Home
News

AC இருக்கா? அப்போ இந்த 5 விஷயத்தை கவனியுங்க.. சூப்பர் கூலிங் நிச்சயம்.. கரண்ட் பில் கூட ஜாஸ்தி ஆகாது.. எப்படி?

உங்கள் வீட்டில் ஏசி (AC) இருக்கிறதா? அது ஸ்ப்ளிட் ஏசியா (Split AC)? அல்லது விண்டோவ் ஏசியா (Window AC)? அல்லது புதிதாக ஏசி வாங்கி பயன்படுத்த திட்டமிடுகிறீர்களா? அப்படியானால் இந்த 5 முக்கியமான விஷயங்களை கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் (5 important tips for AC users). உங்கள் ஏசியில் இருந்து அற்புதமான குளிர்ந்த அனுபவத்தை அனுபவிக்க வேண்டுமென்றால், கட்டாயம் இந்த செயல்முறைகளை நீங்கள் கடைபிடித்தாக வேண்டும் மக்களே. சரி, சூப்பரான கூலிங் அனுபவத்தை பெறுவதற்கு ஏசி பயன்படுத்துபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக பார்க்கலாம்.

ஏசியை வாங்கி ஏனோதானோ என்று பயன்டுத்தினால், கட்டாயம் அது உங்களுடைய மின்சார கட்டணத்தை (EB bill) அதிகரித்துவிடும் என்பதை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஏசியை சரியான முறையில் இயக்குவதும் (proper usage method of AC), அதை சரியான முறையில் பராமரிப்பதும் (AC maintenance) தான், உங்கள் மின்சார கட்டணத்தை அதிகமாகாமல் தடுக்கப்பதற்கான ஒரே வழி என்பதை அனைவரும் புரிந்துகொண்டும் AC-யை பயன்படுத்த வேண்டும்.

AC இருக்கா? அப்போ இந்த 5 விஷயத்தை கவனியுங்க.. சூப்பர் கூலிங் நிச்சயம்

ஏசியை பயன்படுத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய 5 முக்கியமான அடிப்படை விஷயங்கள் இதோ:

1. ஏர் ஃபில்டர்ஸ் மேல் எப்போதும் ஒரு கண் இருக்கட்டும்:
உங்கள் ஏசியில் உள்ள ஏர் ஃபில்டரில் (AC air filters) அதிகமான தூசி படிந்திருக்கிறதா என்பதை ஒவ்வொரு 15 முதல் 20 நாட்களுக்குள் ஒரு முறை செக் செய்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் ஏசி ஏர் ஃபில்டரில் தூசி படிந்து அடைப்புகள் ஏற்பட்டால், அது ஏசியின் குளிர்ச்சியான காற்றை முழுமையான வெளியிட ஒரு தடையாக அமைந்துவிடும். இதனால், சிறப்பான குளிர்ந்த அனுபவத்தை நீங்கள் இழப்பதோடு, உங்கள் மின்சார கட்டணம் அதிகமாக அதிக வாய்ப்பிருக்கிறது மக்களே.

2. அவுட்டோர் யூனிட் மேல் தூசி படிந்திருக்கிறதா இருக்கிறதா?
உங்கள் வீட்டிற்குள் இருக்கும் ஏசி சுத்தமாக இருந்தாலும், உங்கள் வீட்டிற்கு வெளியில் இருக்கும் அவுட்டோர் யூனிட் (AC outdoor unit) மீது எப்போதும் ஒரு கவனம் இருக்க வேண்டும். காரணம், இதில் தான் அதிகமான தூசி, மண், இலைகள், பறவையின் சிறகுகள் என்று பலவிதமான குப்பைகள் தேங்கக்கூடும் என்பதனால், இவற்றை கவனிப்பது மிகவும் முக்கியமானது.

அவுட்டோர் யூனிட்டை சுற்றியுள்ள இடங்களை சுத்தமாக வையுங்கள். காற்றோட்டம் சென்று வர போதிய இடைவெளி இருக்கிறதா என்பதையும் செக் செய்யுங்கள். சுத்தமான அவுட்டோர் யூனிட் சிறப்பான ஹீட் எக்ஸ்சேஞ் (heat exchange) உடன் வேகமாக குளிர்ந்த (fast cooling experience) அனுபவத்தை வழங்கும்.

