Home
News

AC யூஸ் செய்யுறீங்களா? 1 நாளுக்கு எவ்வளவு கரண்ட் பில் வரும்? 1 மாசத்துக்கு எவ்வளவு பில் வரும்? தெரிஞ்சுக்கோங்க

உங்கள் வீட்டில் ஏசி (AC) இருக்கிறதா? அல்லது புதிதாக AC வாங்க போகிறீர்களா? அப்படியானால், இந்த தகவலை கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் 1.5 டன் ஏசி (1.5 Ton AC) சாதனங்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. ஒரு 1.5 டன் ஏசியை 1 மணி நேரம் பயன்படுத்தினால் உங்களது மின்சார கட்டணம் எவ்வளவு வரும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், இந்த பதிவை முழுமையாக படிக்கவும். அதேபோல், 1.5 டன் ஏசியை ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு நீங்கள் பயன்படுத்தினால் எவ்வளவு மின்சார கட்டணம் வரும் என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

வெயில் காலம் துவங்கிவிட்டது, வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இப்போது பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் ஏசி என்றழைக்கப்படும் ஏர் கண்டிஷனர் சாதனங்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இன்னும் சிலர், இந்த வருடமாவது ஏசி வாங்கி மாட்டி வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்துவிட வேண்டும் என்று, குறைந்த விலையில் சில ஏசி மாடல்களை ஆன்லைனில் தேடிக்கொண்டிருப்பீர்கள்.

AC யூஸ் செய்யுறீங்களா? 1 நாளுக்கு எவ்வளவு கரண்ட் பில் வரும்?

ஏற்கனவே ஏசி வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு, புதிதாக ஏசி வாங்கி பயன்படுத்த நினைப்பவர்களுக்கும் பெரும் கவலையாக இருப்பது மின்சார கட்டணம் தான். ஏசி வாங்கி பயன்படுத்த துவங்கிவிட்டால், வழக்கமாக நீங்கள் செலுத்தி வந்த மின்சார கட்டணத்தில் இருந்து இரட்டிப்பு கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும் என்று சிலர் கூறி உங்களை பீதியடைய செய்திருப்பார்கள். இதனால், ஏசி பயன்படுத்தினால் எவ்வளவு மின்சார கட்டணம் வரும்?

அது ஜாஸ்தியாக இருந்தால் நம்மால் சமாளிக்க முடியுமா? என்று சிலர் குழப்பத்தில் இருப்பீர்கள். உங்கள் குழப்பத்தை சரி செய்யவும், நீங்கள் தேடும் கேள்விக்கான பதிலை தான் இந்த பதிவில் வழங்கியுள்ளோம். ஒரு வீட்டில் ஒரு 1.5 டன் ஏசியை 8 மணி நேரம் பயன்படுத்தினால், எவ்வளவு மின்சார கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை தெளிவாக இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளோம். உங்கள் ஏசி 3 ஸ்டார் ஏசியாக (3 Star AC) இருந்தால் எவ்வளவு மின்சார கட்டணம் வரும்?

அல்லது 5 ஸ்டார் ஏசியாக (5 star AC) இருந்தால் எவ்வளவு கட்டணம் வரும் என்பதை பற்றி தெளிவாக இங்கு பார்க்கலாம். ஏசி என்று நீங்கள் வாங்க விரும்பினால் உங்கள் அறைக்கு ஏற்ற ஏசி மாடலை வாங்குவது சிறப்பானது. தமிழநாட்டை பொறுத்தவரையில், பெரும்பாலான வீடுகளுக்கு 1.5 டன் ஏசி மாடலே போதுமானதாக இருக்கிறது. ஏனென்றால், நாம் பயன்படுத்தும் அறையின் அளவு பெரிதாகவும் இல்லாமல் சிறிதாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்கிறது.

ஏசி மாடல்கள் அவற்றின் ஸ்டார் ரேட்டிங்கிற்கு ஏற்ப ஆற்றலை பயன்படுத்துகின்றன. 1 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசிகள் (1 star rating ac) விலையில் மலிவானதாக இருந்தாலும் அவை அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என்பதனால், இவற்றை விட்டு விலகி இருப்பது உங்கள் மின்சார கட்டணத்தை கட்டுக்குள் வைக்க உதவும். பட்ஜெட் பிரியர்களுக்கு சிறந்த மாடல் என்றால் அது 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட 1.5 டன் மாடல் ஏசி தான்.

இவை அதிக விலை கொண்ட மாடல் இல்லை என்பது ஒரு காரணம் என்றாலும், 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி (3 star rating ac model) மாடல்கள் அதிக ஆற்றலை பயன்படுத்துவதில்லை, 1 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசியை விட இவை மிக குறைந்தளவு மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. அதேபோல், 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி மாடல்கள் விலையில் அதிகமாக இருந்தாலும், இவை உங்கள் மின்சார கட்டணத்தை பெரியளவில் குறைக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

1 வருடத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தில் இருந்து 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி மாடல்கள் பெரியளவு பணத்தை சேமிக்க அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட 1.5 டன் ஏசி மாடல் எவ்வளவு மாதாந்திர மின்சார கட்டணத்தை வழங்குகிறது என்பதை பார்க்கலாம். 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட 1.5 டன் ஏசி சாதனம் 1 மணி நேரத்திற்கு 1104 வாட்ஸ் மின்சாரத்தை பயன்படுத்துகிறது.

இந்த ஏசியை நீங்கள் 8 மணி நேரத்திற்கு பயன்படுத்தினால், 1 நாளில் உங்களுக்கு 9 யூனிட் மின்சாரம் செலவாகிறது. உங்கள் பகுதியில் 1 யூனிட் மின்சாரத்திற்கு 7 ரூபாய் 50 பைசா வசூலிக்கப்படுகிறது என்று வைத்துக்கொண்டால், ஒரு நாளுக்கு தினமும் 67 ரூபாய் 50 பைசா வரை மின்சார கட்டணமாக செலவாகிறது. 1 முழு மாதத்திற்கு 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட 1.5 டன் ஏசி மாடலை பயன்படுத்தினால் உங்கள் மின்சார கட்டணத்தில் நீங்கள் சராசரியாக ரூ. 2000 வரை ஏசிக்காக மட்டும் பில் செலுத்த வேண்டும்.

ஒருவேளை, நீங்கள் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி மாடலை வாங்கி பயன்படுத்திக்கிறீர்கள் என்றால், எவ்வளவு மின்சார கட்டணம் வரும் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம். உங்கள் வீட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட 1.5 டன் ஏசி சாதனத்தை பயன்படுத்தினால், அது 1 மணி நேரத்திற்கு 840 வாட்ஸ் மின்சாரத்தை பயன்படுத்தும். உங்கள் பகுதியில் 1 யூனிட் மின்சாரத்தின் கட்டணம் ரூ. 7.50 என்று வைத்துக்கொண்டால், நீங்கள் எவ்வளவு மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட 1.5 டன் ஏசி மாடலை 8 மணி நேரம் பயன்படுத்தினால், அது 6.4 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்கிறது. இதன் மூலம் உங்களுக்கு தினசரி மின்சார கட்டணமாக இந்த மாடல் ரூ. 48 கட்டணமாக செலவு செய்கிறது. 1 மாதத்திற்கு நீங்கள் இந்த மாடல் ஏசியை பயன்படுத்தினால் ரூ. 1500 வரை செலவாகிறது. 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி மாடலை விட இதில் ரூ. 500 மிச்சமாகிறது.

உங்களுக்கு ஏசி வாங்கும் பட்ஜெட்டில் விலை சமரசம் செய்ய விருப்பமில்லை என்றாலோ, விலை உயர்ந்த மாடல் ஏசியை நீங்கள் வாங்க திட்டமிட்டாலோ உங்கள் மின்சார கட்டணம் குறைய அதிக வாய்ப்பிருக்கிறது. சந்தையில் தற்போது டூயல் இன்வெர்டர் ஏசி மாடல்கள் எல்லாம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், இவை மேற்கூறிய மாடல்களை விட குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்துவதினால், இன்னும் கணிசமான அளவு மின்சார கட்டணத்தை உங்களால் குறைக்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
AC 1.5 TON 3 Star and 5 Star Rating EB Bill Pricing Details Per Day and Per One Month
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X