அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்.! மத்திய அரசு அறிவிப்பு.!
கொரொனா தொற்றுநோய் உலகில் அதிகளவு பாதிப்பு ஏற்படுத்தி விட்டது என்றுதான் கூறவேண்டும், மேலும் இந்த கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.

மேலும் டெக்னாலஜியின் பங்கு மிக முக்கியமானது என்றுதான் கூறவேண்டும், அதன்படி அரசு அறிவிக்கும் தகவல்களையும்மருத்துவர்கள் கூறும் உடல்நல ஆலோசனைகளையும் இந்த ஊரடங்கில் நம்மிடம் எளிதில் கொணடுவந்து சேர்க்கிறது.

கொரோனா பரவலைத் தடுக்க இந்திய அரசங்கத்தால் வெளியிடப்பட்ட செயலிதான் ஆரோக்கிய சேது, தற்போது இந்த ஆரோக்கிய சேது செயலி இந்தியாவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டு வரும் செயலிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த செயலி மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்ட 13நாள்களுக்குள் 5கோடிக்கும் அதிகமானோர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இந்த ஆரோக்கிய சேது செயலி GPS மற்றும் Bluetooth-ன் சேவையைக் கொண்டு செயல்படுவதால், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இதே செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்கள் தகவல்களைக் கொடுத்திருந்தால், அதுவும் ஒரே இடத்தில் பதிவாகியிருக்கும். இதன்மூலம் மற்ற நபர்கள் அருகில் செல்லும்போது எச்சரிக்கை செய்கிறது.

இந்நிலையில், இந்த செயலியை எவ்வளவு அதிகமாக மக்கள் பயன்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு, இனி புதிதாக உருவாக்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

தற்சமயம் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தயாரிப்பை நிறுத்திவைத்திருக்கும் நிலையில், மீண்டும் தயாரிப்பை தொடங்கும்போது இந்த அறிவிப்பைக்கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுவரை பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில்,
தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இன்றியமையாத ஒரு கருவியாக இது இருக்கும்.

பின்பு இந்த செயலியின் பயன்பாடு வருங்காலத்தில் இ-பாஸாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்கும் உதவும்
என்று கூறப்படுகிறது, கோரோனா பரவுவதைத் தடுக்க ஆரோக்கிய சேது செயியை பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் வலியுறுத்திவருகிறார். இந்த வார துவகத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடனான சந்திப்பில் ஆரோக்கிய சேது செயலியைப் பிரபலப்படுத்துவது பற்றி ஆலோசனையும் மேற்கொண்டார் பிரதமர்.

தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் எவ்வாறு இதேபோன்ற செயலிகளின் உதவியோடு வெற்றிபெற்றன என்பதையும் அவர் குறிப்பிட்டார். மேலும் மத்திய அரசின் முதல்நிலை முதல், கடைநிலை ஊழியர்கள் வரை இச்செயலியைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள மத்திய
தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அலுவலகத்துக்கு வருமுன் செயலியில் 'safe' (பாதுகாப்பு) அல்லது 'low risk' (குறைந்த ஆபத்து) என்பதை காட்டுவதை உறுதி
செய்த பின்னரே அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications