ஏப்ரல் முதல் AC விலை உயர்வு.. Daikin, Blue Star முதல் Voltas வரை.. எந்தெந்த மாடல்கள் எவ்வளவு விலை உயரும்?
கடுமையான கோடை காலம் நெருங்குகிறது; இந்தியா முழுவதுமாக ஏசிக்களின் தேவை மெதுவாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. சரியாக இந்த நேரத்தில் ஏசி உற்பத்தியாளர்கள் - அதிக உள்ளீட்டு செலவுகள், விநியோக சங்கிலி சரிசெய்தல் மற்றும் நாணய ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றால் தொடர்ந்து அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றர்.
இதை ஈடுசெய்ய, முன்னணி ரூம் ஏர் கண்டிஷனர் தயாரிப்பாளர்கள் 5 முதல்15 சதவீதம் வரை விலை உயர்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் இந்த விலை உயர்வுகள் அமலுக்கு வரலாம். அதாவது ஏசிக்களின் தேவை அதிகரிக்கும் உச்சக்கட்ட கோடை காலத்திற்கு சற்று முன்னதாகவே இந்த விலை உயர்வுகள் அறிவிக்கப்படலாம்.

எந்தெந்த நிறுவனங்களின் ஏசி மாடல்கள் விலை உயர்வை காணும்? டெய்கின், வோல்டாஸ், ப்ளூ ஸ்டார், எல்ஜி, ஹேயர் மற்றும் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் ஏசி மாடல்கள் விலை உயர்வை சந்திக்கலாம்.
டெய்கின்: ஏப்ரல் மாதம் முதல் டெய்கின் இந்தியா நிறுவனம் விலைகளை 12 சதவீதம் வரை உயர்த்த உள்ளது. மேலும் இந்த விலை உயர்வானது மாடலுக்கு மாடல் வேறுபடும் என்றும் டெய்கின் இந்தியாவின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கன்வால்ஜீத் ஜாவா பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இதில் (விலை உயர்வில்) இருந்து தப்பிக்கும் வழி இல்லை, மேலும் தொழில்துறையில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் இதை செய்ய உள்ளன என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்த விளக்கத்தில் - புதிய எரிசக்தி விதிமுறைகள் வந்துவிட்டன, அவைகள் தயாரிப்புகளை மிகவும் திறமையானதாக மாற்றியுள்ளன. மேலும், தாமிரம் போன்ற பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன; அமெரிக்க டாலர் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது (இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது) என்றும் கூறியுள்ளார்.
இந்த விலை உயர்வு இந்த ஆண்டும் ரூம் ஏர் கண்டிஷனர்களின் விற்பனையை பாதிக்குமா என்று கேட்டபோது, 2026 ஆம் ஆண்டில் வெப்பமான கோடையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். குறைந்தபட்சம் இது 2024 ஆம் ஆண்டில் இருந்த அளவை தொட வேண்டும், ஆக இந்த ஆண்டு குறைந்தது 15 சதவீத வளர்ச்சியைக் காண வேண்டும் என்று நினைப்பதாக கன்வால்ஜீத் ஜாவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ப்ளூ ஸ்டார்: ப்ளூ ஸ்டார் நிர்வாக இயக்குனர் ஆன பி. தியாகராஜன் கூறுகையில், பிப்ரவரி மாத நடுப்பகுதியில் நிறுவனம் ஏற்கனவே 8-10 சதவீத விலை உயர்வை எடுத்துள்ளது. இருப்பினும், பழைய விலை சரக்கு இன்னும் சந்தையில் உள்ளது, எனவே சந்தையில் அதிக வித்தியாசம் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் விலை உயர்வு நடக்க போவதால், வியாபாரிகள் முன்கூட்டியே ஸ்டாக்களை வாங்கி உள்ளனர். அவர்கள் சீக்கிரமாகவே வாங்கி விட்டனர், எனவே அவர்கள் பழைய ஸ்டாக்களை விற்றுவிடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.இதன் பொருள் - அதிக விலை கொண்ட ஒரு புதிய பேட்ச் (New Batch) சந்தையை அடைய சிறிது நேரம் எடுக்கும்.
குறிப்பிடத்தக்க வகையில் கடந்த ஆண்டு ரூம் ஏர் கண்டிஷனர் துறைக்கு ஒரு சவாலான ஆண்டாக இருந்தது, ஏனெனில் பருவகாலமற்ற மழை மற்றும் பிற காரணிகளால் ஏசி விற்பனை பாதிக்கப்பட்டது. அதற்கு ஒரு வருடம் முன்பு, 2024 ஆம் ஆண்டில், நாட்டின் பல பகுதிகள் கடுமையான வெப்ப அலைகளை கண்டபோது இதே துறை மிகச்சிறந்த வளர்ச்சியை கொண்டிருந்தது.
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இந்திய ரூம் ஏர் கண்டிஷனர் பிரிவில் கடுமையான போட்டி இருக்கும். அங்கு உற்பத்தியாளர்கள் 2025 இல் எதிர்மறையான வளர்ச்சியை பெற்ற பிறகு சந்தை பங்கு ஆதாயங்களுக்காக போட்டியிடுவார்கள்.
டாடா வோல்டாஸ்: டாடா குழும நிறுவனமும், சந்தையில் முன்னணியில் உள்ள வோல்டாஸும் அதன் ரூம் ஏர் கண்டிஷனர் விலைகளை 5 முதல் 15 சதவீதம் உயர்த்த போகிறது. அதாவது மூலப்பொருட்கள் மற்றும் பிறவற்றின் விலை அதிகரிப்பால் தான் சந்தித்த நிதி சுமைகளை இந்நிறுவனங்கள் நுகர்வோர்கள் தலையில் கட்டப்போகிறது.


Click it and Unblock the Notifications








