பக்கா பட்ஜெட்ல Smart TV.. 52% நேரடி தள்ளுபடி.. ரூ.10,000 விலை.. ஒன்னு இல்லை இரண்டா வாங்கி போடுங்க..எந்த மாடல்?
அதிக செலவில்லாமல், ஒரு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் (Budget smartphone) வாங்கும் விலையில், உங்கள் வீட்டிற்கு தேவையான ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை (Smart TV) வாங்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால், இந்த லக்கி சான்ஸ் உங்களுக்கானது தான் மக்களே. ஏசர் (Acer) நிறுவனம் உருவாக்கி தயாரித்து விற்பனை செய்யும் புதிய ஸ்மார்ட் டிவி மாடலின் மீது இப்போது 52% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெறும் 10,000 ரூபாய்க்குள் புதிய ஸ்மார்ட் டிவி வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏசர் நிறுவனம் அதன் ஸ்மார்ட் டிவி வரிசையில் அறிமுகம் செய்த 32" இன்ச் மாடல் தான் ஏசர் 32 இன்ச் I ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Acer 32 inches I Pro Series HD Ready Smart LED Google TV) சாதனம். இந்த ஏசர் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி AR32HDIGU2841AT என்ற மாடல் எண்ணுடன் பிளாக் நிறத்தில் (Black) வாங்க கிடைக்கிறது.

பக்கா பட்ஜெட்ல Smart TV.. 52% நேரடி தள்ளுபடி.. ரூ.10,000 விலை:
இந்த புதிய ஏசர் 32 இன்ச் ஐ ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Acer 32 inches I Pro Series HD Ready Smart LED Google TV) 32 இன்ச் டிஸ்பிளே (display) அளவுடன் 60Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் பல அட்டகாசமான அம்சங்களை பேக் செய்துள்ளது.
இதில் டூயல் பேண்ட் வைஃபை (Dual band Wifi), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஏவி (AV), ஆர்ஃஅப் (RF), ஈதர்நெட் (Ethernet), போன்ற அம்சங்களை இந்த ஸ்மார்ட் டிவி கொண்டுள்ளது. இந்த Acer 32 inches I Pro Series LED Smart TV சாதனம் 30W ஸ்பீக்கர் (30 Watts speaker) உடன் இயங்குகிறது. இது டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவுடன் 5 வகையான சவுண்ட் மோட் (5 Sound Modes) ஆதரவை கொண்டுள்ளது.
ஏசர் 32 இன்ச் ஐ ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Acer 32 inches I Pro Series HD Ready Smart LED Google TV):
இதில் ஸ்டாண்டர்ட் (Standard), ஸ்பீச் (Speech), மியூசிக் (Music), ஸ்டேடியம் (Stadium), யூசர் (User) போன்ற மோட்களை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்துடன் 1.5GB ரேம் (RAM) + 16GB ஸ்டோரேஜ் (storage)அம்சத்தை கொண்டுள்ளது. இது கூகுள் கேஸ்ட்(Googlecast) , பாஸ்ட்கேஸ்ட் (Fastcast), போன்ற ஆதரவையும் வழங்குகிறது. இது குவாட் கோர் பிராசஸர் (Quad Core Processor) மூலம் இயங்குகிறது.
ஏசர் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி விலை (acer 32 Inch Smart TV Price):
இந்த டிவி ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோலர் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல், இதை கூகுள் வாய்ஸ் கண்ட்ரோல் மூலமாகவும் நீங்கள் இயக்கலாம். இந்த Acer 32 inches I Pro Series HD Ready Smart LED Google TV சாதனம் 52% சலுகைக்கு பிறகு, வெறும் ரூ.10,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.22,999 என்று அமேசான் வலைப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