3. ஏசி சர்வீஸ் செய்ய அதிகம் செலவாகும் என்று கருதுகிறீர்களா?
உங்கள் ஏசியை நீங்கள் காலத்திற்கு பழுதில்லாமல் பயன்படுத்த ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால், கட்டாயம் 1 வருடத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் ஏசியை நீங்கள் சர்வீஸ் (AC service) செய்ய வேண்டும். சான்றளிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்கள் (certified AC service centre) மூலம் ஏசியை சர்வீஸ் செய்வது சிறப்பானது. குறிப்பாக, கோடைகாலம் துவக்கத்திற்கு முன்பாக ஒருமுறையும், கோடைகாலம் நிறைவடையும் பொழுது ஒருமுறையும் சர்வீஸ் செய்வது சிறப்பானது.

சில இடங்களில் ரூ.399 முதல் துவங்கி ரூ. 999 வரை ஏசி சர்வீஸ் (AC service costs) செய்து தரப்படுகிறது. இதை அதிக செலவாக கருத வேண்டாம். குறிப்பாக, ரெஃப்ரிஜெரண்ட் லெவல் (refrigerant level), இன்டெர்னல் கசிவுகள் (internal leaks) மற்றும் மின்சார கோளாறுகள் (electrical issues) ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை சர்வீஸ் மூலம் தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் முக்கியமானது. இதன் மூலம் ஏசி தீ விபத்துகளை தவிர்த்து (avoid AC fire accidents) பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

4. AC-யில் சரியான டெம்ப்ரேச்சர் செட் செய்வது முக்கியம் மக்களே:
இந்திய வெப்பநிலைக்கு, உங்கள் ஏசியை 24°C முதல் 26°C வெப்பத்திற்குள் (Ideal AC temperature) பயன்படுத்துவது சிறப்பானது. அதேபோல், ஏசியில் உள்ள டைமர் மோட் (AC timer mode) அம்சத்தை பயன்படுத்துவதும் முக்கியமானது. இது உங்கள் ஏசியை நள்ளிரவில் ஓவர் கூலிங் ஆகாமல் பார்த்துக்கொள்கிறது. அதேபோல், குறிப்பிட்ட நேரத்திற்குள் ஏசி தானாக OFF செய்யப்படுவதினால், மின்சார கட்டணத்திலும் ஒரு கணிசமான தொகையை மிச்சம் பிடிக்க முடியும்.

5. மோசமான நாற்றம் அல்லது சத்தம் கேட்கிறதா?
இந்த இரண்டு விஷயங்களில் ஏதேனும் ஒரு விஷயம் சிறிதளவு தோன்றினாலும், உடனே சர்வீஸ் சென்டர் ஆட்களை வரவழைக்க தயங்காதீர்கள். ஏசியில் இருந்து வரும் மோசமான நாற்றம் (bad odours) பூஞ்சை வளர்ச்சியின் (fungal infection growth) காரணமாக இருக்கலாம். அதேபோல், ஏசியில் இருந்து வரும் சிறிய சத்தம் அல்லது இரைச்சல்கள் (AC noise) கட்டாயம் ஏசியின் உள்ள பாகத்தின் கோளாறை குறிப்பதாக இருக்கலாம். ஆகையால் இவற்றை உடனே கண்டறிந்து சரி செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கும், உங்கள் ஏசியின் ஆயுளுக்கும் நல்லது.

இந்த 5 விஷயங்களை ஏசி பயன்படுத்தும் மக்கள் எப்போதும் கவனித்துக் கொண்டே இருப்பது பாதுகாப்பானது. சிறப்பான குளிர்ந்த ஏசி அனுபவத்தை, குறைந்த மின்சார செலவுடன் அனுபவிக்க விரும்பினால், இந்த சிறிய விஷயங்களில் நீங்கள் அதிக நாட்டம் கொள்வது அவசியம் மக்களே.

More from GizBot

Best Mobiles in India

English summary
AC Users Should Follow These 5 Basic Steps To Feel Super Cooling With Less Current Usage and EB Bill
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X