ஜோதிடரான பில் கேட்ஸ்..!!
மைக்ரோசாப்ட், உலகின் முன்னணி கணினி மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் 'தி ஸ்பீடு ஆஃப் தாட்' எனும் புத்தகத்தினை 1999 ஆம் ஆண்டு எழுதினார். இந்த புத்தகத்தில் அவர் எதிர்கால நிகழ்வு, மற்றும் வளர்ச்சிகள் குறித்து தான் எதிர்பார்க்கும் சில வளர்ச்சிகளை கணித்திருந்தார்.
அந்த வகையில் அன்று பில் கேட்ஸ் கணித்த வளர்ச்சிகள் இன்று நம் தினசரி பயன்பாட்டில் இருக்கின்றது. இதை வெளிப்படுத்தும் விதமாக மார்கஸ் கிரிஜோனென் பில் கேட்ஸ் ஓர் தீர்க்கதரிசி என தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

விலை ஒப்பீடு இணையதளங்கள்
சந்தையில் குறைந்த விலை பொருளை கண்டறிய ஏதுவாக பல இணையதளங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மொபைல் கருவிகள்
'மக்கள் சிறிய கருவிகளை கையில் கொண்டு தங்களது அனைத்து பணிகளையும் மேற்கொள்வர், மேலும் செய்திகள், பயணச்சீட்டு முன்பதிவு என பல்வேறு தகவல்களையும் அந்த கருவியின் மூலம் மேற்கொள்வர்' என பில் கேட்ஸ் 1999 ஆம் ஆண்டே கணித்து விட்டார்.

வர்த்தகம்
கட்டணம், இதர நிதி நடவடிக்கைகள், மற்றும் மருத்துவர்கள் என அனைத்தையும் மக்கள் இண்டர்நெட் மூலம் நிறைவேற்றி கொள்வர் என்றும் அவர் கணித்திருந்தார்.

உதவியாள்
உங்களது அனைத்து கருவிகளையும் இணைப்பதோடு, உங்களது மின்னஞ்சல், குறுந்தகவல்களை சரிபார்த்தல் மற்றும் தகவல்களை பறிமாறி கொள்ள பயன்படும் வகையில் உதவியாள் போன்று உங்களது அனைத்து தேவைகளையும் இண்டர்நெட் உதவியோடு செய்து முடிக்கும் கருவிகள் மேம்படுத்தப்படும் என பில் கேட்ஸ் கணித்தது இன்று நினைவாகியிருக்கின்றது.

வீட்டு பாதுகாப்பு
வீட்டை தொலைதூரத்தில் இருந்து வீடியோ மூலம் கண்கானிக்கும் முறை அனைத்து வீடுகளிலும் சகஜமான ஒன்றாக இருக்கும் என பில் கேட்ஸ் கணித்தது நிறைவேறியிருக்கின்றது.

சமூக வலைதளம்
உங்களது நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பில் இருக்க, தகவல்களை பறிமாறி கொள்ள உதவும் தனியார் சமூக வலைதளங்கள் மிகவும் சகஜமாகி விடும் என கணித்தார் பில் கேட்ஸ், விளைவு ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள்.

விளம்பர வாய்ப்புகள்
வெளியூர் பயணங்களின் போது உங்களுக்கான சலுகைகள் மற்றும் குறைந்த விலை பொருட்களை பரிந்துரை செய்யும் தளங்கள் மற்றும் மென்பொருள்கள் சாத்தியமாகும், என அவர் கணித்தார்.

கருத்து
நேரடியாக போட்டிகள் ஏதும் நடைபெறும் போது அவை குறித்த கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் வசதிகளை வழங்கும் சேவைகள் பயன்பாட்டிற்கு வரும் என அவர் கணித்திருந்தார், இன்று உலகின் அனைத்து நிகழ்வுகளுக்கும் சமூக வலைதளங்களின் மூலம் கருத்து தெரிவிப்போர் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர் எனலாம்.

விளம்பரம்
மக்களின் தேடுதல்களை வைத்து அவர்களின் தேவைக்கேற்ப ஒவ்வொருத்தருக்கும் விளம்பரங்கள் திரையிடப்படும்.

இணையதளம்
தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் போது குறிப்பிட்ட நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட இணையதள லின்க் மற்றும் சமூக வலைதள முகவரியை வழங்கலாம் என்றும் பில் கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications