அப்துல் கலாம் - வேண்டும் மறுபிறவி..! கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று.!

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஒருமுறை அப்துல் கலாம் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போது 'கரண்ட்' போய் விட்டது, அப்போது கலாம் என்ன செய்தார் தெரியுமா..? ஒரு முறை மதிற்சுவர்களில் கண்ணாடி பீங்கான்காளை பொருத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் அது ஏன் என்று தெரியுமா..?

அப்துல் கலாமின் ரகசிய பக்கங்கள்..!

அப்துல் கலாம் முதலில் ஒரு சிறந்த மனிதப்பிறவி, பின் தான் மாபெரும் விஞ்ஞானி, இந்தியாவின் ஏவுகணை மனிதன், மக்களின் குடியரசு தலைவர், தலைச்சிறந்த குடிமகன், எல்லாம்..! அவர் வாழ்வில் நடந்த சுவாரசியமான சின்ன சின்ன கதைகளை கேட்டால், அப்துல் கலாம் எவ்வளவு பெரிய புனிதமான மனிதப்பிறவி என்பது புரியும்..!

மதிற்சுவர் :

மதிற்சுவர் :

ஒருமுறை தன் பாதுகாப்பிற்காக மதிற்சுவரில் கண்ணாடி பீங்கான்களை பொறுத்துவதை நிராகரித்து விட்டார். ஏனெனில் அவைகள் பறவைகளை காயப்படுத்தக் கூடும் என்பதால்..!

 மாணவர்கள் :

மாணவர்கள் :

ஒருமுறை மாணவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று அவர்களோடு நேரம் செலவிட்டது மட்டுமின்றி அவர்களின் யோசனைகளை மிகவும் கவனமாக கேட்டறிந்தாரம்..!

கரண்ட் :

கரண்ட் :

ஒரு முறை மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது 'கரண்ட்' போய்விட்டது. உடனே கீழே இறங்கி வந்து சுமார் 400 மாணவர்களுக்கு நடுவே நின்று, தன்னால் முடிந்த கனத்த குரலை கொண்டு உரையை தொடர்ந்தாரம்..!

சேமிப்பு :
 

சேமிப்பு :

கலாம் அவர்கள் தன் வாழ்நாள் சேமிப்பு மற்றும் தன் சம்பளம் ஆகிய அனைத்தையும் பூரா (PURA) என்ற ஒரு தொண்டு நிறுவனத்திற்க்கு வழங்கி கொண்டிருந்தாராம்..!

நன்றி :

நன்றி :

தனக்கு வரும் அத்துணை பரிசு மற்றும் கடிதங்களுக்கும் அவரே தன் கைப்பட எழுதிய நன்றி கடிதத்தை அனுப்புவதை வழக்கமாய் கொண்டிருந்தார், அப்துல் கலாம்..!

புகைப்படம் :

புகைப்படம் :

ஒரு முறை நிகழ்ச்சி ஆரம்பிக்க நேரம் ஆகி கொண்டே போன போதும், எல்லா குழந்தைகளுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம் என்று சொன்னாராம்..!

நாற்காலி :

நாற்காலி :

ஒரு நிகழ்ச்சியில் தனக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தன்னை விட பெரிய நாற்காலி ஒன்றில் அமர மறுத்துவிட்டாராம், வேறொரு நாற்காலியில் தான் அமர்ந்தாராம் அப்துல் கலாம்..!

தீவிரவாதம் :

தீவிரவாதம் :

குடியரசு தலைவராக இருக்கும் போது 'யாஹூ ஆன்சார்ஸ்' வலைதளத்தில் தீவிரவாதம் சார்ந்த கேள்வி ஒன்றையும் கேட்டார் அப்துல் கலாம்..!

இந்திய மாணவர் :

இந்திய மாணவர் :

கலிஃபோர்னியாவில் நடைப்பெற்ற மாநாடு ஒன்றில் இந்திய மாணவர் ஒருவரை தன் தட்டில் சாப்பிடும்படி சொன்னாராம்..! ஒரு துண்டு கீரையை எடுத்து அந்த மாணவர் சாப்பிட்டாராம்..!

செருப்பு தைக்கும் தொழிலாளி :

செருப்பு தைக்கும் தொழிலாளி :

கேரளாவின் ராஜ் பவனில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு, குடியரசு தலைவரின் விருந்தினராக இருவரை உடன் அழைத்து சென்றார் அப்துல் கலாம். ஒருவர் செருப்பு தைக்கும் தொழிலாளி, மற்றொருவர் சிறிய ஓட்டல் ஒன்று வைத்து நடத்துபவர்..!

மொத்தம் :

மொத்தம் :

அணு இயற்பியல் தொடங்கி ஆன்மீக அனுபவம் வரை மொத்தம் 15 புத்தகங்களை எழுதி உள்ள அப்துல் கலாமை பற்றி 'ஐ யம் கலாம்' (I am kalam) என்ற ஒரு ஹிந்தி திரைப்படம் (2011) வெளியானது குறிப்பிடத்தக்கது..!

மறுபிறவி :

மறுபிறவி :

இவரை போல் மாபெரும் நல்ல மனிதரை கண்டு நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் கோடி விடயங்கள் உள்ளது - மீண்டும் வேண்டும் ஒரு அப்துல் கலாம்..!

 
Read more about:
English summary
These Rare Stories About Dr. APJ Abdul Kalam Will Make Your Day Today.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X