாடல் ரூ. 14,990
- Acer Aspire 3 8GB + 256GB மாடல் ரூ. 17,990
- Acer Aspire 3 8GB + 512GB மாடல் ரூ. 19,990
என்ற விலையிலும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது தற்போது பிளிப்கார்ட் தளம் வழியாக கூடுதல் வங்கி சலுகைகளுடன் இன்னும் மலிவான விலையில் இந்த லேப்டாப் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Acer Aspire 3 Laptop 8GB + 128GB Model Starting From Rs 14000 Price Range In Flipkart Buy Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X