சென்னை கீழ்பாக்கம் பகுதியில் திடீரென வெடித்த ஏசி: காரணம் என்ன?
இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் தான் இருக்கிறது. ஆனால் ஒரு சில தொழில்நுட்பங்களை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பல ஆபத்துகள் வர வாய்ப்பு உள்ளது.

பர்னபி சாலையை சேர்ந்த முத்து ராஜா
சென்னை பகுதியில் உள்ள கீழ்பாக்கம் பர்னபி சாலையை சேர்ந்த முத்து ராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகபணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் முத்து ராஜா தனது வீட்டின் முதல் தளத்தில் உள்ளஏரி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

தீயணைப்பு வீரர்கள்
அப்போது எதிர்பாராத விதமாக ஏசி பலத்த சத்தத்துடன் ஏசி வெடித்துச் சிதறி ஏரியத் தொடங்கியுள்ளது. பின்பு இதை எதிர்பாரத முத்து ராஜா அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்துவிட்டார். மேலும் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஏசியில் பற்றிய தீயை உடனே அணைத்தனர்.

அதன்பின்பு இந்த சம்பவம் குறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர். அதில் முதற்கட்ட விசாரணையில்மின்கசிவு காரணமாக எரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஏசியை கவனமாக பராமரித்து, பயன்படுத்த வேண்டும் என்று ஏசி நிறுவனங்கள் அவ்வப்போது கூறிக்கொண்டே தான் இருக்கிறது. மேலும் ஏசியை பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் அவற்றின் பரமாரிப்பு சார்ந்த விளக்கங்களை பார்ப்போம்.

வழிமுறைகள்
வழிமுறை-1:
கண்டிப்பாக 3மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் ஏசி-யை சர்வீஸ் செய்ய வேண்டும்.
வழிமுறை-2:
குளிர்நிலை 18டிகிரி செல்சியஸில் ஏசி-யை முதலில் இயக்க வேண்டும்.
வழிமுறை-3:
ஏசி-யின் குளிர்நிலையை படிப்படியாக குறைக்க வேண்டும்.
வழிமுறை-4:
அறையில் ஒரே நேரத்தில் ஏசி-யையும் மின்விசிறியையும் இயக்கக்கூடாது
வழிமுறை-5:
மின்கசிவால் புகை வந்தால் பதட்டமடையாமல் ஜன்னல்,கதவுகளை திறந்துவிட வேண்டும்.
குறிப்பாக ஏசி-யில் ஏதேனும் பிரச்சனை எனத் தோன்றினால் உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications