கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை: ஆரோக்கியபாத் இணையதளம் அறிமுகம்- எதற்கு தெரியுமா?

|

கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையாக ஆரோக்கியபாத் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் கிடைக்கக்கூடிய சுகாதாரப் பொருட்களை இதன்மூலம் வாங்கலாம். இதன்முழு விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

கோவிட்-19 தொற்று நோய்

கோவிட்-19 தொற்று நோய்

கோவிட்-19 தொற்று நோய் வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்து அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்பொது கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கும் இணையதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் உச்சம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் உச்சம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் உச்சம் தொடும் காலக் கட்டத்தை இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சிலின் குழு ஆய்வு நடத்தி அறிவித்துள்ளது. இதில் இந்திய பிறக்கப்பட்டிருக்கும் ஊரடங்கானது உச்சத்தை தொடுவதற்கு 34 நாட்களில் இருந்து 74 நாட்களாக தாமதப்படுத்தியுள்ளது.

சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா?சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தற்போதுவரை கொரோனா பாதிப்பு 3,32,424 ஆக அதிகரித்துள்ள நிலையில், 9520 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றை தடுக்க மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதை தடுப்பதற்கு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மத்திய அரசு தரப்பில் ஆரோக்கிய சேது

மத்திய அரசு தரப்பில் ஆரோக்கிய சேது

முன்னதாக மத்திய அரசு தரப்பில் ஆரோக்கிய சேது என்ற ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொடர்புடையவர்களை கண்டறிய பெரிதளவு உதவியது. இந்த நிலையில் தற்போது ஆரோக்கிய பாத் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் நேர்மறையான வழக்குகள்

அதிகரித்து வரும் நேர்மறையான வழக்குகள்

கொரோனா தொற்றுநோய் குறித்து அதிகரித்து வரும் நேர்மறையான வழக்குகளை எளிதாக்க பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இணைய அடிப்படையிலான தீர்வாக ஆரோக்கியபாத் போர்ட்டலை மத்திய அரசு இப்போது உருவாக்கியுள்ளது.

ஆரோக்கிய பாத் போர்டல் முக்கிய நோக்கம்

ஆரோக்கிய பாத் போர்டல் முக்கிய நோக்கம்

ஆரோக்கிய பாத் போர்டல் தொடங்கப்பட்டதின் முக்கிய நோக்கம் அத்தியவசிய ஒன்று சுகாதாரப் பொருட்களாகும். பல அத்தியவசிய பொருட்கள் தேவையுள்ள இடத்தை அடையவில்லை, அதேபோல் இதை வழங்குவதில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்தது.

முக்கியமான சுகாதாரப் பொருட்கள்

இந்த ஆரோக்யபாத் போர்டல் நிகழ்நேரத்தில் முக்கியமான சுகாதாரப் பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும். இது இந்தியா முழுவதும் உள்ள சுகாதார அத்தியாவசிய உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச்

கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச்

‘ஆரோக்கிய பாத்' என்ற இணையதளத்தை கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் (சி.எஸ்.ஐ.ஆர்) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் தேசிய அளவிலான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்திய அரசாங்கத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஆரோக்யபாத் போர்ட்டலை ஒரு பொது தளமாக ஒருங்கிணைத்து வருகிறது.

நோயாளிகளின் தேவையை பூர்த்தி செய்யவதே நோக்கம்

நோயாளிகளின் தேவையை பூர்த்தி செய்யவதே நோக்கம்

மருத்துவமனைகள், ஆய்வகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நோயாளிகளின் தேவையை பூர்த்தி செய்யவதை நோக்கமாக கொண்டு இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரோக்கியபாத் போர்ட்டல் பொதுமக்கள் உட்பட அனைவருக்கமான பொது போர்டல் ஆகும்.

சுஷாந்த் சிங் தீராத கனவுகள்., இதுதான்!சுஷாந்த் சிங் தீராத கனவுகள்., இதுதான்!

உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்

வாடிக்கையாளர்களைத் தவிர, உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்களும் புதிய ஆரோகபாத் போர்ட்டலில் இருந்து பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் இப்போது அருகிலுள்ள நோயியல் ஆய்வகங்கள், மருத்துவ கடைகள், மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார தொடர்பான தளங்கள் வழியாக வாடிக்கையாளர்களை திறம்பட அணுகலாம்.

நாடு முழுவதும் சுகாதாரப் பொருட்கள்

மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உடைகள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள ஆரோக்கியபாத் உதவும். சி.எஸ்.ஐ.ஆர் இந்த புதிய போர்ட்டல் வழியாக நாடு முழுவதும் சுகாதாரப் பொருட்களின் கிடைக்கும் தன்மை மற்றும் மலிவுத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள்

அத்தியாவசிய பொருட்கள்

- மருத்துவ உபகரணங்கள்.
- தொற்று கண்டறியும் கருவிகள் மற்றும் பாகங்கள்.
- மருந்துகள்.
- தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ).
- சுவாச உதவி சாதனங்கள்.
- புரோஸ்டெடிக்ஸ் மற்றும் ஆர்தோடிக்ஸ்.
- பாதுகாப்பு தொடர்பான ஆடை
- முதன்மை மருத்துவ பொருட்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார பொருட்கள். www.aarogyapath.in என்ற இணையதளத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்களை அனைவரும் வாங்க முடியும் அதேபோல் இந்த இணையத்தின் மூலம் அதிக விலைக்கு விற்பதை தடுக்க முயலும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Aarogyapath portal launched: National healthcare supply chain

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X