இனி ஆன்லைன்ல ஆர்டர் பண்ணுங்க: ஆவின் பால் மட்டுமில்ல இன்னும் பல!

|

கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஆவின் பால் உட்பட பல பொருட்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்துக் கொண்டே வருகிறது

இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்துக் கொண்டே வருகிறது

கொரோனா பாதிப்பு இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலைபடி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. மற்ற சில நாடுகளோடு ஒப்பிடுகையில் இது குறைவு என்றாலும் இந்தியாவில் பிற நாட்டவர்கள் பாராட்டு வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்

20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்

அதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது 20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் 3 சதவீதம் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Airtel அதிரடி! 1 வருட Disney+ Hotstar சந்தா இலவசம்; தினமும் 3 ஜிபி டேட்டா - விலை என்ன தெரியுமா?Airtel அதிரடி! 1 வருட Disney+ Hotstar சந்தா இலவசம்; தினமும் 3 ஜிபி டேட்டா - விலை என்ன தெரியுமா?

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது

இந்தியாவில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதுவரை அங்குமட்டும் 6430 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் கோவாவில் கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து அங்கு மட்டும் 100 சதவீதம் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குஜராத்தில் 2624 பேருக்கு நோய்த்தொற்று உறுதி

குஜராத்தில் 2624 பேருக்கு நோய்த்தொற்று உறுதி

குஜராத்தில் 2624 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 112 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 2376 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு

தமிழகத்தில் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1600-ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தாலும், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு

சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு

இதையடுத்து சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. இதையடுத்து ஊரடங்கு கடுமையாக்கப்பட்டே வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பல்வேறு ஏற்பாடுகள்

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பல்வேறு ஏற்பாடுகள்

இந்த ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தற்போது தமிழகமெங்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆவின் பால் நிறுவனமும் தற்போது ஆன்லைன் ஆர்டர் முறையை நடைமுறையில் கொண்டு வந்திருக்கிறது.

ஆவின் நிறுவனம் அறிவித்த செய்தி குறிப்பு

ஆவின் நிறுவனம் அறிவித்த செய்தி குறிப்பு

இதுகுறித்து ஆவின் நிறுவனம் அறிவித்த செய்தி குறிப்பு குறித்து பார்க்கலாம் உணவு விநியோகம் செய்துவரும் சொமாட்டோ மற்றும் டன்சோ நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே ஆவின் பால் விநியோகிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vodafone அதிரடி இரட்டிப்பு திட்டம்: தினசரி 4 ஜிபி மொத்தம் 168 ஜிபி., அதே விலையில்!Vodafone அதிரடி இரட்டிப்பு திட்டம்: தினசரி 4 ஜிபி மொத்தம் 168 ஜிபி., அதே விலையில்!

ஆவின் பால் மற்றும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட பிற பொருட்கள்

ஆவின் பால் மற்றும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட பிற பொருட்கள்

அதேபோல், ஆவின் முகவர்களுக்கான நியமன வைப்புத்தொகை ரூ.1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவின் பால் மற்றும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட பிற பொருட்களையும் பொதுமக்கள் ஆர்டர் செய்ய வாய்ப்பிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Zomato delivery of its dairy products through zomato, dunzo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X