ஆன்லைன் யோகா வகுப்பில் ஆபாச கருத்து: கொதித்தெழும் பெண்கள்- அனல் பறக்கும் ஹேஷ்டேக்!

|

ஆஷ்கா கோரடியா நடத்திய ஆன்லைன் யோகா வகுப்புகளுக்கு ஆபாச கமெண்ட்கள் குவந்த நிலையில் ஆஷ்காவுக்கு ஆதரவாக அவரது நண்பரும் நடிகையுமான ஸ்வேதா சால்வே இன்ஸ்டாவில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் நேரடி யோகா வகுப்பு

இன்ஸ்டாகிராமில் நேரடி யோகா வகுப்பு

ஆஷ்கா கோரடியா சமீபத்தில் அவரது கணவர் ப்ரன்ட் கோப்லேவுடன் இன்ஸ்டாகிராமில் நேரடி யோகா அமர்வை நடத்தியுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாவில் நேரடி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் போதே ஆபாசமான கமெண்ட்ஸ்கள் குவியத் தொடங்கியிருக்கின்றன.

யோகா வகுப்பில் இணைந்த ஸ்வேதா சால்வே

யோகா வகுப்பில் இணைந்த ஸ்வேதா சால்வே

இந்த வீடியோவில் தொலைக்காட்சி நடிகர் ஸ்வேதா சால்வே இணைந்து யோகா கற்கத் தொடங்கியுள்ளார். இருப்பினும் ஆபாசமான கருத்துகள் தொடர்ந்து குவியத் தொடங்கியதால் அவர் அந்த வீடியோவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆஷ்கா ஆர்வமாக யோகா லைவ் வீடியோ

ஆஷ்கா ஆர்வமாக யோகா லைவ் வீடியோ

இருப்பினும் ஆஷ்கா ஆர்வமாக யோகா லைவ் வீடியோவில் யோகா கற்பித்துக் கொண்டிருப்பதால் அவருக்கும் வரை கமெண்ட்ஸ்களை அவர் பார்க்கமுடியவில்லை. இந்த செயலை பார்த்த ஸ்வேதா சால்வே அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

யோகா நிகழ்ச்சியோடு எனது காலை விடிந்தது

யோகா நிகழ்ச்சியோடு எனது காலை விடிந்தது

இதனால் கோபமடைந்த ஸ்வேதா சால்வே, இன்ஸ்டாகிராமில் தனது கருத்தை எழுதியுள்ளார். " எனது நண்பரான ஆஷ்கா @ibrentgoble @apeaceofblueyoga-ல் நடத்தப்பட்ட ஒரு நேரடி யோகா நிகழ்ச்சியோடு எனது காலை விடிந்தது. ஆனால் எனது இந்த விடியலை முகத்தைக்கூட காட்டமுடியாத இன்ஸ்டா கணக்குகள் விடுத்த அருவருப்பான மோசமான பாலியல் கருத்துக்கள் பதிவிட்டு கெடுத்துவிட்டனர்.

நினைத்துக் கூட பார்க்க முடியாத விலை: Nokia 5310 ஜூன் 16 அறிமுகம்!நினைத்துக் கூட பார்க்க முடியாத விலை: Nokia 5310 ஜூன் 16 அறிமுகம்!

ஆபாச கருத்துகளை ஸ்க்ரீன் ஷாட்

ஆபாச கருத்துகளை ஸ்க்ரீன் ஷாட்

ஸ்வேதா சால்வே பாலியல் கருத்துகள் மற்றும் ஆபாச கருத்துகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அந்த கணக்குகள் குறித்து புகாரளித்தார். அதோடு ஸ்வேதா சால்வே #ignorenomore என்ற தலைப்பில் ஒரு ஹேஷ்டேக் தொடங்கி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

சத்தமாக பேச வேண்டிய நேரம்

சத்தமாக பேச வேண்டிய நேரம்

அதோடு சத்தமாக பேச வேண்டிய நேரம் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று இந்த ஹேஷ்டேக்கை உருவாக்கிய சால்வே தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவருடன் தொலைக்காட்சி துறையை சேர்ந்த சக ஊழியர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களை முற்றிலும் அழைக்க வேண்டும்

அவர்களை முற்றிலும் அழைக்க வேண்டும்

இதையடுத்து பெயர் தெரியாத முக்காடு அவர்களின் ஆயுதம்! நாம் அனைவரும் அவர்களை முற்றிலும் அழைக்க வேண்டும்! இங்கே உங்களுக்கு @aashkagoradia. நான் உங்களுடன் நிற்கிறேன்! நான் #IgnoreNoMore #LetsLiftEachOther என ஹினாகான் என்பவர் பதிவிட்டுள்ளார். இதேபோல் பலரும் தங்களது ஆதரவு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஸ்வேதா அளித்த பேட்டி

இதுகுறித்து Etimes-க்கு ஸ்வேதா அளித்த பேட்டியில், சைபர் கிரைம் அதிகாரிகளிடம் இதுகுறித்து தொடர்பு கொண்டுள்ளதாகவும், தனது நண்பருக்கு மோசமான கருத்துகளை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறினார்.

ஆபாசக் கருத்துகள் தொடர்ந்து பதிவு

ஆஷ்கா யோகா கற்றுக் கொண்டிருக்கிறார்., அந்த நேரம் முழுவதும் ஆபாசக் கருத்துகள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகிறது. அந்த நேரத்தில் கமெண்ட்கள் குறித்து எதுவும் அறியாத ஆஷ்கா யோகா கற்றுக் கொடுப்பதில் கவனமாக தெளிவாக இருக்கிறார். இதுகுறித்து சைபர் பிரிவினரிடம் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது

நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது

சமூக ஊடக கொடுமைப்படுத்தல் நிறுத்தப்பட வேண்டும், பெயர் முகம் காட்டாமல் மறைந்துக் கொண்டு கருத்துகளை பதிவிடும் நபர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் இது. இப்போதே இந்த நிலை என்றால் என் குழந்தைகளின் காலத்தில் இது எந்த நிலையில் இருக்கும் என்று நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது என ஸ்வேதா வருத்தம் தெரிவித்தார். அதோடு இப்போத சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பின் எப்போது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

source: indiatimes.com

Best Mobiles in India

English summary
Aashka Goradia’s instagram online yoga class get obnoxious and sexual comments: shveta salve and more support her with ignorenomore

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X