55' இன்ச் ஸ்மார்ட் டிவி விலை இவ்வளவு கம்மியா? யோசிக்காம கம்மி காசில் பெரிய TV வாங்குங்க..
நீங்கள் தியேட்டர் சென்று செலவழிக்கும் காசை மிச்சம் செய்ய திட்டமிடுகிறீர்களா? அப்படியானல், உங்கள் வீட்டில் கட்டாயமாக ஒரு பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்டிவி இருக்க வேண்டும். பெரிய டிஸ்பிளே என்ற சொன்னதும் அதிக காசு செலவாகுமே என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றியிருக்கும்.
உங்கள் எண்ணத்திற்கு ஒரு வேகத்தடை போடுங்கள். பெரிய டிஸ்பிளே டிவியை மிகவும் குறைந்த விலையில் வாங்க ஒரு அரிய வாய்ப்பு தற்போது நமக்கெல்லாம் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நமக்கு உருவாக்கி கொடுத்திருப்பது ஏஸர் (Acer) நிறுவனமாகும். Acer நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஏஸர் அட்வான்ஸ்ட் ஐ சீரிஸ் (Acer Advanced I Series) ஸ்மார்ட் டிவி மூலம் நமக்கு கிடைக்கிறது.

ஏஸர் அட்வான்ஸ்ட் ஐ சீரிஸ் 55' இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Acer Advanced I Series 55-inch 4K Ultra HD Smart LED Google TV) இப்போது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலமாக இந்த டிவியை வாங்கலாம். நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய மாடல் எண் AR55GR2851UDFL என்பதாகும்.3
இந்த Acer 4K UHD Google TV மிகவும் ஸ்லிம்மான பேசல் மற்றும் ஃபிரேமை கொண்டுள்ளது. தியேட்டர் போன்ற வீடியோ மற்றும் ஆடியோ தரத்தை வழங்க இந்த ஸ்மார்ட் டிவியில் பல விதமான உயர் தர அம்சங்களை நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் வீடியோ தரம் பற்றி பேசுகையில், இது 55' இன்ச் அளவு கொண்ட 3840 x 2160 பிக்சல்களுடன் 1.0 பில்லியன் கலர் உடன் வருகிறது.
இந்த டிஸ்பிளே 420 பீக் பிரைட்னஸ் அம்சத்தை HDR 10+ உடனான HLG அம்சத்துடன் வருகிறது. இது 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது வாய்ஸ் அசிஸ்டன்ட் கண்ட்ரோல் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த புதிய ஏஸர் UHD 4K ஸ்மார்ட் டிவி வெப் ஓஎஸ் (Web OS) உடன் வருகிறது.

இது டால்பி அட்மோஸ் ஆடியோ அம்சத்துடன் வருகிறது. இதன் ஆடியோ தரம் பற்றி பேசுகையில், மிகவும் துல்லியமான மற்றும் கிரிஸ்டல் கிளியர் சவுண்ட் அனுபவத்தை தியேட்டர் போல் வழங்க இதில் 36W ஹை-ஃபெடிலிட்டி ஸ்பீக்கர்களை (High Fidelity Speaker) கொண்டுள்ளது. இது கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இயங்குகிறது.
இதில் 3 HDMI மற்றும் 2 USB போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவி இல் இன்னும் ஏராளமான அம்சங்கள் உள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய ஏஸர் UHD 4K ஸ்மார்ட் டிவி இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் ரூ.34,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. மற்ற பிராண்டுகளுடன் ஒப்பிடுகையில், 55; இன்ச் கொண்ட ஸ்மார்ட் டிவியின் விலை இவ்வளவு குறைவாக இருப்பது இந்த மாடலுக்கு மட்டுமே.


Click it and Unblock the Notifications








