Home
News

ஏப்ரலில் வெயில் உக்கிரமா இருக்கும்.. AC வாங்க போறீங்களா? பணத்தை மிச்சம் பிடிக்க இந்த விஷயங்களை கவனியுங்க..

கோடை காலம் (summer) ஆரம்பமாக போகிறது, ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனால், இதுவரை AC வாங்காத மக்கள் கூட, இப்போது ஏசி வாங்க திட்டமிடுகிறார்கள். வருடத்திற்கு வருடம் கோடை காலத்திற்கு முன்பு AC வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. புதிதாக AC வாங்க உங்களுக்கும் திட்டம் இருக்கிறதென்றால், நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இங்கே.

கடந்த வருடம் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்தது மட்டுமின்றி, மொட்டைமாடியில் ஆப்பாயில் போட வைத்து பித்துபிடிக்க வைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்த வருடத்தை விட, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் உக்கிரமாக இருக்கப் போகிறதென்று இப்போதே வானிலை ஆர்வலர்கள் (Weather enthusiasts) மக்களை எச்சரிக்க துவங்கியுள்ளனர். இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஏப்ரலில் வெயில் உக்கிரமா இருக்கும்.. AC வாங்க போறீங்களா? கவனியுங்க..

ஏப்ரலில் வெயில் உக்கிரமா இருக்கும்.. AC வாங்க போறீங்களா? இது தெரியாம புதுசா AC வாங்கிடாதீங்க:

வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க இந்த வருடமும் மக்கள் அதிகமாக ஏர் கூலர் (Air cooler) மற்றும் ஏர் கண்டிஷனர் (Air conditioner - AC) போன்ற சாதனங்களை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை உங்களுக்கும் இந்த ஆண்டு புதிதாக AC வாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், கட்டாயமாக AC வாங்குவதற்கு முன் இந்த விஷயங்களை நன்கு புரிந்துகொண்ட பிறகு புது AC-யை வாங்குவது சிறந்தது.

புதிதாக AC வாங்குவதற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி கீழே பட்டியலிட்டுள்ளோம். இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு புது AC வாங்கினால், உங்கள் அறைக்கு ஏற்ற சரியான AC மாடலை தேர்வு செய்ய முடியும். அதுபோல், கூடுதல் செலவை உங்களால் கட்டுப்படுத்த முடியும். சரி, வாருங்கள் நேரடியாக விஷயத்திற்கு செல்லலாம்.

புதிதாக AC வாங்குவதற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

- நம்பகமான விற்பனையாளர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து AC வாங்குவது சிறந்தது.

- ஆன்லைன் விற்பனையை காட்டிலும், நேரடி டீலர்கள் சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் ஆதரவை வழங்குகிறார்கள்.

- விற்பனைக்கு பின், தரமான சேவையை வழங்கும் பிராண்டை தேர்வு செய்வது முக்கியமானது.

- உங்கள் பகுதியில் எந்த பிராண்டு சிறந்த சர்வீஸ் சேவையை வழங்குகிறது என்பதை கவனியுங்கள்.

- உங்கள் அறைக்கு ஏற்ற அளவில் உள்ள AC மாடலை தேர்வு செய்வது மிக முக்கியமானது.

எந்த அளவு அறைக்கு எத்தனை Ton AC வாங்கி மாட்டினால் நல்லது? சிறப்பானது?

- நீங்கள் வசிக்கும் ரூம் சிறியது என்றால் உங்களுக்கு 0.5 - 0.8 டன் AC போதுமானது.

- நீங்கள் வசிக்கும் அறை ஒரு ஸ்டாண்டர்ட் பெட்ரூம் அளவில் உள்ளதா? அப்படியானால் 1 - 1.5 டன் AC போதுமானது.

- நீங்கள் வசிக்கும் அறை அளவில் மிகவும் பெரியதென்றால் நிச்சயம் உங்களுக்கு 2 டன் AC மாடல் தேவைப்படும்.

- அறைக்கு ஏற்ற டன் ஏசி மாடலை தேர்வு செய்வது பணத்தையும், மின்சாரத்தையும் மிச்சப்படுத்தும்

- 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட AC மாடல்கள் குறைந்தளவு மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

இதை கவனிக்காமல் AC வானினால் கரண்ட் பில் எகிறிடும் மக்களே:

- இன்வெர்டர் AC மாடல்களும் மின்சார கட்டணத்தை குறைத்து பணத்தை பிச்சம்பிடிக்கும்.

- இன்வெர்டர் இல்லாத மாடல்கள் பராமரிப்பதற்கு ஏற்றது, பட்ஜெட் பிரியர்களுக்கு சிறந்தது.

- ரூ. 25,000 முதல் ரூ. 50,000 விலைக்கு மேல் இப்போது AC மாடல்கள் வாங்க கிடைக்கின்றன. விலை வரம்பை முடிவு செய்து AC வாங்குவது சிறந்தது.

இந்த விஷயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்ட பிறகு, உங்களுக்கான புது AC மாடலை தேர்வு செய்வது உங்களுக்கு பல வழிகளில் பயனளிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Best Mobiles in India

English summary
AC Buying Tips Star Rating Room Size Suitable AC TON Size Price and Inverter Model Tips Know These Before Buying
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X