எந்த உயரத்தில் AC மாட்டினால் கூலிங் சூப்பராக இருக்கும்? இந்த தப்பை செஞ்சுடாதீங்க மக்களே.. உடனே கவனியுங்க..
குளிர் காலம் முடிந்து, இப்போது வெயில் காலம் துவங்கிவிட்டது. அடுத்து வரவிருக்கும் 2 அல்லது 3 மாதங்களுக்கு நாம் செல்லும் இடங்களில் எல்லாம் சூரியனின் உஷ்ணத்தை வெகுவாக உணரப் போகிறோம். வெயிலின் உஷ்ண பிடியில் இருந்து தப்பிக்க மக்கள் இப்போது ஏசி (AC) போன்ற சாதனங்களை வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர். என்ன தான் விலை உயர்ந்த ஏசி மாடலை சிலர் வாங்கினாலும், அதன் கூலிங் சிறப்பாக இல்லையே என்று கருதுவார்கள். இதற்கான முக்கிய காரணம், அவர்கள் ஏசியை நிறுவிய உயரம் தான் என்பது பலருக்கும் தெரியதாக ஒரு உண்மையாக இருக்கிறது.
AC கூலிங்கிற்கும் ஏசியை சுவற்றில் இன்ஸ்டால் செய்யும் உயரத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? என்று சில கேலியாக கேள்வி எழுப்பலாம். இருந்தாலும், உங்கள் ஏசி கூலிங் சூப்பராக இருக்க வேண்டுமென்றால், உங்கள் அறையில், நீங்கள் வாங்கிய ஏசி சாதனத்தை சரியான உயரத்தில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பது மிக முக்கியமானது. எந்த உயரத்தில் ஏசியை நிறுவினால் கூலிங் காற்று அருமையாக கிடைக்கும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

வழக்கமான வெயில் காலத்தில் இருக்கும் வெப்பத்தை விட இந்த வருடம் மக்கள் கூடுதல் வெப்பத்தால் பாதிப்படைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஏப்ரல் முதல் ஜூலை வரை இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமென்றும், மக்களை இந்த வருடம் முன்னெப்போதையும் விட கடுமையாக வாட்டி எடுக்குமென்றும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வெப்பம் இருக்க போகிறது என்றால், கட்டாயமாக உங்கள் ஏசி நீண்ட நேரம் ஓட போகிறது என்பதில் சந்தேகமில்லை.
இதனால், மின்சார கட்டணமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், சில நுணுக்கமான விஷயங்களை நீங்கள் கருத்தில்கொண்டால், கட்டாயமாக சிறந்த பலன்களை அனுபவிக்க முடியும். சரியான உயரத்தில் ஏசியை நிறுவினால், ஏசியில் இருந்து வரும் கூலிங் காற்று உங்கள் அறையை வேகமாக நிரப்ப அதிக வாய்ப்புள்ளது. இதனால் தான் உங்கள் ஏசியை சீலிங் சுராவில் இருந்து சரியான உயரத்தில் பொறுத்த வேண்டும் என்று அறிவுரைக்கப்படுகிறது.
புதிய ஸ்பிளிட் ஏசியை நிறுவுபவர்களுக்கு, பரிந்துரைக்கப்பட்ட உயரம் தரையிலிருந்து தோராயமாக 7 முதல் 8 அடி உயரத்தில் இருக்க வேண்டும் என்று அறிவுரைக்கப்படுகிறது. இந்த உயரம் அறையை விரைவாக குளிர்விக்க உதவுகிறது மற்றும் இடம் முழுவதும் குளிர்ந்த காற்றின் சீரான பரவலை உறுதி செய்கிறது. இருப்பினும், உகந்த உயரம் உங்கள் அறையின் பரிமாணங்களைப் பொறுத்து மாறுபடும் என்பதையம் நினைவில் வைத்துக்கொள்ள மறக்காதீர்கள்.
உங்கள் சீலிங் சுவர் 8 அடி அல்லது 9 அடி உயரத்தில் இருந்தால், உங்கள் AC நிறுவல் உயரத்தை நீங்கள் குறைக்க வேண்டியிருக்கலாம். கூடுதலாக, குளிர்ந்த காற்று திறம்பட சுற்றுவதை உறுதிசெய்ய நிறுவலின் போது யூனிட்டின் கோணத்தைக் கருத்தில் கொள்வது அவசியம். AC நிறுவலின் போது சிறிது சாய்வு அவசியம்; இதைச் செய்யத் தவறினால், பின்னர் உட்புற யூனிட்டில் தண்ணீர் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதை கவனிக்க மறக்காதீர்கள்.
மக்கள் அடிக்கடி செய்யும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், ஸ்பிளிட் ஏசியை சீலிங்கிற்கு மிக அருகில் பொருத்துவது. சீலிங்கிற்கு அருகில் வைப்பது காற்றோட்டத்தை கணிசமாக பாதிக்கும். உங்கள் ஏசி சீலிங்கிற்கு அருகில் இருக்கக்கூடாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications